01 Jun 2023 9:56 pmFeatured
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க விழா வருகிற 04-06-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா குர்லா ஜெரிமெரி கிளை சார்பாக கழகப் பணிமனையான கலைஞர் மாளிகையில் வைத்துக் கொண்டாடப்படவுள்ளது.
புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத் துணைச்செயலாளர் அ.இளங்கோ தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் ஜெரிமெரி கிளைக்கழக செயலாளர் எஸ்.முருகன் வரவேற்புரை ஆற்றுகிறார்.
தி.மு.கழகத்தின் மகளிர் பிரச்சாரக்குழுச்செயலாளர் பேராசிரியர் நளினி சாரங்கன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
திராவிட இயக்கத்தின் சிந்தனைச் சிற்பிகளான தந்தை பெரியார் பேரரறிஞர் அண்ணா ஆகியோரின் வழித்தடங்களில் இனம் மொழி காத்த தீரராக வாழ்ந்து மறைந்த கலைஞரின் பிறந்தநாளான ஜூன் திங்கள் மூன்றாம் நாளை உலகெங்கும் வாழும் கழக உணர்வாளர்கள் நினைந்து வாழ்த்தி மகிழ்வதுண்டு. இந்த ஆண்டு வருகிற பிறந்தநாள் நூற்றாண்டின் தொடக்கமாக உள்ளதால் ஆண்டு முழுவதும் இயக்கம் சார்ந்தவர்களோடு இலக்கிய உணர்வாளர்களும் மொழியியல் வல்லுநர்களும் போற்றி மகிழவுள்ளனர்.
அத்தகு சிறப்பு வாய்ந்த கலைஞருக்கு மும்பைவாழ்த் தமிழர்களின் உணர்வோடு கலந்து மொழிகாக்கும் அமைப்பான மும்பை மாநில புறநகர் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் ஆங்காங்கே உள்ள பல்வேறு கிளைகளிலும் இனிய நாளாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிளைகளிலும் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் கொண்டாடப்படவுள்ளது.
முதல் நிகழ்வாக குர்லா ஜெரிமெரி கிளை சார்பாக நூற்றாண்டுத் தொடக்கவிழா நடைபெறவுள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தை மும்பை புறநகர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச்செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் திறந்து வைக்கிறார்
மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளர் அலிசேக் மீரான், மும்பை மாநில தி.மு.க பொறுப்பாளர் கருவூர் இரா .பழனிச்சாமி, புறநகர் தி.மு.கழக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்தகுமார், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் , மும்பை புறநகர் தி.மு.க இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லை பைந்தமிழ், தானே திமுகழக கி.வீரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.
மும்பை புறநகர் திமு கழகப் பொருளாளர் பி. கிருஷ்ணன், மும்பை மாநகரத் திமுகழக அவைத்தலைவர் வே. ம. உத்தமன், மும்பை புறநகர் தி.மு.கழக இலக்கிய அணிப் புரவலர் சோ.பா.குமரேசன், இளைஞரணி- துணை அமைப்பாளர் இரா. கணேசன், பிவாண்டிக் கிளைக் கழக செயலாளர் மெஹ்பூப் பாட்சா சேக், மும்பை திமுக மேனாள் பொருளாளர் எஸ்.பி.செழியன்,
டோம்பிவிலி கிளைக்கழக செயலாளர் வீரை சோ. பாபு, தானே திமுக செயலாளர் பாலமுருகன் முலுண்ட் தி.மு.கழக செயலாளர் பெருமாள் எஸ். பிவாண்டி திமுக பொருளாளர் முஸ்தாக் அலி, ஆரே காலணி திமு.கழகம் தர்மலிங்கம், பொய்சர் மூர்த்தி, ஜாகிர்உசேன், தமிழினநேசன், எஸ்.முத்துக்குமார், பால் துரை, ஏ.சி.காதர், மனோகர், மீனாட்சி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
ஜெரிமெரி கிளைக்கழகத்தைச் சார்ந்த கே.ஜெகநாதன் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெருகிறது.
அனைத்துக் கழக உணர்வாளர்களும் நிகழ்வில் கலந்து மகிழும்படி விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.