26 Nov 2023 2:29 amFeatured
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் மன்றத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கணேசன் எழுதிய இரண்டு நூல்களின் அறிமுகம் மற்றும் ஆய்வரங்கம் இன்று (26.11.2023 ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் முலுண்டில் உள்ள பம்பாய் நகரத்தார் சோசியல் அண்ட் கல்ச்சுரல் அசோசியேசன் அரங்கத்தில் வைத்து நடைபெறவிருக்கிறது.
பம்பாய் திருவள்ளுவர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜேம்ஸ் தேவதாசன் நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார். மன்றத்தின் நிர்வாக குழு செயலாளர் வே.சதானந்தன் வரவேற்புரையாற்றுகிறார்.
மன்றத்தின் ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன் மற்றும் மும்பை தமிழ் சங்கத்தின் தலைவர் எஸ்.ராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நூல் ஆசிரியர் பற்றி பாரதி கணேசன் அவர்கள் உரையாற்றுகிறார்கள்
வழக்கறிஞர் கணேசனின் வள்ளுவத்தில் நூல் அறிவும் பேரறிவும் மற்றும் கலைஞர் கருணாநிதியும் சாக்ரடீசும் ஆகிய இரண்டு நூல்களை பற்றி முறையே மன்றத்தின் முன்னணி பேச்சாளர்களான கி.வேங்கட ராமன் மற்றும் செல்வி ராஜ் ஆகியோர் ஆய்வுரையாற்றுகின்றனர்.
நூலாசிரியர் வழக்கறிஞர் கணேசன் ஏற்புரையாற்றுகின்றார்.
மன்றத்தின் நிர்வாக குழு துணை பொருளாளர் வெங்கட் சுப்பிரமணியன் நன்றியுரையாற்றுகிறார்.
நிகழ்வில் பி.கிருஷ்ணன், பெ.கணேசன் அ.இளங்கோ, வ.ரா. தமிழ்நேசன் ந.வசந்தகுமார், அ.ரவிச்சந்திரன், பு.தேவராஜன், ஜைனுலாப்தின் அ. பாலசுப்பிரமணியன், இரா.கணேசன், வீரை சோ பாபு, மெஹபூப் பாஷா ஷேக், முகமது அலி, பாலமுருகன், எஸ் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்க மும்பை வாழ் தமிழ் ஆர்வலர்களும் இலக்கிய பற்றாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பிக்கிறார்கள்.
நிகழ்வினை மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளார்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மன்ற நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.