07 Aug 2019 9:31 amFeatured
-கவிமாமணி முனைவர் வதிலை பிரதாபன்
விழியோரம் வழிந்தோடும் விழிநீரே
வரலாறாய் வாழ்ந்தவர்தான் வருவாரோ!
உரிமைக்காய் உரமிட்ட உழைப்பாளி
வெள்ளிநிலா வந்ததனால் உறங்கினாரோ!
ஊரெல்லாம் உன்நினைப்பில் வேகையிலே
வேறிடத்து வரவேற்பில் விடைபெற்றாய்!
விண்ணதிர உனையெழுப்பும் உறவுகளை!
உடன்பிறப்பே வென்றொருமுறை விழிப்பாயோ!
விடைபெற்று விட்டாயோ விழிமூடி
வெள்ளிநிலா வேகிறதே விறகடுப்பில்!
உறக்கமது வரவில்லை உன்நினைப்பில்
உயர்வு காண வருவோர்க்கு வழியேது!
ஊருக்கே உழைத்திட்ட உன்னதரே
ஓரிரவும் ஒருயுகமாய் விரிகிறதே!
உன்விரலில் வலம்வந்த விந்தையொன்றை
ஒருநாளில் உனில்பெற்றேன் விளையாட்டாய்!
ஓருநொடியில் உற்றுத்தான் உனைப்பார்த்தேன்
ஒருயுகமும் ஓயாது உணர்வின்றி!
வருகின்ற வரலாறும் உனைப்போற்றும்
வான்முட்டி வழிந்தோடும் வகைக்கொன்றாய்!
வேறுதிசை விரும்பியதால் விடைபெற்றாய்!
வேரெவரின் உரிமைக்காய் விடைபெற்றாய்!