14 Dec 2021 11:28 pmFeatured
மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகம், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம், தென்னரசு மின்னிதழ் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைய வழியில் இணைந்து வழங்கிய பேராசிரியர் சமீரா மீரான் நினைவலைகள் நிகழ்ச்சி 12-12-2021 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
தென்னரசு மின்னிதழ் பொறுப்பாசிரியர் கவிஞர் இரஜகை நிலவன் வரவேற்புரையாற்றினார். மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றப் பொதுச்செயலாளர் கல்வியாளர் அமலா ஸ்டேன்லி தொடக்கவுரையாற்றினார்.
தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் நடந்த பேராசிரியரின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில்
திராவிட முன்னேற்றக்கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி மற்றும் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் ஆகியோர் சிறப்பு நினைவேந்தலுரை நிகழ்த்தினார்கள்.
மும்பை திமுக பொறுப்பாளர் கருவூர் இரா. பழனிச்சாமி, மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசன், தமிழ் எழுத்தாளர் மன்றப் புரவலர் கவிஞர் அரியக்குடி மெய்யப்பன் ,தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் எஸ். இராமதாஸ், மும்பை புறநகர் திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் தமிழ் நேசன், மும்பை புறநகர் மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இரவிச்சந்திரன், மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், கே.ஆர்.சீனிவாசன், கல்வியாளர் டி.என்.முத்துகிருஷ்ணன்,
ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தலைவர் கோ.சீனிவாசகம் தமிழ் எழுத்தாளர் மன்றப் பேச்சாளர் பிரவினா சேகர், அணுசக்தி கலைமன்றத் தலைவர் கணகசபை ஆகியோர் நினைவுரையாற்றினார்கள்.
மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச்செயலாளர் அ.இளங்கோ, ஆட்சிமன்ற குழுவை சேர்ந்த கு.மாரியப்பன், மும்பை புறநகர் திமுக டோம்பிவலி வீரை சோ.பாபு, மும்பை புறநகர் திமுக அம்பர்நாத் முன்னாள் செயலாளர் அ.கதிர்வேல், தென்னரசு மின்னிதழ் வெங்கட் சுப்ரமணியன், மும்பை புறநகர் திமுக பிவண்டி செயலாளர் மேஹ்பூப் சேக், பிவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக் அலி, அவைத்தலைவர் முகமது அலி, மும்பை திமுக இளைஞரணி துணை செயலாளர் இரா. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை தென்னரசு மின்னிதழ் முதன்மை ஆசிரியர் வே. சதானந்தன் நெறியாள்கை செய்தார். இறுதியில் தென்னரசு மின்னிதழ் புரவலர் பு.தேவராசன் நன்றி கூறி நிறைவு செய்தார்.
மும்பை புறகர் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் நெல்லை பைந்தமிழ், கவிஞர் இறை.சா.ராசேந்திரன், ஜஸ்டின், காரை.கரு.ரவீந்திரன் மற்றும் பல தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பேராசிரியரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு வீடியோ இணைப்பு