14 Feb 2021 11:11 amFeatured
கவிஞர் பிரபு முத்துலிங்கம்
மும்பை
தாய்க்கு குழந்தை மீது காதல்
தகப்பனுக்கு குடும்பம் மீது காதல்
உறவுக்கு சொந்தம் மீது காதல்
நண்பனுக்கு உரிமை மீது காதல்…
உழவனுக்கு பயிர் மீது காதல்
ஆசிரியருக்கு எழுத்தின் மீது காதல்
பட்டதாரிக்கு வேலை மீது காதல்
விஞ்ஞானிக்கு ஆராய்ச்சி மீது காதல்…
மருத்துவருக்கு சுத்தம் மீது காதல்
சட்டத்திற்கு நீதி மீது காதல்
பொறியாளருக்கு வடிப்பின் மீது காதல்
காவலருக்கு ஒழுக்கம் மீது காதல்…
அரசுக்கு வாக்கு மீது காதல்
அரசியல்வாதிக்கு பொய் மீது காதல்
வியாபாரிக்கு பணம் மீது காதல்
மீனவருக்கு கடல் மீது காதல்…
கவிக்கு கற்பனை மீது காதல்
துளிர்மீசைக்கு முகப்பரு மீது காதல்
முயற்சிக்கு வெற்றி மீது காதல்
உயிருக்கு உடல் மீது காதல்…
ஆதலால்
காதலால் காதலியுங்கள்…!!!