25 Apr 2023 12:12 amFeatured
மும்பை: வெளிநாடு, வெளி மாநிலத் தமிழர் நலன்களுக்காக அயலகத் தமிழர் நல வாரியம் அமைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அலிசேக் மீரான் அவர்களுக்கும் நன்றி பாராட்டும் விழா மும்பைத் தமிழ் அமைப்புகளால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. 22-04-2023 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் மும்பையில் உள்ள பாண்டூப் மேற்கில் உள்ள பிரைட் மேனிலைப்பள்ளி தேவதாசனார் அரங்கில் வைத்து நடைபெற்ற பாராட்டுவிழா நிகழ்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மும்பைத் தமிழ் அமைப்புகள் கலந்துகொண்டு சிறப்பித்தன.
இவ்விழாவிற்கு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் - மாண்புமிகு மு.அப்பாவு தலைமை தாங்கி உரையாற்றினார்
சட்டப்பேரவை தலைவரின் உரை
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்
மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் எப்படிப்பட்ட நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பது நாடறிந்தது ஊரறிந்தது
சாமானிய ஏழை எளிய மக்களை பற்றிய சிந்தித்து அதற்காக பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டு வந்தாலும் அவர் தன்னை எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்கிறார் என்று எண்ணி பார்க்க வேண்டும்.
அவர் ஒருபோதும் நான் என்ற ஆணவம் நம்முடைய மாண்புமிகு முதல்வரிடம் ஒரு போதும் வந்ததில்லை. இது என் அரசு என்று சொல்லி ஆணவப் பேச்சு அல்ல. இது எனது அரசு என்று பேசுகின்ற ஆணவ பேச்சு அல்ல சட்டமன்றத்தில் பேசுகின்ற போதும் இது நமது அரசு இங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் நான் செய்து தருகின்றேன் இங்கு கட்சி பாகுபாடு இல்லை நம்முடைய எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என்ன தேவையோ நான் அதை செய்து தருகின்றேன் குறிப்பாக தீர்க்க முடியாத பிரச்சினைகளாக இருந்தால் அப்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 10 பிரச்சனைகளை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நான் செய்து தருகிறேன் என்று சொல்லுகின்ற ஒரு உயர்ந்த எண்ணம் கொண்டவர் இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் என்பது உங்களுக்கு அறிந்த உண்மை
ஆகவே தான் அவர் என்னுடைய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்று சொல்லவில்லை என் ஆட்சி என்று சொல்லவில்லை எனது ஆட்சி என்று சொல்லவில்லை நமது ஆட்சி என்று சொல்வதோடு அதையும் தாண்டி ஒரு இனத்தின் ஆட்சி தமிழினத்தின் ஆட்சி அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கின்றார்.
அந்த இனப்பற்று தான் தம்பி அலிஷேக் மீரான் சொன்னது போன்று கொரோனா காலத்தில் பாதிப்பு ஏற்பட்டபோது என்னென்ன உதவி செய்து செய்தார்கள் என்று சொன்னார் என்றால் அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து அங்கே இருந்து அரசியல் கட்சி நடத்தினாலும், தமிழ் சொந்தங்கள் இருக்கின்ற இடத்தில் பாதிப்பு என்று வந்துவிட்டால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்யக்கூடியவர்
ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழனை பற்றி சிந்திக்கின்ற ஒரு மனிதன் யார் என்று சொன்னால் கலைஞர் அவர் வழியில் வந்த நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்.
அவர் ஒன்றை குறிப்பிட்டு சொன்னார் தமிழ்நாட்டில் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு விரும்பத்தகாத நிகழ்வு தமிழ் மண்ணில் நடந்து விட்டது இலங்கை தீவிரவாதிகளால் நம்முடைய ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டபோது தமிழ் மண்ணில் அந்த சம்பவம் நடந்து விட்ட காரணத்தினால்தான் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் படபடத்துப் போனார். வெலவெலத்து போனார் என்ன நடக்குமோ நம்முடைய தமிழ் இனத்திற்கு இந்திய அளவில் என்று சொல்லிதான் கொதித்தெழுந்து என்னென்ன செய்தார் என்பதை தம்பி மீரான் சொன்னார் என்றால் இது அரசியலுக்காக வராது ஓட்டுக்காக வராது அந்த உணர்வு இருக்கின்ற மனிதனுக்கு மட்டும்தான் வரும் அந்தத் தமிழ் உணர்வு கலைஞருக்கு இருந்தது இன்று அவரிடம் உள்ளது
ஆகவே தான் இந்தியாவில் பலபகுதிகளில் வாழ்கின்றார்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் தோன்றிய மொழிகளில் ஒரு மொழி அரசு மொழியாக அரசாங்க மொழியாக இந்தியாவை விட்டு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கின்றஒரு மொழி இருக்கிறது என்றால் அது தமிழ் மொழி மட்டும்தான் இலங்கையில் அரசாங்க மொழியாக இருக்கின்றது
சிங்கப்பூரிலே அரசாங்கம் மொழியாக இருக்கின்றது மலேசியாவில் அரசு மொழியாக இருக்கின்றது கனடாவில் அரசு மொழியாக இருக்கின்றது மொரிசியஸ்லே இருக்கின்றது இந்தியாவில் பிறந்து வளர்ந்த ஒரு மொழி கல் தோன்றி மண் தோன்றா காலம் தொட்டு முன் தோன்றிய ஒரு மூத்த மொழி நம்முடைய தமிழ் மொழி உலகத்தில் முதன்முதலில் தோன்றிய மூன்று மொழிகளில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு மொழி இருக்கின்றது என்றால் அதுதான் தமிழ் மொழி அந்த தமிழ் மொழியைத்தான் அழித்துவிடலாம் என்று பலர் முயற்சிகள் நடந்தது உங்களுக்கு தெரியும் அதுக்குள்ளே நான் செல்ல விரும்பவில்லை ஒரு மொழியை அழித்துவிட்டால் அந்த இனத்தை அழித்துவிடலாம் ஒரு கலாச்சாரத்தை அழித்துவிடலாம் அவர்களுக்கு பண்பை அளித்து விடலாம் நம்முடைய பழக்க வழக்கங்களை அழித்துவிடலாம் ஆகவே தான் மொழி மிக மிக முக்கியம்.
உலகத்தில் தோன்றிய மொழிகளில் கலை இலக்கியம் வரலாறு எல்லாம் வகைகளிலும் உயர்ந்து நிற்கிறது என்றால் ஒரு மொழி தமிழுக்கு இணையாக எந்த மொழியையும் சொல்ல முடியாது ஆகவேதான் செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது மாண்புமிகு மறைந்த தலைவர் கலைஞர் பெற்று தந்தார்
அதற்கு அடித்தளம் விட்டுக் கொடுத்தவர் வட அயர்லாந்தில் பிறந்து லண்டனில் பிறந்து இந்தியாவுக்கு வந்து, வருகின்ற வழியிலேயே பிரான்ஸ் கப்பலோடு விபத்துக்குள்ளாகி 45 நாட்களுக்குள் இந்தியா வரவேண்டிய ஐயா கால்டுவெல் அவர்கள் ஆறு மாதம் கழித்துதான் இந்தியா வந்து சேர்ந்து கப்பலிலே தமிழ் கற்று இந்தியாவில் வந்து இறங்கி 18 ஆண்டு காலம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, உருது ஒரியா போன்ற அனைத்து மொழிகளையும் 18 ஆண்டு காலம் கற்று தேர்ந்துதான் ஒரு ஒப்பிலக்கணத்தை தந்தார்
இப்போது இருக்கின்ற நம்முடைய பல பேர் தமிழுக்கு இலக்கணம் வகுத்ததுபோல் அவர் வகுக்கவில்லை சனாதான தர்மத்தை போல் அவர் சொல்லவில்லை அவர் 18 ஆண்டுகாலம் அனைத்து மொழிகளையும் கற்று தேர்ந்து ஒப்பிட்டு அதுவரை சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது தான் தமிழ் என்று இருந்த அந்த மாயை மாற்றி சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது அல்ல தமிழ் அதற்கு முன் தோன்றிய மொழி தமிழ் மொழி இந்த குடும்பம் தமிழ் குடும்பம் திராவிட குடும்பம் இந்த திராவிட மொழி அதற்குள் முதல் மொழி அது தமிழ் மொழி தான் என்று சொல்லி அடித்தளம் இட்டு ஒப்பிலக்கணம் தந்தவர் ஐயா கால்டுவெல்
ஆகவேதான் மறைந்த அண்ணா அவர்கள் கடற்கரையில் சிலை வைக்கும்போது நேப்பியார் பாலத்திற்கு அடுத்ததாக முதல் சிலையாக அய்யா கால்டுவெல் அவர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்திருக்கிறார் என்று சொன்னால் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுதான். உலகம் முழுவதும் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கியங்கள் திருக்குறள் ஜியு போப் போன்றவர்கள் எல்லாம் எழுதி வெளிநாடுகளில் தமிழையும் தமிழர்களுடைய பெருமைகளையும் கொண்டு சேர்த்தார்கள்.
அப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழன் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டால் அவனுக்கு யார் இருக்கிறார் என்று எல்லோரும் எண்ணினோம் அதற்கு இறுதி வடிவம் கொடுத்து சட்டத்தை கொண்டு வந்தார் மறைந்த தலைவர் கலைஞர் நடைமுறைப்படுத்த பத்தாண்டு காலம் நாதியில்லாமல் சென்று விட்டது. வந்தார் இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அனைத்து நாடுகளிலும் வெளி மாநிலம் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் சொந்தங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அயலக அமைச்சராகவே மஸ்தான் அவர்களை உருவாக்கி தந்திருக்கின்றார் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள்.
யார் இருக்கின்றார் என்று சொன்னால் நம்முடைய கலைஞர் வழிவந்த மு க ஸ்டாலின் இருக்கின்றார் ஒரு அமைச்சர் இருக்கின்றார் உலக அளவில் அயலகத் தமிழர் நல தலைவராக தம்பி கார்த்திகேயனாதிபதி இருக்கின்றார் ஏழு உறுப்பினர்கள் அதில் இருக்கின்றார்கள் அதில் என் தம்பி மீரானும் ஒருவர் இருக்கிறார் என்றால் இதுதான் பெருமை
அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர் அலிசேக் மீரான் ஏற்புரை
என்ன செய்தது இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு பார்க்கலாம் சமீபத்தில் இந்த அயலக வாரி வாரியம் அமைப்பதற்கு முன்னால் குவைத் சென்றிருந்தேன் வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் எல்லாம் மிகப்பெரிய செல்வந்தர்கள் செல்வார்கள் சென்று விட்டு வந்து விடுவார்கள் மிகப் பெரிய தொழிலதிபர்கள் போவார்கள் சென்று வந்து விடுவார்கள் மிகப்பெரிய கல்வியாளர்கள் செல்வார்கள் சென்று வந்து விடுவார்கள் உல்லாசமாக ஓய்வு எடுக்க செல்வார்கள் சென்று வந்து விடுவார்கள் ஆனால் அன்றாட உணவுக்கு வழி இல்லாமல் தாய் தந்தை நம்மை பெற்று வளர்த்து படிக்க வைத்து இளைஞர் ஆக்கிவிட்டால் எங்காவது சென்ற தொழில் செய்து நம்முடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணத்தோடு ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எப்படியோ பஸ்லேயோ ரயிலேயோ ஏறி மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு கடல் கடந்து அயலகம் செல்கின்றவர்களுக்கு நமக்கு ஒன்று ஏற்பட்டு விட்டால் இந்த நாட்டில் யார் பாதுகாப்பு என்று ஏங்கி தவித்த தமிழர்களுக்கு இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மாநிலத்தில் ஒரு இனத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு பாதுகாப்பை தந்தது இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் என்பதை நீங்கள் யாரும் மறந்து விடக்கூடாது
ஒரு காலத்தில் ஒரு நாட்டிலே ஒரு இளைஞர் இறந்து விட்டால் அவருடைய சடலத்தை கொண்டு வருவது எப்படி கொண்டு வருவது யாரிடம் போவது அதற்கு என்ன வழி இருக்கின்றது என்று யாருக்குமே தெரியாது கண்ணீரோடு வருவார்கள் மூன்று மாதம் ஆகிவிட்டது ஆறு மாதம் ஆகிவிட்டது எந்த தொடர்பும் இல்லை இப்போது அப்படி நடைபெறுகின்றதா? ஆயிரக்கணக்கான விபத்துக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் நம்முடைய மாண்புமிகு முதல்வர் இன்று கொண்டு வந்திருக்கின்ற அயலக அமைச்சர் அயலகவால் தமிழ் நல வாரியத்தில் மூலம் ஒரு வார காலத்திற்குள் அவர்களுடைய இல்லத்திற்கு உடலை கொண்டு சேர்க்கின்ற மிகப் பெரிய ஒரு பண்பை நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் செய்திருக்கின்றார் இதுதான் இதனுடைய சிறப்பு
வாழும்போது எப்படியும் வாழ்ந்து விடலாம் வாழ்வுக்குப் பிறகு மறைவுக்கு அந்த குடும்பங்கள் அந்த சொந்தங்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் ஆகவே கருணை உள்ளத்தோடு அவர் அதை செய்தார்.
இப்பொழுது கூட உங்களுக்கு நன்றாக தெரியும் உக்கரையினிலே மிகப்பெரிய போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னும் முடிவுக்கு வரவில்லை அப்படிப்பட்ட போர் உச்சத்தில் இருக்கும்போது அங்கு இருக்கின்ற இந்தியர்களை உடனே வாருங்கள் என்று சொல்லி இந்திய அரசு அறிவித்து விமானங்கள் ஒன்று இரண்டு மூன்று நான்கு வந்தது ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வந்தார்கள் ஒவ்வொரு விமானத்திலும் எத்தனை தமிழன் வந்தான் கேட்டால் மூன்று பேர் தமிழன் வந்தான் இரண்டு பேர் வந்தான் ஒருவன் வந்தான் என்று இருந்ததும் நம்முடைய மாண்புமிகு முதல்வர் டி ஆர் பாலு அவர்களையும் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லிக்கு அனுப்பி வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து அயல்நாட்டில் ரஷ்யா உக்ரைன் போரிலே எங்களுடைய மாணவர்கள் அங்கு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் தமிழ்நாடு தனி விமானம் ஏற்பாடு செய்து கொண்டுவர வர ஏற்பாடு செய்கிறோம் என்று வெளியூர் துறை அமைச்சர் சந்தித்து பிரதமரை சந்தித்து முதல்வர் சொல்லி இருக்கிறார்
நாங்களே விமானம் ஏற்பாடு செய்கின்றோம் என் தமிழ் சொந்தங்களை உடனடியாக அழைத்து வாருங்கள் என்று சொன்ன அடுத்த நிமிடமே ஒரு விமானத்தில் 200 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 300 பேர் தமிழகத்தை 130 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வருகிறார்கள் என்று சொன்னால் ஒரு திராணி உள்ள முதல்வர் தமிழ்நாட்டில் இருந்த காரணத்தினால்தான் தமிழனுக்கு அகில உலக அளவில் அவனுக்கு பெருமை ஏற்படுகிறது என்றால் இதை யார் செய்தார் என்றால் தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு முதல்வர் கிடைத்து இருக்கின்றார் அவர் எங்களை அழைத்து சென்றிருக்கிறார்
ஆகவே தான் யார் எங்கு இருக்கின்றார்கள் மும்பையில் இருக்கின்ற தமிழ் சொந்தங்களுக்கு ஒன்று ஏற்பட்டால் யார் இருக்கின்றார் என்ற நிலையை மாற்றி 50 லட்சம் தமிழர்களுக்கும் ஆள் இருக்கின்றது அலிஷேக் மீரான் இருக்கின்றார் சென்றால் உடனே உதவி செய்வார் அவரிடம் ஜாதி இல்லை மதம் இல்லை கட்சி இல்லை மனித பண்புள்ள ஒரு மனிதன் இருக்கின்றார் என்று சொன்னால் தம்பி அலிஷேக் மீரானை தவிர வேறு யாரையும் அடையாளம் காட்ட முடியாது ஆகவே அவருக்கு பொருத்தமானவருக்கு பொருத்தமான பதவி கொடுத்திருக்கின்றார்.
இன்னும் நம்முடைய முதல்வரை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் அவர் தமிழ்நாட்டுக்கு மட்டும் முதல்வர் அல்ல அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர் என்ன நினைக்கிறார் என்ன முடிவெடுக்கின்றார் என்பதைதான் எல்லோரும் எண்ணி பார்க்கின்ற அளவுக்கு அவருடைய செயல்பாடு இருக்கின்றது
நான் பேரவை தலைவர் கவர்னர் உரையோடு ஆரம்பித்தது இந்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி என்று எண்ணுகின்றேன் முதல் உரை கவர்னர் உரை. உரையை அவரிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடுத்தோம் ஆங்கிலத்திலே வாசித்தார் பாதியை விட்டுவிட்டார் மீதியை சேர்த்துக் கொண்டார் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டபோது சிறு சலசலப்பு ஏற்பட்டது தலைவர் திரும்பி பார்த்தார் அமைதியாக இருக்கச் சொன்னார் ஒட்டுமொத்த அவையில் இருக்கின்ற அனைவரும் அமைதியானார்கள்.
அவர் பேசி முடிந்தது கவர்னர் உரை வாசித்து முடிந்ததும் தமிழிலே நான் உரையாற்ற வேண்டும் நான் தமிழில் உரையாற்றி முடிந்ததும் அதற்குள் இந்தியாவில் வேறு எந்த ஒரு முதல்வருக்கும் இல்லாத ஒரு மதிநுட்பம் நம்முடைய முதல்வருக்கு வந்தது ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் நம்முடைய மாண்புமிகு கவர்னர் அவர்கள் விட்டும் சேர்த்தும் பேசிய வார்த்தைகளை நீக்கி இந்த உரையில் என்ன இருக்கின்றதோ அதை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்த போது அவருடைய உதவியாளரிடம் என்ன தமிழில் பேசுகிறார்கள் என்றபோது இந்த விஷயத்தை அவர் சொன்னதும் அந்த மரபு மாண்பை மீறி மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எழும்பி தேசிய கீதத்திற்கு கூட நம்முடைய நாட்டு பண்ணுக்கு கூட நாட்டுக்கு செலுத்த வேண்டிய கூட செலுத்தாமல் எழும்பி ஓடிச்சென்று விட்டார் அவை இருந்தது தீர்மானம் கொண்டு வந்தார் இந்த அப்பாவுதான் அதை நிறைவேற்றிக் கொடுத்தேன்.
இன்று இந்தியா முழுவதும் இருக்கின்ற மாநில சட்டமன்றங்களில் ஆளுநர் உரிமை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 200-ல் சொல்லியபடி அதை அப்படியே வாசிப்பதுதான் அவருடைய கடமை அதைத் தாண்டி அவருக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி கேரளாவிலே முதல்வரை எதித்திருந்த கவர்னரை கூட அந்த கேரளா அரசை பாராட்டி எழுதி கொடுத்ததையும் மத்திய அரசை கண்டித்ததும் சேர்த்தே அடக்கத்தோடு வாசித்து விட்டு செல்கிறார் என்று சொன்னால் அதற்கு முதல் குரல் கொடுத்து தலை நிமிரச் செய்த ஒரு பண்பு ஒரு வீரம் அஞ்சாமை அந்த தமிழருடைய மு க ஸ்டாலினுக்கு இருந்ததுதான் இவ்வளவு பெரிய பெருமையை இந்தியாவிற்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றது
அவருடைய தந்தையார் கோட்டையிலே கொடியேற்றுகின்ற உரிமை கவர்னருக்குதான் இருந்தது அவர் முதல்வராக வந்தார் கலைஞர் 89 என்று எண்ணுகிறேன் நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எங்களுக்குதான் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமை தரப்பட வேண்டும்தேசியக்கொடி ஏற்றுகின்ற உரிமை முதலமைச்சர் தான் வேண்டும் என்று சொல்லி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறோம் என்று சொன்னால் அதைப் பெற்றுக் கொடுத்த பெருமை மறைந்த தலைவர் கலைஞரை சாரும்
சட்டமன்றங்களில் மசோதாக்கள் நிறைவேற்றிக் கொடுக்கிறோம் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் ஒன்றிய அரசுக்கு எதிரான ஆட்சி நடைபெறுகின்ற மாநிலங்களில் அதை நிறைவேற்றி கொடுப்பதில்லை மாண்புமிகு முதல்வர் இந்தியா முழுவதுக்கும் வழிகாட்டுகின்ற வண்ணம் சட்டமன்றத்தில் தீர்மானம்கொண்டு வந்து மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அமைச்சரவை முதலமைச்சர் கூடிமுடிவெடுத்து சட்டமன்றத்திலே ஏக மனதாக நிறைவேற்றி நம்முடைய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்கின்ற நிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தும் முதலில் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்தவர் 18 நாட்களில்அதே அவசரச் சட்டத்தில் ஒரு புள்ளி ஒரு கமா கூட மாறாமல் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் கிடப்பில் கிடக்கிறது.கேட்க நாதி இல்லை திருப்பி அனுப்புகின்றார்.
முதல்வர் சட்டம் கொண்டு வந்தார் மசோதா கொண்டு வந்தார் தனி தீர்மானம் கொண்டு வந்தார் நிறைவேற்றப்பட்டது மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்டது அதன் பின் நம்முடைய முதல்வர் சட்டம் கொண்டு வந்தார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற மசோதாக்கள் ஆளுநரிடம் சென்றால் ஆளுநர் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பிய அடுத்த நிமிடமே ஆன்லைன் ரம்மிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் ஒரு வீரமுள்ள மண்ணில் எதற்கும் அஞ்சாத நாட்டு மக்களை பற்றி சிந்திக்கின்ற ஒரு முதல்வர் இருந்த காரணத்தினால்தான் இந்த சட்டம் நிறைவேற்றி அனுப்பப்பட்டிருக்கிறது ஒன்றிய அரசுக்கு.
இதன்படி டெல்லி, கேரளா, மேற்கு வங்கம் போன்ற நிலங்களெல்லாம் நாங்களும் அந்த சட்டத்தை நிறைவேற்றி அனுப்பவோம் என்று சொல்லி நம்முடைய மாண்புமிகு முதல்வருக்கு ஒத்திசை கொடுக்கிறார்கள் என்று சொன்னால் எப்படிப்பட்ட தீர்மானத்தை இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக சொல்லி இருக்கின்றார்
ஆகவே அப்படிப்பட்ட ஒரு மகத்தான முதல்வர்தான் அவர் செய்த சாதனைகள் உங்களுக்கெல்லாம் தெரியும் ஏழை எளிய மக்கள் படிக்க வேண்டும்12 படித்து முடித்து பட்டம் படிக்க முடிக்க வேண்டும் என்றால் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கி கணக்கில் சென்று பட்டம் படிக்க வைத்திருக்கின்றார்.
இந்தியாவிலே பெண்களை படிக்க வைத்த பெருமை திராவிட இயக்கத்திற்கு உண்டு என்று இப்போது கூட ஹரிராம் சேட் சொன்னார் உண்மைதான்
1921-ல் தான் முதல் சட்டமன்றம் அப்போதுதான் நீதி கட்சி என்று ஒன்று இருந்தது அந்த கட்சி தேர்தலிலே 1920-ல் நின்றது 1920-ல் டிசம்பரில் தேர்தல் முடிவுற்று அவர் சொன்னதுபோன்று 1921 ஜனவரியில் தான் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது முதல் சட்டமாக பெண்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்று தந்தது அந்த நீதி கட்சி அதனுடைய தொடர்ச்சிதான் கலைஞர் ஒரு குழந்தைக்கு நோய்வாய் ஏற்பட்டு விட்டால் தாய் கசப்பான மருந்தை கொடுப்பதற்கு முன்பு இனிப்பான தேனை நாக்கில் தடவுவாள் அது மீண்டும் வாயை பிளக்கும்போது கசப்பான மருந்தை கொடுத்து குணமாக்குவார் அதுபோல் பெண்கள் எட்டு படி திருமணத்திற்கு 3000 தருகிறேன் பத்து படி 6 ஆயிரம் தருகிறேன் 12 படி 26ம் தருகிறேன் பட்டம் படி ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொல்லி அவர்களுக்கு கல்வியின் நாட்டத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கலைஞர் செய்தார்
இன்றைய முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் பட்டம் படி என்கின்றார் இன்று இந்திய அளவில் பட்டம் படித்து இருந்த மகளிருடைய எண்ணிக்கை 27 சதவீதம் என்றால் தமிழ்நாட்டில் பெண்கள் பட்டம் படித்தவர்கள் படித்துக் கொண்டிருக்கிறவர்கள் எண்ணிக்கை 72 சதவீதம் இருக்கிறது என்று சொன்னால் அதுதான் திராவிட ஆட்சி திராவிட மாடல் ஆட்சி
நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும் இந்தியாவில் பட்டம் படித்தவர்களுடைய சராசரி விழுக்காடு 34 சதவீதம் என்றால் தமிழ்நாட்டில் பட்டம் படித்தவர்கள் சராசரி 51% நம் பட்டம் படித்திருக்கிறோம் என்றால் அதுதான் திராவிட மாடல் அந்த கல்விதான் இந்த உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கின்ற கல்வியாக இருக்கின்றது இந்திய அளவில் எல்லா மாநிலங்களிலும் நம்மை திரும்பி பார்க்கின்றது
இப்போது கூட நீங்கள் சொன்னீர்கள் ஜாதி சான்றிதழ் கிடைப்பதில் எவ்வளவு சிரமம் இருக்கிறது என்று சொன்னீர்கள் உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்
வி பி சிங் அவர்கள் பிரதமராக 11 மாத காலம் இருந்தார் அவருடைய 11 மாத ஆட்சி காலத்தில்தான் மண்டல் கமிஷன் அறிக்கையை எடுத்து இந்தியாவில் ஓபிசி இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீடை தந்தார் என்று சொன்னால் அதற்கு துணை நின்றவர் மறைந்த தலைவர் கலைஞர்
அவருக்குத்தான் இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய வெண்கல சிலையை தமிழ்நாட்டில் உருவாக்குவோம் என்று சொல்லி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் என்று ஏனென்று சொன்னால் அவர் சமூக நீதி காத்தவர்.
ஜாதியின் அடிப்படையில் நம்மை படிக்க வைக்காமல் இருந்தனர் எதற்காக இட ஒதுக்கீடு உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும் ஒன்றை சொல்லி முடிக்கின்றேன் 1795 வரை எல்லோரும் நிலம் வாங்க முடியாது ஒரு குறிப்பிட்ட சமூகம் தான் நிலத்தை வாங்க முடியும். தலையில் பிறந்தவர்கள் நெஞ்சில் பிறந்தவர்கள் தொடையில் பிறந்தவர்களை தவிர காலில் பிறந்தவர்களும் அதற்கு கீழே பிறந்தவர்களும் நிலம் வாங்கும் உரிமை கிடையாது நிலம் வாங்குவதற்கு உரிமை இல்லை என்றால் நிலம் யாரிடம் இருப்பது என்று பாருங்கள் இது தான் சனாதன தர்மம். அவர்களிடம் தான் இருந்தது 1795-ல் தான் பிரிட்டீஷ் ஆட்சியிலே சட்டம் கொண்டு வருகிறார் எல்லோரும் நிலம் வாங்கலாம் என்று அதன் பின்புதான் நிலம் வாங்கப்பட்டது
1835 லார்டு மெக்காலா பிரபு பல பேர் அவருடைய பெயரை கேட்டாலே தூக்கில தொங்கி விடுவார்கள் காரணம் அவர்தான் சொன்னார் எல்லோரும் கல்வி கற்கலாம் என்று. 1835 வரை எல்லோரும் கல்வி கற்க முடியாது கல்வி கற்பதற்கு சட்டம் கொண்டு வந்தவர் அவர் அப்போது நாட்டில் என்ன சட்டம் என்று பார்த்தால் யார் கல்வி கற்கின்றார்கள் என்று பார்த்தால் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் கல்வி கற்கலாம் இதை யார் சொன்னது வேதம் சொன்னது இது சமஸ்கிருதத்தில் இருந்தது இதுதான் நடைமுறை என்றது
அப்போதுதான் லார்டு மெக்காலா பிரபு சொன்னார் இது அல்ல கல்வி. கல்வி என்பதற்கு உதாரணம் சொல்கின்றேன் லோக்கல் மொழி நீங்கள் என்ன மொழி பேசுகின்றீர்களோஅதை ஒரு பாடமாக கொள்ள வேண்டும் அதுதான் வட்டார மொழி ,ஆங்கிலம் அடுத்து இரண்டு மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் கணிதம் கண்டிப்பாக இருக்க வேண்டும் அறிவியல் கண்டிப்பாக இருக்க வேண்டும் வரலாறு தெரிந்திருக்க வேண்டும் பூக்கோள ரீதியாக உனக்கு புரிந்து இருக்க வேண்டும் இதுதான் கல்வியினுடைய அடிப்படை திட்டம் என்று கொண்டுவந்து எல்லோரும் கல்வி கற்கலாம் என்று இந்த அடிப்படையில் தான் கல்வி கற்க வேண்டும் என்று சொன்னவர் லார்ட் மெக்காலே அவர்கள்
அதனுடைய வளர்ச்சி தான் தொடர்ச்சிதான் இன்று… ஒரு காலகட்டத்தில் நூறு பேர் பட்டதாரி. அப்போது சென்னை மாகாணம் மெட்ராஸ் பிரசிடென்சி கேரளா தமிழ்நாடு பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடக ஒரிசாவின் ஒரு பகுதி உள்ளடக்கியது மதராஸ் பிரசிடென்சி. கால்டுவெல் ஏன் அத்தனை மொழிகளும் கற்றார் என்றால் மதராஸ் பிரசிடென்சி சென்னை தான் தலைமையிடம், தலைநகரம் அங்கு இவ்வளவு மக்களும் வாழ்ந்தார்கள் இவ்வளவு மொழிகளிலும் பேசினார்கள் ஆகவே தான் அவர்கள் அவ்வளவு மொழிகளையும் கற்று திராவிட குடும்பம் தமிழ் குடும்பம் என்று சொல்லி தமிழில் இருந்து தோன்றியதுதான் அனைத்து மொழிகளும் இது தென்மாநில மொழி என்று சொன்னவர் கால்டுவெல்.
ஆகவே அந்த மாநிலத்தில் உள்ளவர்களில் அப்போது ஐந்தரை கோடி மக்கள்- நூறு பட்டதாரி அந்த வருடம் சரியாக தெரியவில்லை ஆகவே தவறாக சொல்ல விரும்பவில்லை அந்த 100 பேரில் 94 பேர் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு ஜாதியின் அடிப்படையில் பிறப்பின் அடிப்படையில் எவ்வளவு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தம்பிமார்கள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்
அதன் பின்புதான் தமிழ்நாட்டில் பட்டதாரி இல்லாத வீடே இல்லை என்று சொன்னால் திராவிடம் மாடல் ஆட்சி அதுதான் திராவிட ஆட்சி அதுதான் இன்றைய இந்தியாவில் தலைநிமிர்ந்து தமிழ்நாடு நிற்கிறது என்றால் இதுதான் காரணம்
நம்முடைய தலைவர் திருவனந்தபுரம் சென்று அன்று வைக்கம் வீரர் பெரியார் மிகப்பெரிய அளவில் நடத்திய போராட்டத்தை, நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவத்தை எடுத்துச்சொன்னார்
அய்யா வைகுண்டர் தோன்றினார் அதன் பின் நூறாண்டு கழித்து தோன்றியவர் நாராயண குரு வைக்கத்திலே சோமநாதன் ஆலயம் தெருவில் செல்ல முடியாத நிலை ஆலத்திற்குள் அல்ல தெருவில் செல்ல அனுமதிக்கப்படவில்லை அப்போது இந்த மெட்ராஸ் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் தந்தை பெரியார் காந்தி சொல்லி அனுப்பினார் வைக்கம் போ சென்று சொல்லி நாராயண குரு அய்யா வைகுண்டருக்கு சொந்தக்காரர் அவர் அந்த தெருவில் அந்த சமூகம் செல்லக்கூடாது என்று இருந்தபோது நடப்பதற்கு கூட அனுமதி இல்லை
தலைவர் பெரியார் போனார் ஒரு மாதம் பிடித்து உள்ளே வைத்தார்கள் அவருடைய மனைவி அவருடைய சகோதரி அந்த போராட்டத்தை நடத்தினார்கள் ஒரு மாதம் கழித்த வந்தார் சென்னைக்கு வரவில்லை ஈரோட்டுக்கு செல்லவில்லை மீண்டும் போராடினார் ஆறு மாத பிடித்து உள்ளே வைத்தார் திருவாங்கூர் மகாராஜா ஆறு மாதம் கழித்து உள்ளே இருந்து வெளியே வந்தார் மீண்டும் போராட்டம் நடத்தி நாராயண குரு அந்த சமூகத்தை நாடார் சமூகத்தை அந்த ஈழ மக்களை அந்த தெருவில் நடக்க வைப்பதற்கு அனுமதி பெற்று கொடுத்தவர் தந்தை பெரியார்.
பலபேர் தந்தை பெரியார் என்று சொல்லிவிட்டாலே போதும் இவர் கடவுள் மறுப்பாளர் என்று சொல்வார்கள் இல்லை கடவுள் பெயரைச் சொல்லி ஜாதிப் பெயரைச் சொல்லி அவர்களை இழிவு படுத்துகிறவர்களைதான் தந்தை பெரியார் எதிர்த்து போராடினாரே தவிர கடவுளை எதிர்த்து அல்ல கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை ஜாதியை சொல்லி ஏமாற்றுபவர்களை ஜாதியைச் சொல்லி இழிவுபடுத்துவர்களை ஆகையினால் தான் சமூக நீதி என்ற புள்ளி முதல் புள்ளி வைத்த இடம் இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதுவும் நீதி கட்சி தான் அதன் தொடர்ச்சி தான் திராவிட இயக்கம் அதுதான் பெரியார் அண்ணா கலைஞர் இன்று மூன்று பேருடைய வடிவில் திகழ்கின்ற இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் என்பதுதான் சமூகநீதி அடையாளம் இதுதான் திராவிட மாடலினுடைய அடையாளம் இவர்தான் தமிழ் சொந்தத்தை நேசிப்பார் இவர் தமிழனுக்கு ஒன்று என்றால் உலக அளவில் தட்டி கேட்கின்ற ஒரு தலைவன் பிறந்திருக்கிறான் என்றால் இந்த இனத்தினுடைய தலைவர் ஒரே தலைவர் மு க ஸ்டாலின் ஒருவரை தான் சொல்ல வேண்டும்
ஆகவே அப்படிப்பட்ட இனத்தின் பற்று கொண்டு நம்முடைய இனங்கள் எங்கிருந்தாலும் அங்கு அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு அமைச்சரவை ஒரு வாரியம் அதிலே ஏழு உறுப்பினர்கள் ஏழு உறுப்பினர்களில் மீரானும் ஒருவர் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது இன்று எனக்கு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் தமிழன் என்று சொல்லடா தமிழை நிமிர்ந்து நில்லடா என்பதற்கு நம்முடைய மாண்புமிகு முதல்வர் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பிற மாநிலம் மட்டுமல்ல அயல் நாடுகளில் இருக்கின்றவர்களுக்கும் என்ன தேவையோ அனைத்தையும் செய்து தருகிறேன் என்ற நம்முடைய முதல்வருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி நம்முடைய மீரான் அவர்களுக்கு நன்றி
மும்பை தமிழ் மக்களின் கோரிக்கை
உங்களுடைய நான்கு கோரிக்கையும் பார்த்தேன் ஒன்று மும்பை பல்கலைக்கழகத்திற்கு தமிழ் இருக்கை வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள் நம்முடைய மாண்புமிகு முதல்வர்களை கவனத்திற்கு நானும், தம்பி அலிஷேக் மீரான் அவர்களும் சேர்ந்து எத்தனை கோடி ரூபாய் ஆனாலும் தமிழ் இருக்கை நம்முடைய முதல்வர் மூலம் பெற்றுத் தருவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்
அது போல் தொடர்வண்டி இங்கிருந்து செல்வதற்கு பல குறைபாடுகள் இருக்கின்றது கொங்கன் வழியாக பல ரயில்கள் செல்கின்றது நம்முடைய பகுதிக்கு மிகவும் குறைவுதான் நான் அரசியலுக்காக சொல்லவில்லை கடந்த நான்கைந்து இந்த ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு ரயில்வே ஒதுக்கிய பணம் என்றால் ஒரு கோடி,5 கோடி, 3 கோடி இந்த அளவில் தான் இருக்கிறது
நம்முடைய முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிச்சயமாக நம்முடைய முதல்வர் நீங்கள் முக்கியமான எந்தெந்த ரயில்கள் என்று சொன்னால் அவற்றை நம்முடைய மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டி ஆர் பாலு அவர்கள் மூலமாக நிச்சயமாக வேண்டிய ஏற்பாடுகள் செய்து தருவோம் என்ற உறுதியையும் இந்த நேரத்திலே அன்போடு உங்களோடு தெரிவித்துக் கொள்கின்றேன்
அது போல் இங்கு இருக்கின்ற வெளி மாநில இல்லங்கள் வாசி என்ற இடத்தில் இருப்பதாகவும் கடந்த கால ஆட்சியில் இரண்டாயிரம் மீட்டர் சதுர அளவு கொண்ட இடத்தை ஊருக்கு வெளியே பல முப்பது, நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் வாங்கி இருக்கின்றார்கள் அதிலே கட்டுவதுற்கு சாத்தியமில்லை வாங்கி இருப்பதற்கும் சரியான அளவில் பத்திரப்பதிவு செய்து நடைமுறைக்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை நம்மை விட சிறிய மாநிலம் சிக்கிம் 4000 சதுர மீட்டர் நிலம் வாங்கி இருக்கிறார்கள் நாம் அதைவிட அதிகமாவது வாங்க வேண்டும் வாசி பகுதியில் பல இடம் இருக்கிறது என்றால் நீங்கள் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள் நிச்சயம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு அயலக தமிழர் நல வாரியத்தின் உறுப்பினர் துணையோடு உங்களுக்கு நிச்சயமாக நடைமுறையை எடுக்கும் என்பது அன்போடு தெரிவித்துக் கொள்கின்றேன்
இன்னொன்று ஜாதி சான்றிதழ் பற்றி சொன்னீர்கள் அது கண்டிப்பாக சொல்லவேண்டும் வி பி சிங் அவர்கள்தான் மண்டல் சமேஷ் கமிஷன் கொண்டு வந்தார் 86 லிருந்து வரலாறு இருக்கின்றது அதைப்பற்றி பேசினால் பல மணி நேரமாகும் இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன் இன்றைய இந்திய நம்முடைய மேல்படிப்பு அல்லது மருத்துவ படிப்புக்கான சட்டத்திட்டம் புதிதாக கொண்டுவரப்பட்டதில் மாநில அரசுகள் தங்களிடம் இருக்கின்ற மருத்துவம் முதுகலை மருத்துவம் அதாவது யுஜி பிஜி அதேபோல பிடிஎஸ் எம்டிஎஸ் போன்ற பல் மருத்துவ படிப்புகள் ஒரு குறிப்பிட்ட இடங்களை மத்திய தொகுப்பிற்கு கொடுத்து விட வேண்டும் அகில இந்திய மருத்துவக் கழகத்திற்கு கொடுத்து விட வேண்டும் அதில் இட ஒதுக்கீடு கிடையாது அவர்கள் யார் வேண்டுமானாலும் கொடுத்து வருவார்கள் யாருக்கும் கொடுத்து விடுவார்கள் தலையில் பிறந்தவர்களுக்கு கொடுத்து கொண்டே இருந்தார்கள் நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றபேரவை உறுப்பினர் வில்சன் அவர்களிடம் சொல்லி இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டு நம்முடைய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அங்கே டெல்லிக்குச் சென்றார் டெல்லிக்குச் சென்றவுடன் மீண்டும் உயர்நீதிமன்ற வர சொன்னார் இங்கேயும் அனுமதி பெற்றார் மீண்டும் டெல்லியில் சென்று அனுமதிப் பெற்றார் 27 சதவீத இட ஒதுக்கீடு மாநில அரசு கொடுக்கின்ற அந்த இடத்தில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்ற சொன்ன பிறகும் இன்றைய ஒன்றிய அரசு மறுத்தபோது நம்முடைய நீதிமன்ற ஆணையையே நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் கோர்ட் அவமதிப்பு என்று ஒரு வழக்கு போட்டவுடன் அரசு பணிந்தது உடனடியாக நம்முடைய மாண்புடைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறிய நம்முடைய மாநில அரசுகள் வழங்குகின்ற இந்த இடத்திற்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தருகிறோம் என்று கூறிய ஒன்றிய அரசை அடிபணிய வைத்தது இன்றைய முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்
அந்த அடிப்படையில் தான் ஓபிசி சான்றிதழ் பெற்றவர்களுக்கு இந்தியா முழுவதும் யுஜி பிஜி பட்டமருத்துவம் முதுகலை பட்டப்படிப்பு மருத்துவத்தில் நான்காயிரத்தி இருபத்தி இரண்டு இடம் ஆண்டுதோறும் இந்திய அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்தது இன்றைய நம்முடைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அதேபோன்று பல் மருத்துவம் பிடிஎஸ் எம்டிஎஸ் ஆயிரம் இடங்கள் ஓபிசிக்கு 27% பெற்று தந்தவர் இப்போது2022 ஆண்டில் பெற்று 2023ல் இருந்து தொடர்ந்து தருகின்ற உத்தரவை பெற்றதும் இன்றைய முதல்வர்தான்
ஆகவே இட ஒதுக்கீடுதான் நம்முடைய உயிர் மூச்சு 69 சதவீத இட ஒதுக்கீடை தந்ததும் தலைவர் கருணாநிதிதான் தந்தார் 50க்கு மேல் கிடையாது என்றார்கள் 69% பெற்று தந்தார் ஆனால் அது யாருக்கும் தெரியாது 10% இட ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றிய அரசினுடைய 10 சதவீத இட ஒதுக்கீடு நியாயமா என்று பாருங்கள்
ரூ. 8 லட்சம் மதிப்பீடு உள்ள மிகக் குறைந்த வருமானம் உள்ளவர்கள் என்றால் அன்றாடம் நம்முடைய மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் 30 லட்சம் பேர்களுக்கு ஏழைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார் அவர் வீட்டுப் பிள்ளை பணக்கார பிள்ளையா 100 நாள் வேலை ஒரு நாள் வேலைக்கு 250 ரூபாய் நூறு நாள் என்றால் ஆண்டு முழுவதும் இருபதைந்தாயிரம் பெறுகின்ற ஒரு பெண்மணி உடைய பிள்ளை முன்னேறிய பிள்ளையா வசதி படைத்த வீட்டு பிள்ளையா ஆகவே நீங்களே எல்லாரும் சிந்தித்து பாருங்கள் படித்தவர்கள் பண்புள்ளவர்கள் நாமெல்லாம் தமிழகத்தில் இருந்து வந்திருக்கின்றோம் நமக்கு ஒரு முதல்வர் கிடைத்திருக்கின்றார் ஏன் எதற்கு என்று கேட்கின்றார் ஒன்றும் இல்லை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் சமூக நீதிக்கு வித்திட்ட காரணத்தினால் இந்திய அளவில் உள்ள அனைத்து தலைவர்களும் நம்முடைய மாண்புமிகு முதல்வர் தலைமையில் ஜூம் மீட்டிங்ல இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும் சமூக நீதிகள் நம்முடைய மாண்புமிகு முதல்வர் தலைமையில் அனைத்து மாநிலத்தில் உள்ளவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் இதுதான் சமூக நீதி அதற்கு வித்திட்டவர் இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்அவர் வழி நடப்போம்
அவர் தந்திருக்கின்ற சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை தலைவணங்கி உங்களுக்கெல்லாம் நான் இருக்கின்றேன் தைரியம் ஊட்டிய நமது அயலக தமிழர் நலவாரிய வாரியம் தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி நன்றி என்று கூறி தம்பி மீரான் அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்