15 Apr 2020 9:31 pmFeatured
பத்லாபூர் கிழக்கில் உள்ள ஷிர்காவ் பகுதியிலுள்ள மோஹ்காவ் என்ற கிராமத்திற்கு போகும் வழியில், கடும் வெய்யிலில் வெட்ட வெளியில் கூடாரம் போட்டு சுமார் 13 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பத்லாப்பூரில் வசித்துவரும் BARC யில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முனைவர் பா வெங்கடரமணி என்பவர் இவர்களின் நிலையறிந்து
BARC யில் பணிபுரிந்த அணுக்கரு இயற்பியல் விஞ்ஞானி ( Nuclear Physicist) முனைவர் C.S.பசுபதி அவர்களிடமும் நிதி உதவி பெற்று அதனுடன் தனது பங்களிப்பையும் சேர்த்து 13 குடும்பங்களுக்கும் தலா 400 ரூபாய் உதவிப்பணம் கொடுத்ததோடு காலை சிற்றுண்டியாக இட்லி,வடை சாம்பார்,சட்னி ஆகியவற்றை வழங்கி வந்துள்ளார்
சிற்றுண்டி வழங்கும் பொறுப்பை இட்லி - வடை வியாபாரம் செய்து கிடைக்கும் தினசரி வருமானத்தை இழந்த ஓரு தமிழ் குடும்பத்தினரான சபரிநாதன், குமாரி கீர்த்தனா மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி முனைவர் வெங்கடரமணியின் வேண்டுகோளின் பேரில், பத்லாபூர் மேற்கில் இயங்கி வரும் (மராத்தியர்களால் நடத்தப்பட்டுவரும்) உமேத் சேவா ஃபவுண்டேஷன் (Umed Seva Foundation) என்ற தன்னார்வலர் தொண்டு நிறுவனம்( NGO), இங்கு வசிக்கும் 13 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, 1லிட்டர் எண்ணெய் 1 கிலோ சர்க்கரை,உப்பு, மற்றும் மசாலா சாமான்கள், 1கிலோ உருளைக்கிழங்கு 1கிலோ வெங்காயம் போன்றவற்றை வழங்கியுள்ளது
முனைவர் C.S.பசுபதி மற்றும் உமேத் சேவா ஃபவுண்டேஷன் அமைப்பைச் சார்ந்த கமலாகர் துமால், சந்திப் குடே மற்றும் அமைப்பின் மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக முனைவர். வெங்கட ரமணி தெரிவித்தார்.
இக்கட்டில் இருக்கும் மக்களுக்கு தக்க உதவி செய்த முனைவர் பா வெங்கடரமணி, முனைவர் C.S.பசுபதி மற்றும் உமேத் சேவா ஃபவுண்டேஷன் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கும் அனைத்துத் தமிழர்கள் சார்பிலும் தென்னரசு குழுமத்தின் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும் உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.