27 Jun 2019 7:01 pmFeatured
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘லீக்‘ ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இந்த போட்டிக்கு முன் 416 இன்னிங்சில் 19963 சர்வதேச ரன்கள் குவித்திருந்தார். 37 ரன்கள் அடித்தால் விரைவாக 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பதிவு செய்யலாம் என்ற நிலையில் இன்றைய போட்டியில் களம் இறங்கினார். அவர் ஹோல்டர் வீசிய 25-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தபோது 37 ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்னைத் தொட்டர்.
இதன்மூலம் விரைவாக 20 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
20 ஆயிரம் ரன்னை விராட் கோலி 417-வது இன்னிங்சில் கடந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர், லாரா 453 இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்னை கடந்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது விராட் கோலி முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ் 20 ஆயிரம் ரன்னை தொட்டு இருந்தார்.
இந்த ரன்னை எடுத்த 3-வது இந்தியர், சர்வதேச அளவில் 12-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை கோலி பெறுவார்.