22 Jun 2020 9:14 pmFeatured
மார்ச் 15 அன்று நடைபெறவிருந்த கருத்தரங்க நிகழ்வு கொரோனாத் தொற்று லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அதே நிகழ்வு ZOOM APP மூலம் நேற்று 21.06.2020 ஞாயிறு மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 வரை நடந்தது.
இக் கருத்தரங்கம் மன்றச் செயலாளர் அமலா ஸ்டேன்லி தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமர்வாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில்:
முதல் அமர்வு
முதல் அமர்வில் சகோதரியின் பெருமை என்ற தலைப்பில் லட்சுமி மகேஸ், மகளின் பெருமை என்ற தலைப்பில் கலைச்செல்வி, ஆசிரியர் பெருமை என்ற தலைப்பில் அனிதா அருணாச்சலம், இலக்கியத்தில் பெருமை என்ற தலைப்பில் யாமினிஸ்ரீ குணசேகரன் ஆகியோரும்
இரண்டாம் அமர்வு
இரண்டாம் அமர்வில் தாயின் பெருமை என்ற தலைப்பில் செல்வி ராஜ், மனைவியின் பெருமை என்ற தலைப்பில் ச. கைலாச கணபதி, செவிலியர் பெருமை என்ற தலைப்பில் ஆர். வசுமதி, காவலர் பெருமை என்ற தலைப்பில் சுபசத்யா வசந்தன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நிகழ்வில் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், இலக்கிய மற்றும் தமிழ் ஆர்வலர்கள், மும்பை தமிழ் அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்
இவர்கள் மட்டுமல்லாமல் பெயர் எழுதப்படாமல் தமது அலைபேசியின் பெயரில் பதிவு செய்த 20 பேர்களுமாக சேர்த்து கிட்டத்தட்ட எண்பது பேர்கள் கலந்துக் கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்றம் சார்பாக நடைபெற்ற இந்தக் கருத்தரங்க நிகழ்வில் கலந்து கொண்டு பெண்மையைப் போற்ற மன்றம் எடுத்துக்கொண்டுள்ள இந்த சீர்மிகு செயலுக்கு வலு சேர்த்தமைக்கு கருத்துரையாளர்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் மற்றும் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டார்கள்.
செல்வி அனிதா அருணாச்சலம் அவர்களின் உரை (தலைப்பு : ஆசிரியர் பெருமை)
திருமதி கலைச்செல்வி அவர்களின் உரை (தலைப்பு : மகளின் பெருமை)
திருமதி கைலாச கணபதி அவர்களின் உரை (தலைப்பு : மனைவியின் பெருமை)
திருமதி லட்சுமி மகேஸ் அவர்களின் உரை (தலைப்பு : சகோதரியின் பெருமை)
திருமதி ஆர். வசுமதி அவர்களின் உரை (தலைப்பு : செவிலியர் பெருமை)
செல்வி யாமினிஸ்ரீ குணசேகரன் அவர்களின் உரை (தலைப்பு : இலக்கியத்தில் பெருமை)