05 Aug 2019 12:05 pmFeatured
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் அறிவிப்புக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குடியரசு தலைவர் ஒப்புதல்
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கி குடியரசு தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 370-வது சட்டப்பிரிவை நீக்கும் உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தங்கள் இனி ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் என குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார்.