21 Dec 2022 12:19 pmFeatured
போடி காமராஜ் சிறப்புரையாற்றினார்
மும்பை மாநகர் தி.மு.க. சார்பில் தி,முக மேனாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, தாராவி தலைமை பணிமனை, கலைஞர் மாளிகையில் 19.12.2022 அன்று மாலை 7.00 மணியளவில் பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி தலைமையில், இனமானப் பேராசிரியர் அன்பழகனார் திருவுருவப் படத்தை மாநகர் திமுக மூத்த தலைவர் என்.வி சண்முகராசன் அவர்கள் திறந்து வைத்தார். மும்பை மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந. வசந்தகுமார், கழகக் கொடி ஏற்றினார்.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர், போடி காமராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். மும்பை புறநகர் திமுக. செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநகர் திமுக. அவைத்தலைவர் வே.ம. உத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வக்கோலா கிளை செயலாளர் சேலம் மா. சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகம், மும்பை தலைவர் பெ. கணேசன், மும்பை பகுத்தறிவாளர் கழகம், தலைவர், அ. இரவிச்சந்திரன், மும்பை மாநகர் திமுக. மூத்த தலைவர் பணகுடி மா. சண்முகவேல், மும்பை புறநகர் துணைச்செயலாளர் இளங்கோ அப்பாதுரை,
மும்பை புறநகர் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், மும்பை புறநகர் இலக்கிய அணி தலைவர் வே. சதானந்தன், மும்பை புறநகர் இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜைனுலாபுதீன், டோம்பிவிலி கிளை செயலாளர் வீரை சோ. பாபு, மும்பை திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் க. மூர்த்தி,
மும்பை மாநகர் திமுக துணைச்செயலாளர், இடையன்குளம் எஸ்.பாஸ்கர், மும்பை திராவிடர் கழகப் பொருளாளர் கண்ணன், தாராவி கிளை பொருளாளர் அலி முகமது, கழக அலுவலக பொறுப்பாளர், க. இராஜன், அமரன் உத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து
தமிழக திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துகளும்,
அலிசேக் மீரான் அவர்களுக்கு வாழ்த்து
புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் உறுப்பினராக அலிசேக் மீரான் அவர்கள் பெயர் அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், அ. மீரான் அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்துகளும் மும்பை மாநகர் கூட்டத்தில் தெரிவித்த போது பலத்த கரவொலியுடன் வாழ்த்து தெரிவித்தனர். பல்வேறு அமைப்புத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தாராவி கிளை செயலாளர் ஸ்டீபன் ராஜ் நன்றி கூறினார்.