Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அறிவியல் சிந்தனை வளர்ப்போம்-1

20 Dec 2024 10:57 pmFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!

சூரிய குடும்பம் என்றால் என்ன?

சூரிய குடும்பம் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் சூரியனையும், சூரியனை சுற்றியுள்ள கோள்களையும் சூரியக் குடும்பம் என அழைக்கின்றனர். சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன.  1. புதன் (Mercury), 2. வெள்ளி (Venus), 3. பூமி (Earth), 4. செவ்வாய் (Mars), 5. வியாழன் (Jupiter), 6. சனி (Saturn), 7. யுரேனஸ் (Uranus), 8. நெப்டியூன் (Neptune) இந்த எட்டு பெரிய கோள்களும், புளூட்டோ உள்பட சிறிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.

அறிவியலும் சோதிடமும்

எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிதறிய பகுதியே நாம் வாழ்கின்ற பூமி. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது. சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப் பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம் தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல.  சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். அறிவியலில் சூரியனை சுற்றும் ஒன்பது கோள்களில் இந்த இரண்டு கோள்கள் ராகு மற்றும் கேதுவும் இடம்பெறவில்லை.  உண்மையில் இவை இரண்டும் நிழல் கோள்கள் என அழைக்கபடுகிறது.

பூமி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது அதேபோல சந்திரன் பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. சந்திரனுடைய நீள்வட்டப்பாதை பூமியின் நீள்வட்டப்பாதையை இரண்டு இடத்தில் சந்திக்கிறது. சந்திரன் தெற்கிலிருந்து வடக்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும், வடக்கிலிருந்து தெற்காக செல்லும் போது ஒரு புள்ளியிலும் சந்திக்கிறது.  வடக்கு சந்திப்புக்கு இராகு என்றும், தெற்கு சந்திப்புக்கு கேது என்றும் பெயர்.   மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

இந்த புள்ளிகள்தான் சந்திரகிரகணத்தையும், சூரியகிரகணத்தையும் ஏற்படுத்துகிறது.  இப்படி சூரியகிரகணக்காலத்தில் சூரியனுக்கும்,புமிக்கும் இடையே சந்திரன் வருகிறது.  இது நமக்கு சூரியன் மீது நிழல் விழுவது போல தோன்றும்.  அக்காலத்தில் இந்த நிகழ்வை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவது போல சித்தரித்தனர்.  இந்த நிகழ்வுக்கு காரணமான ராகுவையும் மற்றும் கேதுவையும் பாம்பாக சித்தரித்தனர்.

ஒரு இராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 145 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 5.37 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 12.0 கோடி பேர் ஒரே இராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமைய வேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி பூமி 14.96 கோடி, செவ்வாய் 22.79 கோடி,  வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.   

நட்சத்திரங்களின் தொலைத் தூரம் குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு (Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

அறிவியல்  ஆய்வில்  செவ்வாய்க்  கோள்

செவ்வாய் (Mars) சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு  கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.  இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான  புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.  இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்ஸைடு   இக்கோளைச்  செந்நிறமாகக் காட்டுகிறது.இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான   இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போல் கிண்ணக் குழிகளையும்   புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள் பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.

சூரியனின் நான்காவது கோளான செவ்வாய் சராசரியாக 142 மில்லியன் மைல் தொலைவில் சுற்றி வருகிறது. பூமிக்கு அதன் அருகாமை மற்றும் தனித்துவமான சிவப்பு தோற்றம் இரவு வானத்தில் எளிதாகக் காணக்கூடியதாக உள்ளது. சூரியனிலிருந்து  227.94 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் (141.6 மில்லியன் மைல்) செவ்வாய் கிரகம் சுற்றுகிறது.. பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையிலான தற்போதைய இடைவெளியான 54.6 மில்லியன் கிலோ மீட்டர்கள்  கிலோ மீட்டர். செவ்வாய் கோள்  சூரியனை சுற்றி வலம் வர 687 நாட்கள் ஆகிறது.  மேலும் இந்த ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையை விட 0.375 தான் உள்ளது.  பூமியின் அளவில் பாதியாக இருக்கும் இந்த செவ்வாய் கோள் மேற்கில் இருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுழல 24.6  மணி நேரமும் ஆகிறது. செவ்வாய்  கோளிற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் என்ற இரண்டு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன. இந்த கோளில் மனிதர்கள் வாழ்வதற்கான ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்று பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகிறது.   

26 மாதங்களுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாய் கிரகமும் அருகருகே வந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒன்றாக பயணிக்கும். பிறகு மீண்டும் செவ்வாய் கிரகம் தனது சுற்றுப்பாதைக்கு திரும்பி தொடர்ந்து சூரியனை சுற்றி வரும்.   செவ்வாய் அதன் தீவிர தூசி புயல்கள் சில முழு கிரகத்தையும் சூழ்ந்துவிடும். இந்தப் புயல்கள் மாதக்கணக்கில் நீடிக்கும், நிலப்பரப்பை மறைத்து, சுற்றுப்பாதையில் உள்ள எந்த விண்கலத்தின் சோலார் பேனல்களையும் பாதிக்கும். பூமியில் சிறிய சூறாவளியைப் போன்ற தூசி பிசாசுகள் செவ்வாய் கிரகத்திலும் காணப்படுகின்றன.

விண்கலம் நம் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்ல சுமார் 24,600 மைல் சுமார் 39,600 கிமீ வேகத்தில் செல்லும். அப்படி செவ்வாய் கிரகத்திற்கு செல்ல சுமார் 7 மாதங்கள் ஆகும். அதேபோல் சுமார் 300 மில்லியன் மைல்கள் (480 மில்லியன் கிலோமீட்டர்) எடுக்கும்.

(நாசாவிடமிருந்து செவ்வாய் 2020 விண்கலம் செல்ல கருவூர் இரா. பழனிச்சாமி பெற்ற அனுமதிச்  சீட்டு)

செவ்வாய் கிரக ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக ரோவர் பெர்சவரன்ஸ், (Rover Perseverance) இப்போது ஓய்வு பெற்ற சிறிய ரோபோ ஹெலிகாப்டர் இன்ஜெனுயிட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய விநியோக அமைப்புகளை உள்ளடக்கிய நாசா பணி ஆகும். மார்ஸ் 2020 அட்லஸ் வி ராக்கெட்டில் ஜூலை 30, 2020 அன்று ஏவப்பட்டது, மேலும் பிப்ரவரி 18, 2021 அன்று செவ்வாய் கிரக பள்ளமான ஜெஜெரோவில் தரையிறங்கியது, மார்ச் 5, 2021 அன்று, நாசா தரையிறங்கும் தளத்திற்கு ஆக்டேவியா ஈ. பட்லர் லேண்டிங் என்று பெயரிட்டது.

 செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளனவா? உயிர்கள்  வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய ஆதாரங்களை நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் (Rover Perseverance) சேகரிக்கத் தொடங்கியுள்ளது.  (18 மே 2022)

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அங்கே அனுப்பப்பட்டிருக்கும் நாசாவின் நடமாடும் ஆய்வுக்கலமான ஆப்பர்டியூனிடி (Opportunity) புதிய சாதனை படைத்திருக்கிறது. நாசா விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை முறியடித்து 40 கிலோமீட்டர் தூரம் வரை இந்த ஆய்வுக்கலம் வெற்றிகரமாக பயணித்திருப்பது மிகப்பெரிய சாதனை என்கிறது நாசா நிறுவனம்.  கடந்த பத்து ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் பயணம் செய்துவரும் இந்த நடமாடும் ஆய்வுக்கலமானது, செவ்வாய் கிரகத்தில் முன்பு நீர் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டுபிடித்திருப்பதுடன் தனது ஆய்வுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின்  மங்கள்யான்  விண்கலம்  

செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா முதல் முயற்சியில் மங்கள்யான் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் அனுப்பிய பெருமையும் இந்தியாவை சாரும். இந்த விண்கலத்தை அனுப்புவதற்கான செலவு 75 மில்லியன் டாலர்ஸ் தான். கிராவிட்டி என்ற படத்தை  எடுத்த செலவை விட இந்த விண்கலத்தை அனுப்பிய செலவுகள் குறைவுதான்.   இப்போது MARS ONE என்ற ஆய்வு திட்டப்பணி (Project) செயல்படுத்த உள்ளார்கள். செவ்வாய் கிரகத்துக்கு 1,00,000 லட்சம் பேர்கள் செல்வதற்காக கையெழுத்து  போட்டு உள்ளார்கள்.

(தொடரும்)

You already voted!
3.6 5 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097971
Users Today : 15
Total Users : 97971
Views Today : 24
Total views : 419450
Who's Online : 0
Your IP Address : 3.145.166.178

Archives (முந்தைய செய்திகள்)