15 Oct 2020 12:09 amFeatured
வருகிற 18-10-2020 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஸூம் செயலி வழியாக மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவும் காலஞ்சென்ற திரையிசை மேதைகளின் நினைவலைகள் என்ற நிகழ்ச்சியும் மன்றத்தின் செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெறவுள்ளது.
மன்றப் பேச்சாளரான கவிஞர் பிரவினா சேகர் வரவேற்புரையாற்ற மன்றத்தின் ஆலோசகரும் ஐ.டி.பி.ஐ வங்கியின் துணைப் பொது மேலாளருமான டாக்டர் ஜி.வி.பரமசிவம் தொடங்கி வைக்கும் நிகழ்வில் நடுவணரசின் இந்திய அணுமின்துறையைச் சார்ந்த நியூக்ளியர் பவர் கார்பரேசன் நிறுவனத்தின் பொது மேலாளர் சு.மு.முகமது மன்சூர் பி.ஈ.எம்.பி.ஏ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.
அறிவியலறிஞர் கலாம் அவர்களின் பிறந்தநாள் சிறப்புரை அறிவியல் சார்ந்த நிறுவனத்தின் பொது மேலாளர் ஒருவர் சிறப்புரை ஆற்றுவது மெத்தப் பொருத்தமான ஒன்றாகும். அதோடு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புச் சேர்த்த அனைத்து அன்பர்களுக்கும் பி.ஏ.ஆர்.சி (Bharat Automatic Research Corporation) நிறுவன விஞ்ஞானியும் அணுசக்திநகர் கலைமன்றத்தின் தலைவருமான ந.கனகசபை அவர்கள் நன்றி கூறி விழாவை நிறைவு செய்வது கலாம் அவர்களுக்குச் செய்யும் மற்றுமொரு சிறப்பாகவே கருதத்தக்கது.
இசை நிகழ்ச்சி
நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வாக தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவும் டி.எம்.எஸ்.நரசிம்மன் இசைக்குழுவும் இணைந்து வழங்கும் - "திரையிசை மேதைகளின் நினைவலைகள்" என்ற பெயரில் இசைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
(டி.எம்.எஸ்)எம்.என்.நரசிம்மன், ஆர்.டி.இராசன்(கீபோர்ட்), சாய்முரளி, ராணிச்சித்ரா, அலி(கீபோர்ட்), சங்கர் (தபலா) போன்ற இசைக்குழுவினர் நிகழ்வில கலந்துகொண்டு பாடல்களை வழங்க உள்ளனர்.
நிகழ்வில் அனைத்துப் புரவலர்கள், ஆலோசகர்கள், அங்கத்தினர்கள் மற்றும் உலகெங்கும் அப்துல் கலாம் அவர்களின் மேல் பற்றுள்ள அனைத்து உணர்வாளர்களும் திரையிசை அன்பர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
மேலும் அனைத்துத் தமிழுறவுகளும் நிகழ்வில் கலந்துகொண்டு இன்புறும்படி மன்றத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக மன்றத்தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கேட்டுக் கொண்டுள்ளார்.
நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துகள் ஐயா
நன்றி