01 Sep 2022 10:05 pmFeatured
ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது ஒரு ஒப்பந்தமாகும். அதன்படி ஐஆர்சிடிசி அல்லது இந்திய ரெயில்வே வாடிக்கையாளருக்கு சேவை வழங்குவதாக உறுதி அளிக்கிறது. முன்பதிவை ரத்து செய்யும் போது ஜிஎஸ்டி விதிக்கப்படும். ரத்து கட்டணம் என்பது செலுத்தப்படும் தொகை ஆதலால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணங்களின் போது ஏசி வகுப்புகளில் முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு உறுதி செய்யப்பட்ட பின் பயணிகள் தங்கள் பயணத்தை ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணமாக இதுவரை பிடிக்கப்பட்ட தொகையில் இனிமேல் 5% ஜிஎஸ்டி சேர்த்து பிடிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் வரி ஆய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், அதற்கான கட்டணத்துடன் கூடுதலாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி முதல் வகுப்பு ஏசி பெட்டியில் முன் பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 240 ரூபாயுடன் சேர்த்து 5% ஜிஎஸ்டியுடன் 252 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும்
இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் முன் பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 200 ரூபாயுடன் சேர்த்து 5% ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் எனவும், மூன்றாம் வகுப்பு பெட்டியில் முன்பதிவு செய்து ரத்து செய்தால் ரத்து செய்ததற்கான கட்டணம் 180 ரூபாயுடன் 5% ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு இருக்கை பயணச்சீட்டு (Sitting) முன்பதிவு ரத்து செய்தால் ஜிஎஸ்டி வசூல் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.