20 Mar 2020 11:28 amFeatured
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் முகமாக மத்திய இரயில்வே , மேற்கு இரயில்வே மற்றும் தானே-வாஷி-பன்வெல் ஹார்பார் வழித் தடங்களில் ஓடிக்கொண்டிருந்த குளிர்-வசதி கொண்ட இரயில்கள் (A/c Local Trains) இன்று முதல் (20.03.2020) அடுத்த அறிவிப்பு வரும் வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக சாதாரண இரயில்கள் இயக்கப்படும்.
அத்துடன் மக்கள் அதிகமாக வெளியேறுவதை தடுக்கும் முகமாக இரயில் பயணிகள் 53 வகையானோர் பெற்றுவந்த இலவச / சலுகைகளில் முதியோர் சலுகை உட்பட 38 சலுகைகள் ரத்துசெய்யப்படுகின்றன. மாணவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளின் 4 வகை சலுகைகள் மற்றும் 11 வகையான நோயாளிகளுக்கான சலுகைகள் உட்பட 15 வகை சலுகைகள் தவிர அனைத்து சலுகைகளும் இரத்து செய்யப்படுகின்றன.
இரயில்வே நடைமேடைகளில் கூட்டங்களை தவிர்க்கும் முகமாக நடைமேடை டிக்கெட் கட்டணம் தேவைப்படும் இரயில் நிலையங்களில் சூழ்நிலைக்கேற்ப 50 ரூபாயாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இரத்து செயப்பட்டுள்ள வெளியூர் இரயில்களுக்கான முன்பதிவு கட்டணம் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தேவைப்படின் லோக்கல் இரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என தெரிகிறது.