03 Jun 2023 2:02 pmFeatured
கவிஞர் பிரபு முத்துலிங்கம்
முத்தமிழ் சூரியனே
செந்தமிழ் நாயகனே
தாய் அஞ்சுகத்தின் கலைமகனே
ஓய்வரியா வித்தகனே…
உமது தாலாட்டு நாள்
எழுத்தாளர்களுக்கு
புதிய தினம்
ஆசிரியர்களுக்கு
வளர்ச்சி தினம்
இளைஞர்களுக்கு
எழுச்சி தினம்
தமிழ் மக்களுக்கு
மறுமலர்ச்சி தினம்…
உமது சொல் வளமும்
நாவின் கவி வளமும்
எழுதுகோல் மை வளமும்
உம்மிடத்தில் யாம் பெற்றோம்….
வையகத்தில் வாழ்தல் உம்போல்
உம் நிழலில் என்றும் இருப்போம்…
வாழ்கவே வளர்கவே
முத்தமிழ் காவலனே
தமிழர்களின் உதயசூரியனே…!!!
கவிஞர் இரா. சண்முகம், பரணம்பேடு.
புத்தம் புது பாணியிலே
கவிதா பரணங்களை
நித்தம் நித்தம் தமிழுக்கு
சூடிக் களித்திட்ட முத்தமிழ் வித்தகன் நீ்.
தம்பியர் படையுடனே
வீரு கொண்ட பற்றோடு
திக்கெட்டும் தமிழ் பரப்பி
வலம் வந்த முரசொலி நீ.
நெஞ்சுக்கு நீதி என
தள்ளாத வயதினிலும்
கொஞ்சமும் சோர்வின்றி
வாழ்வின் இறுதி வரை
தனித்துவமாய் வாழ்ந்தவன் நீ.
திருக்குறளுக்குப் பொருளுரையாக
அருமை உரைநடையில்
அறம் பொருள் இன்பமதை
அழகுதமிழ் வண்ணத்திலே
குறளோவியம் தீட்டிய
கருணையின் வடிவம் நீ.
உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
ஏழையின் சிரிப்பினிலே
இறைவனைக் கண்டவன் நீ.
கருணையும் நிதியும்
ஒன்றாய் இணைந்து
தமிழகத்தின் இருள் நீக்க
அரசியல் வானில்
உதித்தெழுந்து
என்றென்றும் ஒளிர்கின்ற
உதய சூரியன் நீ.
வாழ்க தமிழ்.
ஓங்குக கலைஞரின் புகழ்.