25 Jan 2022 10:07 amFeatured
23.01.2022 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு சங்க பொதுப் பேரவை கூட்டம் (AGM) சமாஜ் மந்திர் அரங்கு, ஹேந்திரபாடா, பத்லாபூர் மேற்கு என்ற முகவரியில் தலைவர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ச. அருணாச்சலம் முன்னிலையில் இணைச்செயலாளர் தே. எபிநேசர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பத்லாபூர் தமிழர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் – 2022 முதல்
அமைப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, தலைவர் ச. அருணாச்சலம், துணைத்தலைவர் பா. பரமசிவன், செயலாளர் தே. எபிநேசர், இணைச்செயலாளர்கள் ஜெயந்தி சிவானந்த், எஸ். கோவிந்தராஜ், பொருளாளர்
ச. மா. குமார், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக அ. அகஸ்டின், மீனாட்சி வெங்கட்ராமன், டி.வெங்கடேசன், கணேஷ் கண்ணன் ஆகியோரும் ஆலோசர்களாக ஜே.எட்வர்ட், சரோஜா உதயகுமார், ஜான் கேப்ரியல் மேற்கண்ட அனைவரும் ஒருமனதாக பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பேரவையில் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையரகம் மூலம் புலம் பெயர்ந்த தமிழர் நலன், தமிழ் மொழி வளர்க்கும் சீரிய திட்டம் வகுத்துள்ள தமிழ் நாடு மாண்புமிகு முதல்வர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் பத்லாபூர் தமிழர் நலச்சங்கம் பொதுப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.
மும்பையில் பல்வேறு மாநிலங்களின் பவன்கள் இருப்பது போன்று "தமிழ்நாடு நிலையம்" அமைய தமிழக அரசு முழு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அதன் மூலம் மராத்திய மண்ணில் வாழும் தமிழர்களின் வாழ்வியலுக்கு உதவிடவும், இலக்கிய ஆர்வத்தை ஊக்குவித்து தமிழ் மொழி வளர்க்கும் தளமாகவும் அமைய வேண்டும். தமிழ் வழிக் கல்வி பயில உரிய நடவடிக்கை செய்ய வேண்டும்.
மகாராஷ்டிர அரசு மூலம் தமிழர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவது, மராத்திய மாநிலத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் தமிழ் நாடு கல்லூரிகளில், கல்வி நிலையங்களில் எளிதில் சேரவும், தமிழ் நாடு அரசு பணிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும், தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் எளிதில் பெறவும் ஆவன செய்ய வேண்டும்.
வெளி மாநிலங்களிருந்து மீண்டும் தமிழகத்திற்கு குடிபெயரும் தமிழர்களுக்கு வீடு கட்ட, சிறுகுறு தொழில்கள் தொடங்க கூட்டுறவு வங்கி கடனுதவிக்கும் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்.
பேரவையில் கே. சாமுவேல், ஜி. சிவானந்த், முனைவர் ஜோதி ஜே. தாஸ், எம். வெங்கட் சுப்ரமணியன், ஏ.மணி, ஜான் கேப்ரியல், எஸ்.வேலன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் துணைத்தலைவர் பா.பரமசிவன் நன்றி கூற இனிதே நிறைவுற்றது.