17 Nov 2024 7:23 amFeatured
சயான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளருக்கு பரப்புரை
இந்தியாவின் வர்த்தக மையமாக கருதப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ்-உத்தவ் தாக்ரேவின் சிவசேனா கட்சியின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது
இந்நிலையில் சயான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக வள்ளியூரை சேர்ந்த தமிழரான கணேஷ் குமார் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் மற்றும் திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் ஏற்கனவே பிரச்சாரம் செய்தனர்,
இந்நிலையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை கணேஷ் குமாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.
அத்துடன் வள்ளியூரை சார்ந்தவரும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை அமைப்பாளர் மற்றும் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளருமான நம்பிராஜன் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்
மும்பை புறநகர் மாநில திமுக மாநிலச் செயலாளர் அலிசேக் மீரான், மற்றும் மும்பை இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்தக்குமார், மூத்த திமுக பிரமுகரும் டோம்பிவிலி கிளைக்கழக செயலாளருமான வீரை சோ பாபு, ஆரே காலனி திமுக செயலாளர் சிவக்குமார் ,மற்றும் திமுக தோழர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை யை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து அவருக்கு மரியாதை செய்தனர்
பின்னர் தாராவி தொகுதியில் போட்டியிடுகின்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி கெய்க்வாட் அவர்களை ஆதரித்து தாராவி கல்யாண்வாடி பகுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினரும் மும்பை பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவியுமான திருமதி வர்ஷா காய்க்வாட் M.P.அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனர்
தமிழர்களுடன் மிக நெருக்கமாக இருந்த மறைந்த கெய்க்வாட்MP அவர்களின் புதல்வியும் கனிமொழி MP அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவருமான வர்ஷா காய்க்வாட்அவர்களையும் சந்தித்து மரியாதை செய்து தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்
இன்று கோரேகான், ஜோகேஷ்வரி பகுதிக்கு செல்லவிருப்பதாக மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக்மீரான் தெரிவித்துள்ளார்.
Prompt news.