21 Sep 2019 8:39 amFeatured
மும்பையிலிருந்து சு.குமணராசன் பங்கேற்பு.
பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளை, மொரிசியசு மற்றும் ஆசியவியல் ஆய்வு நிறுவனம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாம் திருக்குறள் மாநாடு எதிர் வரும் செம்டம்பர்
23, 24, 25 ஆகிய நாட்களில் இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறவுள்ளது. புது தில்லியில்அமைந்துள்ள யுனெஸ்கோ நிறுவன கலையரங்கில்இம்மாநாடு நடை பெறுகிறது.
இம்மாநாட்டில் மேனாள் மொரிசியசு அமைச்சரும்,பன்னாட்டுத் திருக்குறள் அறக்கட்டளைத் தலைவருமானபேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் வரவேற்புரையாற்றுகிறார். மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஜி. ஜாண் சாமுவேல் உரையாற்றுகிறார்.
அமைச்சர் கே. பாண்டியராஜன்
மாநாட்டில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன், யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் டாக்டர் எரிக் பால்ட், மாநிலங்களவை உறுப்பினர் இல. கணேசன், ஹாங்காங்கில் இயங்கி வரும் சர்வதேச நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டென்னிஸ், விஜிபி குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவப்பிரகாசு மாநாட்டின் திறவுரையாற்றுகின்றார்.
பன்னாட்டு அறிஞர்கள்
மாநாட்டில் சிங்கப்பூர், சீனா, மலேசியா, இலங்கை,இந்தியா, மொரிசியசு, இலண்டன், கனடா போன்ற நாடுகளிலிருந்து ஐம்பதிற்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்ளும் பதினைந்து ஆய்வரங்கங்களும் திருக்குறள் குறித்து நடை பெறுகின்றன.
மும்பையிலிருந்து
மும்பையிலிருந்து இலெமுரியா அறக்கட்டளை நிறுவனரும்,
தமிழ் இலெமுரியா முதன்மை ஆசிரியருமான சு. குமணராசன் கலந்து கொண்டு “திருக்குறளில் மனித உரிமை மற்றும் சமனியக் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்குகின்றார்.
மாநாடு நிறைவு விழாவில் டாக்டர் செல்லப்பன், டாக்டர் டென்னிஸ், டாக்டர் சந்திரிகா சுப்பிரமணியன், பேராசிரியர் அபு கோடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிறைவு செய்கின்றனர்.
தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் டி. உமாதேவி நன்றியுரையாற்றுகின்றார்.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் உமாதேவி,
திருமதி ராகினி கபூர் ஆகியோர் ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர்.