08 Sep 2019 12:25 amFeatured
சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் உடன் எப்படி தொடர்பு துண்டிக்கப்பட்டது, கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது. சந்திரயான் 2 நிலவில் இறங்கவில்லை.. நேற்று இரவு தூங்க சென்ற தூங்காமல் டிவி முன் இருந்த இந்தியர்கள் மற்றும் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வந்த உலகத்தவர்களுக்கும் கிடைத்த அதிர்ச்சி தகவல் இதுதான்!
ஆம் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் இறங்கவில்லை. மாறாக நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்ற சந்திரயான் 2 தொடர்பை இழந்துள்ளது. இஸ்ரோவின் இந்த சறுக்கல் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சந்திரயான் 2ல் நேற்று இரவு என்ன நடந்தது என்று ஒவ்வொரு நிலையாக பார்ப்போம்.
பாராசூட் மூலம் இறக்குவது என்பது ஒரு முறை ஆனால் இஸ்ரோவின் நோக்கம் சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை நிலவில் மிகவும் மெதுவாக இறக்குவதுதான் (Soft Landing) இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சரியாக 1.39 மணிக்கு சந்திரயான் 2 நிலவை நோக்கி இறங்க தொடங்கியது. இதன் பயண நேரம் 15 நிமிடங்கள். அதனால் சந்திரயான் 2 நிலவில் 1.54க்கு இறங்கி இருக்க வேண்டும்.
முதலில் 150 கிமீ தூரத்தில் இருந்து சந்திரயான் 2 வேகமாக நிலவை நோக்கி இறங்கியது. இதில் நான்கு எஞ்சின்கள் இருந்தது. எல்லா எஞ்சினும் மொத்தமாக இயக்கப்பட்டு வேகமாக சந்திரயான் 2 கீழே இறக்கப்பட்டது.
4 எஞ்சின் சந்திரயான் 2 வேகமாக இறக்கப்பட்டாலும் 1 கிமீ தூரம் வந்த பின் மொத்தமாக நிறுத்தப்பட்டு அதன் பின் சந்திரயான் 2 மிக மிக மெதுவாக நிலவில் தரையிறங்கும். அதன்படி சரியாக 2.1 கிமீ தூரம் வரை சந்திரயான் 2 மிக சரியாக நிலவை நோக்கி இறங்கிய சந்திரயான் அதன்பின் 1 கிமீ தூரத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சிக்னல் துண்டிப்பு
ஆனால் 2.1 கிமீ தூரத்திலேயே சந்திரயான் 2ன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது. 1 கிமீ தூரத்தை அடைந்துவிட்டதா என்று பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து விக்ரம் லேண்டர் உடன் மீண்டும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டது.
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் குழு மீண்டும் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், ஆர்பிட்டர் உடன் இஸ்ரோ தொடர்பு கொண்டது. ஆர்பிட்டர் எப்போதும் போல இஸ்ரோவுடன் தொடர்பில் இருந்தது. ஆனால் ஆர்பிட்டருக்கும் விக்ரம் எங்கே சென்றது என்று தெரியவில்லை. சரியாக 1.54 மணிக்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்துதான் விக்ரம் லேண்டர் உடன் நாங்கள் தொடர்பை இழந்துவிட்டோம். இது தொடார்பான டேட்டாக்களை ஆராய்ச்சி செய்து வருகிறோம் என்று இஸ்ரோ தெரிவித்தது.
விக்ரம் லேண்டர் என்ன ஆனது, நிலவில் இறங்கியதா? நிலவில் விழுந்து தோல்வி அடைந்ததா? சிக்கனலுக்காக காத்திருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை.
வாய்ப்பு இஸ்ரோ இப்போதும் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தீவிரமாக முயன்று வருகிறது.
விக்ரம் லேண்டர் உடன் இப்போதும் கூட தொடர்பை ஏற்படுத்த முடியும் என்று இஸ்ரோ கூறுகிறது. அதனால் இந்த திட்டம் இன்னும் முழுமையாக தோல்வி அடையவில்லை என்று இஸ்ரோ முழுமையாக நம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 2 திட்டம் வெற்றிக்கு மிக மிக அருகில் சென்று சறுக்கி உள்ளது. மிக அருகில் என்றால், 2.1 கிமீ!. ஆம் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவிற்கு அருகில் 2.1 கிமீ தூரம் வரை சென்றது. ஆனால் கடைசியில் ஏற்பட்ட தொலைத்தொடர்பு கோளாறு காரணமாக சந்திரயான் 2 உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. விக்ரம் 2 லேண்டர் எங்கே சென்றது என்றும் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. சந்திரயான் 2ல் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் இருந்தது.
வேறு நாட்டின் கருவிகளையும் சுமந்து சென்றது
ரோவர் மற்றும் லேண்டர் மட்டுமின்றி வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு சென்றது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா நாசா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு சென்றது. இவை எல்லாம் நிலவில் தரையிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதில் இஸ்ரோ சறுக்கி உள்ளது. அதேபோல் இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு சென்றது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. இது பூமிக்கும் நிலவிற்கு இடையில் உள்ள தூரத்தை கணக்கிட உதவும்.
நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரோ மூலம் மீண்டும் அந்த கருவிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இதை இஸ்ரோவால் நிலவில் டெலிவரி செய்ய முடியவில்லை
பெரும்பாலும் சந்திரயான் 2 போன்ற பெரிய திட்டங்களை செயல் படுத்தும் போது அந்நிய நாட்டு பொருட்களை (Pay Load) கொண்டு செல்ல கூடாது. அப்படி கொண்டு செல்வது அந்த மிஷனுக்கே ஆபத்தாக முடியும்.
காரணம் நாம் ஒரு குறிக்கோளுடன் கருவிகளை உருவாக்கி இருப்போம். மற்றவர்கள் வேறு மாதிரி கருவிகளை உருவாக்கி இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் நாசா போன்ற நிறுவனத்தின் கருவிகளை சந்திரயான் உடன் அனுப்புவது என்பது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இரண்டுக்கும் அது பிரச்சனை ஆகும்.
இஸ்ரோ தன்னம்பிக்கையுடன் அனுப்பியுள்ளது ஆனால் துரதிஷ்டவசமாக தற்காலிக பின்னடவை சந்தித்துள்ளது.
இப்போது அந்த நாசாவின் கருவியையும் டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்ற மர்மம் இப்போதும் நீடித்து வருகிறது.
இன்னொரு மிக முக்கியமான விஷயமும் என்னவென்றால் விக்ரம் லேண்டர் உடன் நாசா அனுப்பிய சில லேசர் கருவிகளும் இருக்கிறது எனவே இந்த மிஷன் நாசாவிற்கு மிக முக்கியமான மிஷன் ஆகும். ஆகவே நாசாவும் விக்ரமை தேட முடிவு செய்துள்ளது. நாசாவின் சில சாட்டிலைட்டுகள் ஏற்கனவே நிலவை சுற்றி வருகிறது. அதில் சில சாட்டிலைட்டுகள் நிலவை தென் பகுதிக்கு மேலாக சுற்றி வரும் நிலையில் இன்னும் சில நாட்களில் அது விக்ரம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்திற்கு மேலாக செல்லும்போது அந்த பகுதியை நாசா படம் பிடிக்க வாய்ப்புள்ளது.
செயல்பாட்டில் இருக்கும் இஸ்ரோவின் ஆர்பிட்டர்
இன்னமும் ஆர்பிட்டர் இஸ்ரோவுடன் தொடர்பில்தான் இருக்கிறது. இது நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது. அதனால் நிலவின் தென் பகுதிக்கு மேல் ஆர்பிட்டர் செல்லும் போது அது நிலவை புகைப்படம் எடுக்கும். அப்போது விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரிய வரும். விக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது என்ற உண்மை ஆர்பிட்டர் தேடலின் மூலம் தெரிய வரும்.
நம்புவோம் இஸ்ரோவின் தலைவர் சிவனும் விஞ்ஞானிகளும் தொய்வடையாமல் நம்பிக்கையுடன் செயல்பட வாழ்த்துவோம்