மும்பையில் இருந்து 275 கிமீ தொலைவில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள திவாரி அணை நேற்றிரவு திடீரென உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
அணைக்கு அருகில் உள்ள 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களைக் காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள 7 கிராமங்களை சூழ்ந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட அதிகாரிகள், போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட கூடுதல் மீட்புக் குழுக்களும் விரைந்து பணியாற்றி வருகின்றன.
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும், 300 முதல் 400 மிமீ மழை அளவு பதிவாகியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பெரும் மழையாகும்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முந்தைய மோடியின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஜே.பி.நட்டா, பாஜகவின் செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சர் பாஜகவின் பல மாநில தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் என்பதால் அவரே தலைவராக தொடர்கிறார். அமித்ஷாவின் பணிகளை பகிர்ந்துகொண்டு செயல்பட, ஜே.பி.நட்டா செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். காரரான நட்டா, ஏபிவிபி மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர், 2010ம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் ராஜ்யசபாவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது