02 Oct 2019 12:37 amFeatured
அகிம்சையின் வழி நின்று வெள்ளையர்களை வெளியேற்றியவர்
சட்டம் படித்தவர், சத்தியம் நிலைக்க "சத்தியாகிரகம்" செய்தவர்.
ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளப்பட்டு, இந்திய தேசியப் போராட்டத்திற்கு உள்ளே வந்தவர்.
உண்மை, நேர்மை, வெல்லும் என்று இவர் காத்த அமைதி போராட்டம். ஆங்கிலேயர்களினால் அமைதியான நள்ளிரவில் இந்தியாவிற்கு ஒளியேற்ற உதவியது.
நம் ஒவ்வொருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி தவழ்ந்திட காரணமாக இருந்து அச்சடித்த காகிதங்களிலும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் காந்தியைப் பற்றிய இந்த தகவல்களை அவரது 150வது பிறந்த நாளில் அறிந்துகொள்வோம்
4. பிரிட்டனின் ஆதிக்கத்திற்கு எதிராக காந்தி போராடினார்.ஆனால் அவர் இறந்து 21 ஆண்டுகளுக்குப் பின் அவரை தபால் தலை வெளியிட்டு கௌரவப் படுத்தியது இங்கிலாந்து
5. காந்தி நடைப் பயணத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.அவர் வாழ் நாள் முழுதும் நடந்து சென்ற தூரத்தை கணக்கிட்டால் உலகை ஒருமுறை சுற்றி வந்து விடலாம் என்கிறார்கள்.
6. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் போன்றவர்களோடு மட்டுமல்லாது ஹிட்லருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்
7. ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் மீது அபிமானம் கொண்டவர். அவர் காந்தி அணிந்தது போன்ற மூக்குக் கண்ணாடியை அணிந்து பெருமிதம் கொண்டார் .
8. காந்தியின் ஆங்கில பேச்சு ஐரிஷ் பாணியில் இருக்கும். காரணம் அவரது ஆரம்ப கால ஆசிரியர் ஒரு ஐரிஷ் காரர் .
9. இந்தியாவில் 53 பெரிய சாலைகளுக்கு காந்தியின் பெயர் வைக்கப் பட்டுள்ளது . காந்தி பெயர் வைக்கப் பட்டுள்ள சிறிய சாலைகள் தெருக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை. வெளிநாடு களிலும் 48 சாலைகள் அவர் பெயரைத் தாங்கி உள்ளன
10. காந்தி தென் ஆப்ரிக்காவில் மூன்று கால் பந்தாட்டக் குழுக்களை உருவாக்கினர் . அதன் பெயர் Passive Resisters Soccer Club
11. காந்தியைப் பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் ரிச்சர்ட் அட்டன் பாரோ இயக்கிய காந்திதான் என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் 1940களில் தமிழரான ஏ.கே.செட்டியார் காந்தியைப் பற்றிய ஆவணப் படத்தை தமிழில் தயாரித்தார் இதற்காக பல நாடுகளுக்கும் பயணம் செய்து படச் சுருள்களை சேகரித்து படத்தை உருவாக்கினார். ஆனால் அப்போதைய ஆங்கில அரசுக்கு அஞ்சி இப்படத்தை வெளியிட எத்திரையங்கும் முன் வரவில்லை . 1948 இல் சுந்திர தினத்தன்று இத் திரைப்படம் டில்லியில் இந்தி மொழியில் வெளியிடப் பட்டது, பின்னரே தமிழிலும் வெளியிடப்பட்டது
12. காந்தியடிகளின் மனதில் ஒத்துழையாமை இயக்கத்தின் வித்தை விதைத்தது ஹென்றி சால்ட் என்பவர் எழுதிய ஹென்றி டேவிட் தொரேயூ என்பவரைப் பற்றிய நூலேயாகும். ஹென்றி டேவிட் ஒரு அமெரிக்கர். அநியாயமாக விதிக்கப் பட்ட வரிகளை செலுத்த மறுத்தவர்.அதனால் சிறையில் அடைக்கப் பட்டவர் .அங்கிருந்தே ஒத்துழையாமை பற்றி எழுதினார் .
13. காந்தி புகைப்படம் எடுக்கப் படுவதை விரும்புவதில்லை எனினும் அக்காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப் பட்ட மனிதராகத் திகழ்ந்தார் ..
14. மாற்றுக் கருத்து கொண்டிருந்தபோதும் சுபாஷ் சந்திரபோஸ் தான் காந்தியை இந்தியாவின் தந்தை என்று முதலில் அழைத்தார்
15. காந்தியை மகாத்மா என்று முதலில் அழைத்தவர் ரபீந்திரநாத் தாகூர்
16. காந்தி 1930 இல் டைம் இதழின் TIME PERSON OF THE YEAR என்ற பட்டத்தை பெற்றார். இந்த பெருமையை அடைந்த ஒரே இந்தியர் காந்தி மட்டுமே
17. காந்தி குழந்தை பருவத்தில் மிகவும் தயக்கமான சுபாவம் கொண்டவராம். யாருடனும் பேசமாட்டாராம். அவ்வப்போது பள்ளியில் இருந்து இதன் காரணமாக வீட்டிற்கு ஓடிவிடுவாராம். இதை காந்தியே அவரது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
18. காந்தி அவர்கள் சவுத் ஆப்ரிக்காவில் வேலை செய்த போது அவரது ஊதியம் வருடத்திற்கு $15000' களாம்.
19. காந்திக்கு அவரது தாய் மொழியான குஜராத்தி மொழியின் மீது அதீத பற்று இருந்தது. இதன் காரணத்தால், தனது சுயசரிதையை குஜராத்தியில் தான் முதன் முதலில் எழுதினார். பின்பு அவரது உதவியாளர்கள் அதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்தனர்.
20. தனக்கு அதிகமான ஆளுமையும், அதிகாரமும் இருந்தும் கூட காந்தி விமானத்தில் பயணம் செய்யவில்லை. அதை அவர் தவிர்த்து வந்தார். ஏனெனில், காந்தி மிகவும் எளிமையானவர்.
21. காந்தி பிறந்தது, இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது மற்றும் காந்தி கொல்லப்பட்டது அனைத்துமே வெள்ளிக்கிழமையன்று தான்.
22. பள்ளி பருவத்தில் இருந்தே காந்தி அதிகமாக வருத்தப்பட்டது அவரது அழகில்லா கையெழுத்தை நினைத்து தான். இதை அவரே பல முறை குறிப்பிட்டிருக்கிறார்.
23. பொக்கை வாய் சிரிப்பை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் காந்தி பல் செட்டு வைத்திருந்தார். என்றால் நம்பமுடியுமா ஆம் அதை அவர் சாப்பிடும் போது மட்டும் பயன்படுத்திவிட்டு, பிறகு கழற்றி வைத்துவிடுவார்.
24. காந்திஜிக்கு சிறு வயதில் பாம்பு பயமும் திருடர் பயமும் அதிகம். அத்துடன் இருட்டைக் கண்டால் காந்திஜி நடுநடுங்கிப் போவார். இருட்டில், கண்ணை மூடினால் பிசாசுகள் நிறைய வருவதாகவும் எண்ணி நடுங்குவார்.
25. அவரது செவிலித்தாயாக இருந்த அரம்பை என்ற பெண்மணிதான் அவரின் பயத்தை போக்க ராம் ராம் என்று உச்சரிக்க கற்றுக் கொடுத்தவர் ஆவார். அதன் படி அவரது அச்சம் படிப்படியாக அகன்றது அவர் இறக்கும் தருணத்திலும் ‘ஹே ராம்’ என்று ராமர் பெயரை கூறிக்கொண்டேதான் இறந்தார்.