04 Jul 2021 11:15 amFeatured
ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு பற்றி விசாரிக்க தனி நீதிபதியை நியமித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ் அரசு.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்தது இதன்படி இதுவரை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 23 ரபேல் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்துள்ளது. எஞ்சிய 16 விமானங்களையும் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க டசால்ட் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.
இதனிடையே பிரான்ஸ் நாட்டின் பிரபல புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியாபார்ட், ரபேல் விமான பேர ஊழல் குறித்து துருவி துருவி ஆராய்ந்து தொடர்ச்சியாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. இது பிரான்ஸ் அதிபர் மேக்ரனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனால் பிரான்ஸ் அரசு ரபேல் விமான பேர ஊழல் குறித்து விசாரிக்க நீதி தனி நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது
இந்த விவகாரத்தை வைத்து வரும் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.