08 Aug 2021 4:56 amFeatured
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 3ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மும்பை புறநகர் திமுகவின் பல்வேறு கிளைகள் சார்பில் நினைவேந்தல் கூட்டங்களும் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலியும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பாண்டுப் கிளை
மும்பை புறநகர் திமுக, பாண்டுப் கிளை சார்பாக பம்பாய் திருவள்ளுவர் மன்றம், கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவு அரங்கில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் 3ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மும்பை புறநகர் திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இந்தியப் பேனாநண்பர் பேரவை தலைவர் மா. கருண்,
மராத்திய மாநிலத் தமிழ்ச் சங்கம் தலைவர் எஸ். அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஜ. ராஜா இளங்கோ, பிரைட் இளநிலைக் கல்லூரி முதல்வர் செலின் ஜேக்கப், இன்பேன்ட் ஜீசஸ் ஆங்கிலப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெஸ்டின் ஜேம்ஸ்,
மும்பை பகுத்தறிவாளர் கழகம் தலைவர் அ. ரவிச்சந்திரன், தமிழ்ச் சங்கம் பாண்டுப் தலைவர் ச.சி. தாசன், மும்பை தமிழ் மன்றம் செயலாளர் பேலஸ்துரை, திமுக பேச்சாளர் முகமதலி ஜின்னா,
தொழிலதிபர் எஸ்.பாலன், கே. பி. கன்னடா இளநிலைக் கல்லூரி முதல்வர் எல். ராதாகிருஷ்ணன், பாண்டுப் கிளைக் கழக நிர்வாகிகள் ராமன், பூமாரி, பொன்னுதுரை, செபஸ்டியான், சுப்பையா, பாண்டியன், முகுந்தன்மற்றும் பள்ளி ஆசிரியைகள் புகழ் வணக்கம் செலுத்தினர். நிகழ்வை பேராசிரியர் ஈ. குமாரசெல்வன் நெறியாள்கை செய்தார்
ஜெரிமெரி கிளை
மும்பை புறநகர் மாநில தி.மு.க ஜெரிமெரி கிளை சார்பாக நடைபெற்ற கலைஞர் நினைவேந்தல் நிகழ்வினை மாநில செயலாளர் அலிசேக் மீரான் தலைமையேற்று 15க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
துணைச்செயலாளர் அ.இளங்கோ இலக்கிய அணி அமைப்பாளர் வ.ரா.தமிழ்நேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கந்தசாமி செந்தில் சிவகாமன், திலக்ராஜ், அல்வின், கோவிந்தன், சு.சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பிவாண்டி கிளை
தலைவர் கலைஞர் அவர்களின் மூன்றாவது நினைவு தினத்தை முன்னிட்டு மும்பை புறநகர் திமுக பிவண்டி கிளை சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது இதில் மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் துணை அமைப்பாளர் கணேசன் இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜெயினுலாபுதீன் கிளைச் செயலாளர் மெகபூப பாஷா அவைத்தலைவர் முகமதலி பொருளாளர் முஷ்டாக் அலி கிளை நிர்வாகிகள் சம்பத் செந்தில்குமார் மற்றும் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
கல்யான் அம்பர்நாத் கிளைகள்
கல்யான் அம்பர்நாத் கிளைகள் சார்பாக நடந்த நினைவேந்தல் நிகழ்வு மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலாளர் வதிலை பிரதாபன் தலைமையில் நடந்தது.
இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், அம்பர்நாத் கிளைச் செயலாளர் ஜஸ்டின்,
முத்தமிழ் தண்டபானி, பெருமாள், ரெங்கன், சூர்யா, பவன், ராகுல், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
கோரேகான் கிளை
இலக்கிய அணி்ப் புரவலர் எஸ்.பி.குமரேசன் கோரேகான் கிளைச்செயலாளர் த.விஜயகுமார்,ராஜா, சேவியர், மணி, ராஜு, முத்து மற்றும் பலர் கலந்து கொண்டு கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
ஜோகேஸ்வரி கிளை
ஜோகேஸ்வரி கிளை சார்பாக தமிழினநேசன், ரமேஷ், நூர் மொகம்மத், சையத் அலி, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்
டோம்பிவிலி கிளைச்செயலாளர் வீரை சோ பாபு கலைஞர் திருவுருவுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பாண்டுப் கிளைச்செயலாளர் கு.மாரியப்பன் கலைஞர் திருவுருவுப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
மற்றும் சீதாகேம்ப், ஆரே காலனி, அந்தேரி அண்ணா நகர் , நேரு நகர், மலாட், காச்பாடா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கலைஞர் நினைவுநாளில் மலர்தூவி மரியாதை செய்தனர்.