27 Jun 2023 11:17 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்தியது
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் பட்டிமன்றம், கவியரங்கம், இசையரங்கம் நிகழ்ச்சி 25-06-2023 அன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை முலுண்ட் மேற்கு ஆஸ்தா மருத்துவமனை அருகே உள்ள பம்பாய் நகரத்தார் சமூக மற்றும் கலாச்சார சங்க அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் எழுத்தாளர் மன்ற புரவலர் சேதுராமன் சாத்தப்பன் தலைமை தாங்கினார், தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தொடக்கவுரையாற்றினார். அவரை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அலிஷேக் மீரான் மகிழ்ச்சி உரையாற்றினார். முன்னதாக மன்ற பொதுச் செயலாளர் அமலா ஸ்டேன்லி வரவேற்று பேசினார். மும்பை பிரபலங்கள் பலரும் முன்னிலை வகித்தனர்.
இசை அரங்கம்
நிகழ்வின் துவக்கமாக மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் கலைப்பிரிவின் இசை அரங்கம் நடைபெற்றது காலத்தை வென்ற கவிஞன் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த இசை அரங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ் நரசிம்மன், பாடகர்கள் சாய்முரளி மல்லிகா, முத்துக்குமார், சத்யநாராயண், லதா சுரேஷ் மற்றும் இசை அமைப்பாளர் ஆர்.டி ராஜன் குழுவினர் ஆகியோர் பங்கேற்றார்கள்.
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவரும், திரைப்பட இயக்குனருமான முனைவர் யார் கண்ணன் நடுவராக கலந்து கொண்டார்.
கவியரங்கம்
’கண்ணதாசன் ஓர் ஆசான்’ என்ற தலைப்பில் பாவலர் முகவை திருநாதன், கண்ணதாசன் ஒரு சகோதரன் என்ற தலைப்பில் கவிஞர் இரஜகை நிலவன், கண்ணதாசன் ஒரு காவலன் என்ற தலைப்பில் கவிஞர் வ.ரா தமிழ்நேசன், கண்ணதாசன் ஒரு மாணவன் என்ற தலைப்பில் கவிஞர் சாந்தாராம், கண்ணதாசன் ஒரு தோழன் என்ற தலைப்பில் கவிஞர் வெங்கட் சுப்ரமண்யன், கண்ணதாசன் ஓர் இறைவன் என்ற தலைப்பில் கவிஞர் ஆறுமுகப் பெருமாள், கண்ணதாசன் ஒரு காதலன் என்ற தலைப்பில் கவிஞர் இராமர் பாஸ்கரன், கண்ணதாசன் ஒரு வழிகாட்டி என்ற தலைப்பில் கவிஞர் சே.குணவேந்தன், கண்ணதாசன் ஒரு தூதுவன் என்ற தலைப்பில் தொல்காப்பியன் சிவராசன் ஆகியோர் கவி பாடினார்கள்.
பட்டிமன்றம்
கவியரசு கண்ணதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தத்துவமா? காதலா? பாசமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. தத்துவமே என கல்வியாளர் அமலா ஸ்டேன்லி, நற்றமிழ் நாவரசி பிரவினா சேகர், கவிஞர் இரா. முருகன் ஆகியோரும், காதலே என சொற்போர் திலகம் புவனா வெங்கட், சொல்லேருழவர் மிக்கேல் அந்தோணி, நிர்வாகக்குழு செயலாளர் வே. சதானந்தன் ஆகியோரும், பாசமே என உரைத்தென்றல் கி.வேங்கடராமன், முன்னணி பேச்சாளர் மீனாட்சி முத்துகுமார், செல்வி யாமினிஸ்ரீ குணசேகரன் ஆகியோரும் வாதிட்டார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். கனமழையையும் பொருட்படுத்தாமல் பெருவாரியாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்