Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

தேவதாசன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் தி.மு.க சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொள்கிறார். -அலிசேக் மீரான் இரங்கல் அறிக்கையில் தகவல்

06 Nov 2019 6:58 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் இரங்கல் அறிக்கை

       மும்பை புறநகர் தி.மு.க மேனாள் அவைத்தலைவரும்  ,  கழகத்தின் மூத்த முன்னோடியும், பம்பாய்த்  திருவள்ளுவர் மன்றத்தின் நிறுவனருமாகிய தேவதாசன் அவர்கள் 5.11.2019 செவ்வாய் அன்று மாலை 7.00 மணியளவில் காலமானார்.

மும்பையில் வாழ்ந்து வந்த  தேவதாசன் அவர்கள் நெல்லை மாவட்டம் , இலங்குளத்தில் 02.09.1923 இல் பிறந்தார்.
இளம் வயதிலேயே கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மும்பையில் கழகம் வளர்த்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்தார்.   மும்பை கழக முன்னோடிகள் தியாகராஜன், பொற்கோ, ஆரிய சங்காரன், பொ.அப்பாத்துரை  ஆகியோர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றிய திராவிட இயக்கச் சிந்தனையாளர் ஆவார். மும்பையில் 2500 மாணவ,மாணவியர் பயிலும் பள்ளியை நடத்தி வந்தவர் என்பதுடன்  தமிழ் வழிக் கல்வியை மும்பையில் அடுத்தக்கட்டத்திற்கு  எடுத்துச் சென்றவர் என்பதால் மும்பைத் தமிழர்களால் '"கல்வித் தந்தை''  என அன்புடன்  அழைக்கப்படுபவரும் ஆவார்..

                      பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகனார், கி.ஆ.பெ.விஸ்வநாதம் என கழகத் தலைவர்கள், தமிழறிஞர்கள் அனைவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் . இலக்கிய நிகழ்ச்சிகள், கழக நிகழ்ச்சிகள் என்று தாய்த்  தமிழுக்கும் , கழகத்திற்கும் அருந்தொண்டாற்றியவர்.

தலைவர் முத்தமிழறிஞர்  கலைஞர்  அவர்கள் எழுதிய குறளோவியம் நூலை இந்தியில் மொழிபெயர்த்து பீகார் தலைநகர் பட்னாவில் வெளியிட்டு  தமிழுக்கும்,வள்ளுவத்திற்கும் சிறப்பு சேர்த்தார்.  2017 ஆம் ஆண்டு கழகத் தலைவர் தளபதி அவர்களை அழைத்து திருவள்ளுவர் சிலையை மும்பையில் திறந்தவர்.  தேவதாசன் அவர்களின் தமிழ்த் தொண்டையும், கழகப் பணிகளையும் பாராட்டி தலைமைக் கழகம் 2018 ஆண்டு கழக முப்பெரும் விழாவில் "தந்தைப்  பெரியார் விருது" வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும் .         

அன்னைத் தமிழுக்கும் , திராவிட இயக்கத்திற்கும் தன்  வாழ்நாள் முழுதும் தொண்டாற்றிய பெருமகனார் தேவதாசன் அவர்களின் இழப்பு மும்பைத் தமிழருக்கு மட்டுமின்றி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும் , அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், கழகத்தோழர்களுக்கும் , மும்பைத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று மும்பை புறநகர் மாநில தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டி .கே.எஸ். இளங்கோவன் கலந்துகொள்கிறார்

மேலும் அந்த அறிக்கையில்  தேவதாசன் அவர்களின் இறுதி ஊர்வலம் 07.11.2019 சனிக்கிழமை 10.00 மணிக்கு பாண்டுப் பிரைட் ஆங்கில உயர்நிலைப் பள்ளித்  திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டு பின்னர் அங்கிருந்து இறுதி ஊர்வலம் தொடங்கி பவாய் ஹோலி டிரினிட்டி கிறித்துவ கல்லறை தோட்டத்தில் இறுதி மரியாதை  நடைபெறும். அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் திராவிட முன்னேற்ற தலைமைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் செய்திதொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான
டி .கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்துகிறார் என்றும்  தெரிவித்துள்ளார்

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

095788
Users Today : 3
Total Users : 95788
Views Today : 6
Total views : 415156
Who's Online : 0
Your IP Address : 3.133.141.137

Archives (முந்தைய செய்திகள்)