02 Nov 2019 1:00 amFeatured
தமிழ் எழுத்தாளர் மன்றம்-மராட்டிய மாநிலம் சார்பில் இன்று (02-11.2019) மாலை 4 மணிக்கு பாண்டுப் மேற்கில் உள்ள பிரைட் உயர்நிலைப் பள்ளியில் மலேசியா சகோதரிகள் வழங்கும் தமிழிசைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மலேசியா சகோதரிகளான
பண்ணிசைமணி Dr.பண்பரசி கோவிந்தசாமி,
இன்னிசை வாணி கனிமொழி கோவிந்தசாமி ஆகிய இருவரும் இணைந்து தமிழிசைப் பாடல்களை பாட உள்ளனர்.
தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமை தாங்குகிறார்.
மன்ற நிர்வாகிகள், புரவலர்கள்,ஆலோசகர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
இசைப்பிரியர்களும் பெரும்வாரியாக கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி மன்ற நிர்வாகிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
மும்பை தமிழர்களுக்கு
மலேசிய சகோதரிகள் பற்றிய அறிமுகம்
பயிற்சியும் அரங்கேற்றமும்
சகோதரிகள் இருவரும் தமிழ்நாடு சென்னையில் பாலக்காடு குரு ஸ்ரீமதி நந்தினி சங்கர் அவர்களிடம் கர்நாடக இசை பயின்று அரங்கேற்றம் பெற்றதோடு, தமிழ்நாடு குரு கலைமணி ஸ்ரீமதி இந்திரா ராஜனிடம் . பரதம், நட்டுவாங்கம் ஆகிய பயிற்சி பெற்றனர். இவ்விருவரின் அரங்கேற்றம் சென்னையில் தொழிலதிபர் வி.ஜி.பி சந்தோஷம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பெற்ற பரிசுகள்
1992 ஆம் ஆண்டு மலேசிய இந்து சங்கம் நடத்திய தேசிய திருமுறை போட்டி மற்றும் திவ்ய பிரபந்தம் போட்டியிலும் தங்கப் பதக்கங்களை முறையே மேனாள் பொதுப் பணி அமைச்சர் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ எஸ். சாமிவேலு அவர்களிடமும் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களிடமும் பெற்றவர்கள்
Dr. பண்பரசி ஆண்டுதோறும் தேசிய திருமுறை நீதிபதிகளுக்கான பண்ணிசைப் பயிற்சியினை வழங்கிவருகிறோர். மலேசிய இந்து சங்கம் தேசிய நிலையில் இவ்வாய்ப்பினை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சிறப்பு
சகோதரிகள் இருவரின் தமிழிசை கச்சேரி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவின் கலைஞர் தொலைக்காட்சியில் போங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பபட்டது. மேலும், சகோதரிகள் இருவரின் கலையுலக பயணத்தை பற்றியும் கல்வித் துறையில் சாதனைகளைப் பற்றியும் நேர்கோணல் ASTRO விழுதுகள் நிகழ்ச்சி, மின்னல் FM, மற்றும் RTM 2 தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களில் ஒளிபரப்பபட்டது.
சகோதரிகள் இருவரும் படைத்த பண்மாலை திருமுறை கச்சேரி சிறப்பு நிகழ்ச்சியோக 1 மணி நேரம் ASTROவில் ஒளிபரப்பப்பட்டது மட்டுமல்லாமல் ஆஸ்ட்ரோ (ASTRO) நடத்திய ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்’ நிகழ்ச்சியில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற பாடலைப் பாடி பாராட்டுப் பெற்றனர்.
விருதுகள்
சகோதரிகள் இருவரும் இந்தியாவில் பெற்ற 10 பல்வேறு விருதுகளில் ‘தெய்வீக பண்ணரசி’, ‘இன்னிசை வாணி’, ‘BEST SINGERS’, ஆகிய விருதுகள் இவர்களின் கலை பயணத்தில் குறிப்பிடத்தக்கவையாகும். சமீபத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெய்வீக கலையினை சர்வதேச அளவில் பரப்பும் இவர்களின் அயரா உழைப்பிற்காக இச்சகோதரிகள் இருவருக்கும் Sri Krishna Sweets- இன் தலைமை நிர்வாக அதிகோரி (CEO) , திரு முரளி ‘மதி ஒளி’ என்ற விருதினை வழங்கி சிறப்பித்தார். இவ்வாண்டு சகோதரிகள் இருவரின் மூன்றோவது இசைக் குறுந்தட்டு இந்தியா முழுவதும் ‘Sri Krishna Sweets’ நிர்வாகத்தினரால் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வியும் தொழிலும்
கலைத்துறையில் மட்டுமின்றி கல்வித்துறையில் Dr. பண்பரசி போறியியல் (Civil Engineering) முனைவர் PhD பயிற்சியை UKM பல்கலைகழகத்தில் பயின்று முடித்துள்ளோர். குமோரி கனிமொழி கோவிந்தசாமி ஆங்கில மொழியியல் துறை UPSI யில் பயின்ற முதுகலைப் பட்டதாரி ஆவார்.
தற்போது Dr பண்பரசி - POLITEKNIK UNGKU OMAR (PUO), Ipoh யில் Civil Engineering Department விரிவுரையாளராக பணியாற்றி வருகிறோர். கனிமொழி Universiti Tun Abdul Razak (UTAR), Kampar யில் ஆங்கிலத்துறை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
கலைச்சேவை
ஸ்வரலயா சங்கீத கலாலயம் என்ற மன்றத்தை நிறுவி சங்கீதம் பரதம், வயலின் மற்றும் சமய வகுப்புகளை Ipoh & Sitiawan யில் நடத்தி வருகின்றனர். மேலும் ‘Ipoh அன்பு இல்லம்’, ‘Sitiawan கருணை இல்லம்’ இவற்றில் மாணவிகளை தேர்ந்தெடுத்து இலவச பரதம், சங்கீத பயிற்சி அளிக்கின்றனர்.