24 Nov 2019 9:39 amFeatured
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று காலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் ஒன்று அலஸ்கா. கனடாவிற்கு மிக அருகில் உள்ள இந்த மாகாணம், மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் அதிகம் காணப்படும் இந்த மாகாணத்தின் அடக் நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 6.34 மணியளவில் (உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4.54 மணிக்கு) உணரப்பட்டது என்றும், நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை