11 Apr 2020 8:18 pmFeatured
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவிலும் அதிக அளவில் கரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்றும் குறைந்த பட்சம் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.