23 Nov 2019 10:32 amFeatured
மும்பை இரயில் பயணிகள் நலச்சங்கம் Dr.எஸ்.அண்ணாமலை அவர்களை தலைவராகவும் டி.அப்பாதுரை அவர்களை பொதுச் செயலாளராகவும் கொண்டு மும்பை வாழ் தமிழ் இரயில் பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவர்களின் நலப்பணிகளில் மற்றுமொரு மைல் கல்லாக நாகர்கோவில் இரயில் பயணிகள் பலநாள் அனுபவித்துவந்த இன்னல்களிலிருந்து ஆறுதல் அளித்துள்ளது.
அதிவேக புதிய எல்,எச்.பி பெட்டிகள் இணைப்பு.
மும்பை இரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் Dr.எஸ்.அண்ணாமலை மற்றும் பொதுச் செயலாளர் டி.அப்பாதுரை விடுத்துள்ள அறிக்கை.
1995ல் இருந்து வண்டி எண் 16339-வாரம் 4 நாட்கள் சேலம்,கிருஷ்ணராஜபுரம் வழியாகவும், வண்டி எண்-16351 வாரம் 2 நாட்கள் திருச்சி,ரேணிகுண்டா வழியாக என வாரத்தில் மொத்தம் 6 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது,
நாகர்கோவில் மும்பை இடையே இயக்கப்பட்டு வரும் இந்த இரயில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் ஒரே முக்கிய இரயில் ஆகும். பல ஆண்டுகள் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தும் மிகவும் பழைய பெட்டிகளை கொண்டு இயக்கப்பட்டு வந்ததால் மக்கள் பிரயாணத்தில் பல இன்னல்களை அனுபவித்துவந்தனர்.
ஜூலை மாதம் மும்பை தமிழின இரயில் பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் டி.அப்பாதுரை நிர்வாகிகளுடன் டெல்லியில் தமிழக எம்.பிக்கள்,அதிகாரிகள், தென்னக இரயில்வே பொதுமேலாளர், திருவனந்தபுரம் எம்பிக்கள் கூட்டத்திலும் மனுகொடுத்தனர்,
இந்நிலையில் தென்னக இரயில்வே வெள்ளி முதல் (22/11/2019) மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் புதிய எல்.எச்.பி. பெட்டிகளுடன் நாகர்கோவில்-மும்பை முதல் இரயிலை நாகர்கோவிலில் இருந்து காலை ஆறு மணிக்கு இயக்குகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
20 பெட்டிகள்
இந்த இரயிலில் 10 ஸ்லீப்பர்,4 மூன்றடுக்கு ஏசி, ஒரு 2 அடுக்கு ஏசி,, 2 பொது, 1 உணவு தயாரிக்கும் பெட்டி (பேண்ட்ரி), மற்றும் 2 கார்டு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் அனைத்து பெட்டிகளும் புது பெட்டிகளாக மாற்றப்பட்டு, நேரம் மாற்றப்பட்டு வேகத்தை கூட்டி சேலம் நாமக்கல் வழியாக தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.