Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மாமுனிவர் மயன் வரலாறு

18 Jan 2025 8:02 amFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!
மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி. இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திறம்

            மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் கடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி.  இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம், ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக, இந்திய ஒன்றிய அரசின் பத்மபூஷண் விருது பெற்ற, கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை, சென்னை வள்ளுவர் கோட்டம் போன்ற புகழ் பெற்ற கட்டடங்களையும் சிலைகளையும் வடிவமைத்தவருமான புகழ் பெற்ற சிற்பியும், இவரின் மூத்தோன் என்றும் முதற்சிற்பி என்றும் அறியப்படும் மயன் என்பவருக்கு மாமல்லபுரத்தில் சிலை எழுப்பியவருமான கணபதி சிற்பியும் அவரைப் பின்பற்றுபவோர் எழுதிய நூல்கள் மூலம் அறியலாம். மயனே தமிழர்களின் கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும், ஓவியக் கலைக்கும், வானியற் கலைக்கும், மரக் கலைக்கும் தந்தை ஆவார்.   அவர் எக்கலைகளிலும் வல்லவர் என்பதை பழந்தமிழ்க் கலை நூல்கள் சொல்கின்றன. 

 மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை “செந்தமிழ் இயக்கங்கண்டேன்” என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது.   

அவைக்களப் பலகை கண்டு அருந்தமிழ் பலகை யாக்கி
அவைக்களச் சான்றோர் வாழ்த்த அருந்தமிழ் பலகை ஏற்றி
அவைக்கள வேந்தன் வாழ்த்த அருந்தமிழ் நூல்களெல்லாம்
அவையுளோர் கண்க ளிக்க அரங்கேற்றி நின்றதன்றே -(ப.நூ.30)

என்ற பாட்டின் வழியறியலாம்.

          மயன் என்ற தமிழன் பெருந்தச்சன் தைத்திங்கள் பௌர்ணமியில் குமரி நாட்டில் பிறந்தவர். இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலர் எனக் கூறப்படுகிறது.  குமரிக்கண்டத்தில் வசித்த மயன் பற்றி வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன.  மயன் எழுதியதாக கருதப்படும் ஐந்திறம் என்னும் நூலில் குமரிக்கண்டம் மாபெரும் நிலமாக இருந்ததென்றும், பெருமலையிலிருந்து பல்துளி ஆறு வருகிறதென்றும் (மேருமலையிலிருந்து பஃறுளி ஆறு), ஏழேழ் நிலமும் ஏழேழ் நாடென அழைக்கப்பட்டதென குறிக்கப்பட்டுள்ளது.  வைசம்பாயணப் பாடல் ஒன்று குமரிநாட்டைப் பற்றியும், அதன் எல்லைகளையும், அந்த நாட்டில் மேருமலை (பெருமலை) இருந்ததையும் குறிக்கிறது. 

"குமரிநன் நிலத்தன்று குணமுறும் கலைகள் ஆய்ந்து
குமரியாள் அருளினாலே கூர்மதி நனிவிலங்க
அமர் பொருள் ஆக்கம் கண்டான் ஆற்றலும் ஆண்மை மிக்க
அமர்நிலை வீரம் ஓங்க அருங்கலை வளர்த்தான் அன்றே"     -வைசம்பாயனம்

சிலப்பதிகாரம்:     இந்திர விழாவூரெடுத்த காதை: (5 - 105)

"மயன் விதித்துக் கொடுத்த மரபின் இவைதாம் 
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும்

அரும் பெறல் மரபின் மண்டபம்"   

இந்திர விழாவில் அமைக்கப்பட்டிருந்த தோரண வாயில்களும், மண்டபங்களும், மயனால் இயற்றப்பட்ட 
விதிமுறைப்படி மரபு வழுவாது கட்டப்பட்டதால்

அறிஞர்களால்  புகழ்ந்து பேசப்பட்டதென, இளங்கோ அடிகளும் சிலப்பதிகாரத்தில் மயனின் பெருமை பேசுகின்றார். 

சிலப்பதிகாரம்: மனையறம் படுத்த காதை (2 – 12)

மயன் விதித் தன்ன மணிக் கால் அமளிமிசை,
நெடு நிலை மாடத்து இடை நிலத்து, 

கோவலன் கண்ணகி சயனிப்பதற்கான கட்டிலைப் பற்றிய குறிப்பில் இளங்கோவடிகள் “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” என்று குறிப்பிட்டுள்ளார். 

மணிமேகலை: 3. மலர்வனம்புக் காதை

பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட
மயன்பண் டிழைத்த மரபின த்துதா (3 - 79)

மணிமேகலை: 6 சக்கரவாளக் கோட்டமுறைத்த காதை

மிக்க மயனா லிழைக்கப் பட்ட
சக்கர வாளக் கோட்டமிங் கிதுகா (6 - 201)

மணிமேகலை: 21 கந்திற்பாவை வருவதுரைத்த காதை

மயனெனக் கொப்பா வகுத்த பாவையி
னீங்கேன் யானென் நிலவியது கேளாய் (21.132)

கம்பராமாயணம்/யுத்த காண்டம்/இராவணன் மந்திரப் படலம்

பூவரும் அயனொடு புகுந்து'பொன்னகர்
மூவகை உலகினும் அழகு முற்றுற
ஏவு'என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொளத் தெய்வத் தச்சனே.         6.2.1 (6198)

சீவகசிந்தாமணிக் காப்பியம்- 1. நாமகள் இலம்பகம் - அந்தரத்தார்

அந்தரத் தார்மய னேயென வையுறுந் (அந்தரம் தார் மயனே என ஐயுறும்

 தந்திரத் தாற்றம நூற்கரை கண்டவன் தந்திரம்தான் தம நூல் கரை கண்டவன்
வெந்திற லான்பெருந் தச்சனைக் கூவியொ வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஒர்
ரெந்திர வூர்தி யியற்றுமி னென்றான். (205) எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். (205) )

            அனுமனால் எரியுண்ட இலங்கை, பன்முக ஆற்றல் கொண்ட இராவணனின் மனைவியும், குணம், அழகு, ஒழுக்கம், பெருமை ஆகிய நற்குணங்கள் பெற்ற மண்டோதரியின் தந்தையுமான மயன் என்னும் தெய்வத்தச்சன், பற்றி எரிந்த நகரை பொலிவுடைய மாநகராக ஆக்கிப் புதுப்பித்தான்; மாணிக்கத்   தூண்கள் அமைந்த மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் இராவணன் கொலு வீற்றிருந்தான்.

            மயன் பாண்டவர்களுக்கு, " மாய சபை"யை அமைத்துக்கொடுத்தார். அந்த சபை மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஸ்ரீ கிருஷ்ணரின் வேண்டுகோளை ஏற்று "இந்திர பிரஸ்தா " நகரை நிர்மானித்தார்.    அந்த இந்திர பிரஸ்தம் தான் இன்றைய டெல்லி, இந்தியாவின் தலைநகர் ஆகும்.

            தற்போது ஆலயங்களில் தக்ஷிணாமூர்த்தி என்றும், தென்னவன், ஆலமரச்செல்வன் என்றும் 
அழைக்கப்படுபவர் பண்டைய நாளில் மயன் ஆவார்.

            ஆதிகாலத்தில் மயன் எழுதிய நூல்கள் பிரணவ வேதம், வானசாஸ்திரம் பற்றிச் சொல்லும் சூரிய சித்தாந்தம், அணுவைப் பற்றிச் சொல்லும் அணுவியல், கப்பல் கட்டுவது குறித்து மரகலச் செந்நூல் போன்ற பல நூல்களை இயற்றியவர். பிரணவ வேதம் பிற்பாடு அவற்றில் இருந்து வேதங்கள் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

            பொது நூல்கள்:   1) பிரணவ வேதம் 2) மயமாதம் (கட்டிடவியல் - வாஸ்து), 3) சூரிய நூல் (வானியல்), மற்றும் ஓவியச்செந்நூல், சிற்பமாச் செந்நூல், கட்டிடச் செந்நூல், நிலமனைச் செந்நூல், மனைநிலச் செந்நூல், வானியல் செந்நூல். பெருநடச் செந்நூல், மூலிகைச் செந்நூல், கணிதமாச் செந்நூல், மரக்கலச் செந்நூல், விண்கலச் செந்நூல், ஏழிசைச் செந்நூல் பல நூல்களை எழுதியுள்ளார்.

"ஐந்திறம்" எனும் நூல் மயனால் எழுதப்பட்டது.  இயல், இசை, நடம் (நடனம்), சிற்பம், கட்டிடம் ஆகிய ஐந்தும் தமிழுக்கு இலக்கணம் கூறும் தொன்மையான நூலாகும். தொல்காப்பியத்திற்கு பாயிரம் வழங்கிய பெரும்பாரனார் “ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

            மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட  சிற்பசாஸ்திரம் நூலாகும். இது பழம்பெரும் மொழியான தமிழில் இயற்றப்பெற்றது.  இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் முதல் மனிதனுக்கான வீடுகள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை   அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன் விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.

            தமிழரின் கடவுள்களை மாற்றிய வேதியர்:     தமிழரின் கடவுள்களான சேயோன், மாயோன், வேந்தன், வருணன், கொற்றவை, முனிவர் மயன் முறையே வேத ஆரிய இலக்கியங்களில் சுப்பிரமணியனாகவும், விஷ்ணுவாகவும், இந்திரனாகவும், வருணனாகவும், சக்தியாகவும், விஸ்வகர்மாகவும் அவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டனர். இதற்கு எடுத்துக்காட்டாக கீழுள்ள பாகவத புராணப் பாடலை சொல்லலாம்.  

            மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது ‘ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு ‘பிரணவ மந்திரம்’ என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது.  முற்காலத்தில், அனைத்து வேதங்களையும் உள்ளடக்கிய ஓங்காரம் என்ற ஒரே வேதம் மட்டுமே இருந்தது.    

    ஒன் ஏவ சம்பூர்ண வேதம்
                ப்ரணவঃ ஸர்வ-வாண்மயঃ  
9.14.48

(ஸ்ரீமத்-பாகவதம் (பாகவத புராணம்) » காண்டோ 9: விடுதலை » அத்தியாயம் பதினான்கு)

சத்ய-யுகத்தில், முதல் ஆயிரமாண்டு, அனைத்து வேத மந்திரங்களும் ஒரே மந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன - அனைத்து வேத மந்திரங்களின் மூலமான பிரணவம்.   (பிரணவ வேதம் தான் இயற்றிய   வேதங்களுக்கும் முற்பட்டதாக வியாசர் குறிப்பிட்டுள்ளார்.).

            மயனின் நடராசர் சிற்பம்   உணர்த்துவது ஐந்தொழிலையும் (படைத்தல்-மூலம், காத்தல்-சீலம், அழித்தல்-காலம், மறைத்தல்-கோலம், அருளல்-ஞாலம்), தனித் தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராசர் திருவுருவாகக் கருதப்படுகிறது.  இன்றைய அறிவியல் கருத்துக்களுடன் ஒத்துப் போவதாகக் கருதுகிறார்கள். 

  1. கதிரவனின் ஒளிக் கதிரிலுள்ள துகள் ஒளியானது, ஒடுங்கி விரியும் தன்மையானது.  
  2. இந்த மூலப் பொருள், இடமிருந்து வலமாகச் சுழல்கின்றது என்று கூறி, அச்சுழற்சியை காலம் என்ற சொல்லால் அழைக்கின்றான்.         
  3. கால ஓட்டமானது, ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும், அந்தச் சீரான ஓட்டத்தை சீலம் எனவும், இயம்புகின்றான். அந்தச் சீரான துகள்களின் சேர்க்கையால்,  பல உருவங்கள், வடிவங்கள்,பொருட்கள் என தோன்றுகின்ற வற்றைக் கோலம் என்றும் குறிக்கின்றான.
  4. இந்தக் கோலங்களே ஞாலத்தை  உருவாக்கின என்றும் முடிவாகக்  கூறுகின்றான்

மயனின் செங்கோண முக்கோண விதி இன்று நாம் அனைவரும் சொல்லிக் கொண்டிருகின்ற பிதாகரஸ் தியரம் (pythagoras theorem) என்ற முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார்.

"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே."  - போதையனார்
ஆனால் மயனின் தேற்றம் இன்னும் எளிமையானது.
தே=செம்பக்கம் (hypotenuse) AB

சி =சின்னபக்கம் = AC     

பெ=பெரிய பக்கம் (செம்பக்கம் தவிர்த்து) = CBசெய்முறை:

முதலில் சின்னப்பக்கத்தின் அலகை இரண்டால் வகுத்துக் கொள்ளுங்கள்.                     

(எ.கா. 3/2 =1.5)அடுத்து பெரியப்பக்கத்தின் (செம்பக்கம் தவிர்த்து) அலகை ஏழால் பெருக்கி வரும்விடையை எட்டால் வகுத்துக் கொள்ளுங்கள். (எ.கா. 4*7/8 =3.5)

மேலுள்ள இரண்டு விடையின் கூட்டே செம்பக்கத்தின் நீளம். (எ.கா. 3.5 + 1.5 = 5 அலகுகள்)மேலுள்ள எளிய விதியின் படி "தே = செம்பக்கத்தை" கண்டுபிடிக்க வர்க்க மூலமோ  வர்க்கமோ  தேவையில்லை.(no need for squares & square roots).

இது மயனின் சிற்ப நூலின் படி பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. 

இது பித்தாகரசு செங்கோண முக்கோண விதியை விட மிகப்பழைய மற்றும் எளிய விதியாகும்.

26,000 ஆண்டுகள் என்ற பூமியின் வட அச்சு சுழற்சியை மையமாகக் கொண்ட காலக்கணிப்பு முறை மயன்களுக்கும் பொதுவாக இருப்பது ஆச்சரியமளிக்கும் ஒற்றுமை.  வேறு எந்த இனத்தின் காலக்கணிப்பு முறையும் இவ்வளவு நுணுக்கமான வானியல் பூர்வமாகவோ, இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கு நெருக்கமாகவோ இல்லை. இதனை சற்று சுருக்கமாகவே பார்ப்போம். உண்மையில் பூமி விதமாக சுற்றுகிறது. இதனை விளக்க பம்பர உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
1.  ஆணி என்ற அச்சில் இருந்தவாறே தன்னைத்தானே பம்பரம் சுற்றுதல். (பூமி தன்னைத்தானே சுற்றுதல்- அதாவது ஒரு நாள்-24 மணி நேரம்) [Rotation]
2. பம்பர ஆணி தரையில் ஒரு இடத்தில் நிற்காது பரவி ஒரு முழு வட்டமோ, பாதி வட்டமோ
போடும். (பூமி சூரியனை சுற்றி வருதல்-அதாவது ஒரு வருடம்- 365 நாள்) [Ecliptic Revolution]
3. மூன்றாவது விதமான இயக்கம் கிறுவாட்டம் (gyration). பம்பரம் ஆடி ஓயும் நேரம் வருகையில் தலையாட்டம் போடும், கீழே உள்ள படம் விளக்குவது போல. நமக்கு தலை கிறு கிறுன்னு சுத்துது அப்படின்னு சொல்வோம் அது போல. வானியலில் இந்த கிறுவாட்டம் [Precession] எனப்படுகிறது.

            இந்த கிறுவாட்டம் ஏற்படக்காரணம் 23.5 பாகை (டிகிரி) பூமி சாய்ந்திருப்பதே.
இந்த கிறுவாட்டத்தில் ஆடும் பூமி அந்தக் கிறுவாட்டத்திலும் ஒரு சுற்று சுற்றுகிறது (Precession). அந்த கிறுவாட்ட சுற்றில் வானில் உள்ள ஒட்டுமொத்த நட்சத்திரக்கூட்ட வளையத்தை பூமியின் வட அச்சுமுனை (North Pole Axis) ஒரு முறை சுற்றி முடிக்க ஆகும் காலம் 26,000 வருடங்கள். அதாவது கீழுள்ள படத்தில் பூமிக்கு மேலுள்ள சிவப்பு வளையத்தில் 0 பாகையில் ஆரம்பித்து 360 பாகையை பூர்த்தி செய்ய 26,000 வருடங்கள் எடுக்கிறது. {2012 டிசம்பர் 21 ல் ஒரு சுற்று முடிந்தது.  மயன்களின் வானியலில் ஒரு சுழற்சியின் கால முடிவை (2012 டிசம்பர் 21) உலக முடிவாக உலகம் தவறாக புரிந்துகொண்டது} இந்த உலகம் அழியாவிட்டாலும் நிச்சயம் மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படக்கூடும்.  ஏதேனும் புதிய கிரகங்கள் அல்லது விண்கற்கள் சூரியனுடனோ அல்லது பூமியுடனோ மோதலாம் என்றும் கூறியுள்ளனர். இதைப்பற்றி மாயன்கள் தங்கள் சிலம்பலம் நூலில் மிகத் தெளிவாகக் குறித்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

            இந்த 26,000 வருடக்கணக்கில் தற்சமயம் கிறுவாட்ட துருவ மையம் போலாரிஸ் (Polaris) என்ற நட்சத்திரத்தினை நோக்கி உள்ளது. பூமியின் துருவ மையம் "ஆல்பா திரகோனிஸ்" ல் இருந்தபோது எகிப்து பிரமிடு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது, கி. மு. 2750 ல். மொத்தமுள்ள 12 நட்சத்திரக் கூட்ட வட்ட 360 டிகிரியில் பூமியிலிருந்து நோக்கும்போது சூரியனின் பயணம் ஒரு நட்சத்திரக் கூட்டத்திற்கு 30 டிகிரி, 1 டிகிரிக்கு 72 வருடங்கள் என்ற கணக்கில் (30x 72=2160) 2160 வருடங்கள் ஆகிறது.  ஆக 12 நட்சத்திரக்கூட்டங்களுக்கு (2160x 12=25920) மொத்தம் 25,920 வருடங்கள் ஆகிறது.  இந்திய தக்சசீல பல்கலைக் கழகத்தில் அழிக்கப்பட்ட தமிழர்களின் நூல்களுக்கு மத்தியில் மீட்கப்பட்ட சூரிய சித்தாந்தம் என்ற நூல் பூமியின் அச்சு முனை 12 நட்சத்திரக் கூட்டத்தை ஒரு முறை வலம் வர 25,461 ஆண்டுக்கணக்கை குறிப்பிடுகிறது. இன்றைய நவீன அறிவியலின்படி இது 25,771 ஆண்டுக்கணக்கு. மாயன்களின் நாட்காட்டிப்படி ஆகும் காலம், 25,625 வருடங்கள் (5125 x 5). தமிழர்களின் காலக்கணிப்பை (25,461வருடங்கள்) ஒட்டியே தான் மயன்களின் காலக்கணிப்பும் இருக்கிறது.  தமிழர் கணக்கீட்டுக்கும் மாயன் கணக்கீட்டுக்கும் உள்ள வித்தியாசம் 164 ஆண்டுகள் மட்டுமே.

18 வினால் = 1துன்  (Tun) (18x1) 360 days

20 துன்  = 1 காடுன்(Katun) (20x1) 7200 days

20 காடுன் = 1 பக்துன் (Baktun) (20x1) 144,000 days

13 பக்துன்= 1 great Cycle  (13x1) 1,872,000 days

            இங்கு 'கின்' என்பது நாளையும், 'வினால்' என்பது மாதத்தையும், "துன்" என்பது  வருடத்தையும் குறிக்கும். "காடுன்", "பாக்டுன்" என்பது அதற்கும் மேலே 1,872,000 நாட்கள் என்பது 5125 வருடங்கள். இப்படி 5125 வருடங்களை மாயன்கள் ஒரு முழு சுற்று என்கின்றனர். இது போல மொத்தம்  5 சுற்றுக்கள்  சுற்றி முடிய தன் இறுதி காலத்தை அடையும் என்பது மாயங்களின்கணிப்பு.  கிட்டத்தட்ட  26000  வருடங்களில் இறுதி காலத்தை அடையும். அதாவது ஒரு பெரும் சுற்று.

            நான்கு யுகங்களான சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் இந்த கலியுகத்தின் துவக்கமாக தமிழரின் கண்டுபிடிப்புகள் (சூரிய சித்தாந்தம் என்னும் நூல், மற்றும் மொகஞ்சதாராவின் முத்திரைகள்) கூறும் ஆண்டு கணக்கு: 

            கலியுகத்தின் துவக்க ஆண்டு கி. மு. 3102: 18 பிப்ரவரி 3102 BCE வெள்ளிக்கிழமை 14 மணி, 27 நிமிடங்கள், 30 வினாடிகளில் கிருஷ்ணர் தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

(“The Secret of Krishna’s Birth: Deciphering The Krishna Code” - Udaylal Pai)

            மயன்கள் நாட்காட்டிப்படி கி. மு. 3114 காரணம் இதுவும் தமிழரின் வானியல் கண்டுபிடிப்பே. சூரியன், பூமி, நிலவு, வெள்ளி, செவ்வாய், வியாழன், ஆகிய 7 வானியல் கோள்களும் ஒரே வரிசையில் வரும் நிகழ்வு நடப்பது அந்த ஆண்டில் தான். இன்றைய வானியல் கண்டுபிடிப்பால் அப்படிப்பட்ட வானியல் வரிசை நிகழ்வு நடந்தது கி.மு. 3104 பெப்ரவரி 7 என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் மாயன்கள் நாட்காட்டிப்படி கி. மு. 3114 ல் தொடங்கும் ஐந்தாம் சுற்று (மாயன்களின் கணக்குப்படி 5125 ஆண்டுகள், இன்றைய நாட்காட்டிப்படி அது 5113 வருடங்கள்) 5113 ஆண்டுகள் நிறைவு பெரும் வருடம் 2012 டிசம்பர் 21. இந்த 26,000 என்ற பெரும் சுற்றில் மட்டுமல்ல, அதன் ஐந்தாவது இறுதிச் சுற்றுக்கான காலக்கணிப்பிலும் தமிழருக்கும், மாயன்களுக்கும் நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது. இதில் தமிழரின் நாட்காட்டிக்கும் மாயன்களின் நாட்காட்டிக்கும் உள்ள வித்தியாசம் 12 ஆண்டுகளே.

            மயன் நாட்காட்டி சூரியனுடன் இணைக்கப்படவில்லை என்றாலும், கிரிகோரியன் நாட்காட்டியை விட மயன் சூரிய ஆண்டை ஓரளவு துல்லியமாக கணக்கிட்டதாக ஜான் டீப்பிள் முன்மொழிந்தார்.  வானியல் மற்றும் நேரத்தை அளவிடுவதற்கான ஒரு சிக்கலான எண் கணித திட்டம் இரண்டும் மயன் வானியல் மிக முக்கியமான கூறுகளாக இருந்தன. 

  1. மாயன்களின் நாள் காட்டியின் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது.
  2. அது சுழன்று 13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன.
  3. மாயனின் இந்த நாட்காட்டியின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது தற்போதுள்ள நம் நவீன நாள்காட்டியின்படி, கி.மு. 3114-ஐக் குறிக்கிறது.
  4. மாயன் நாட்காட்டி முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நவீன நாள்காட்டியின்படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11 மணிக்கு முடிவடைந்தது. கி.மு. 400 இக்காலகட்டத்தில் இவர்களால் நாட்காட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிகவும் சிக்கலான, ஆனால் மிகத் துல்லியமாகக் கணிக்கப்பட்ட நாட்காட்டி.

            மாயன் நாட்காட்டி மூன்று தனித்தனி நாட்காட்டிகளைக் கொண்டுள்ளது. அவை, நீண்ட எண்ணிக்கை (Long Count Calendar) என்று கூறப்படும் ஷோல்டுன்’ (Choltun)என்னும் நாட்காட்டி சோல்கின் (Divine Calendar), ஹாப் (Civil Calendar).  இந்த மூன்று நாட்காட்டி களும் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. சோல்கின் மற்றும் ஹாப் நாட்களை அடையாளம் காட்டுகின்றன. ஆனால் ஆண்டுகளைக் குறிப்பதில்லை.

            மயனின் ஆதிகாலப் பெயர் மயாசுரன் என்பது. மயாசுரன் என்பவர் பாதாளத்தில் வாழ்பவராக புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். "பாதாள உலகம் " என்பது பூமிக்கு நேர் கீழே 180 டிகிரியில் இருப்பது. இது தென் அமெரிக்கா, பெரு மற்றும் அதையொட்டி உள்ள கடல் பகுதிகள் எனலாம். அங்கு மாயன் இன மக்கள் வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள். குமரிக் கண்டம் கடல் கோளினால் அழிந்து விட்டாலும், ஆஸ்திரேலியாவில், ஹவாயில், தென் அமெரிக்காவில், மெக்சிகோவில், பெருவில் உலகின் இன்னும் பல நாடுகளில் மயன் இனமக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் கலாச்சாரமும் பண்பாடும் தமிழ் இனத்தவரின் பண்பாடோடு ஒத்துப் போகின்றன எனலாம்.   மாயன் நாகரிகம் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்களிடையே நிலவிய நாகரிகம். இந்த நிலப்பகுதிகள் காலத்தின் போக்கால் அரசியல் மாற்றங்களால் இன்று மத்திய அமெரிக்காவில் ஐந்து நாடுகளாக இருக்கின்றன. அவை, மெக்ஸிகோ, கௌதமாலா, பெலீஸ், ஹோண்டுராஸ், எல் சால்வடார்.  அமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக் கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொல்லப்படுகிறது.

            மறக்க முடியாத மற்றும் முக்கிய நாகரிகங்களில் ஒன்று கிமு 2000 முதல் 16 ஆம் நூற்றாண்டில் மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை ஸ்பானிஷ் கைப்பற்றுவதற்கு முன்பு வரை அமெரிக்காவில் செழித்து வளர்ந்த மாயன் நாகரிகம். கட்டிடக்கலை, கணிதம், வானியல் மற்றும் எழுத்து ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்குப் புகழ் பெற்ற இந்த நாகரிகம், மிகப்பெரிய வரலாற்றைக் கொண்ட மாயர்கள் மாயா, மெசோ அமெரிக்கன் தெற்கு மெக்ஸிகோ, குவாத்தமாலா மற்றும் வடக்கு பெலிஸில் கிட்டத்தட்ட தொடர்ச்சியான நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர். 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 30 மாயன் மொழிகள் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்பட்டன. அவர்கள் அற்புதமான கட்டிடக்கலைக்காகவும் பிரபலமானவர்கள். பிரமிடுகள், அரண்மனைகள், பந்து மைதானங்கள் மற்றும் கோவில்களை கட்டினார்கள். சிச்சென் இட்சாவில் உள்ள எல் காஸ்டிலோ பிரமிடு போன்ற சிலவற்றின் எச்சங்கள் இன்றும் உள்ளன. 

            ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர்.     

            உலகில் உள்ள தொன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழி தமிழ் ஆகும். பல்வேறு நாடுகளில் பேசப்படுகிறது.  கடல் கொண்ட தென்னாடு என்ற குமரிக்கண்ட ஆய்வில் புதிய தேவைகளும் புதிய கோணங்களும் கடல் ஆய்வில் முன்னெடுக்கத் தேவைப்படுகிறது என்று வலியுறுத்தினார் ஒரிசா பாலு.

            மயன் பல்கலைக்கழகம் என்பது கணபதி என்னும் சிற்ப கலைஞரின் வழிகாட்டுதலால் அமேரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும் இப்பல்கலைகழகத்தின் பாடங்கள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மயன் என்பவரால் எழுதப்பட்ட ஐந்திறம் மற்றும் பிரணவ வேதம் ஆகிய நூல்களிலிருந்து மீளுருவாக்கப்பட்ட நூல்களை மூலமாக கொண்டு அமைக்கப்பட்டது.

நன்றி:

1. "திருவள்ளுவர் சிலை புகழ்" கணபதி ஸ்தபதியும் மாயன்களும்.  

2. பண்டைத்தடயம், சிற்பச்சித்தன் மயன் வரலாறு, மணிவாசகர் பதிப்பகம்,

3. INTERNATIONAL SOCIETY FOR THE INVESTIGATION OF ANCIENT CIVILIZATIONS, Editor N. Mahalingam

4. சிவ பாலசுப்ரமணி (கடல்ஆய்வு நிபுணர் ஒரிசா பாலு) அவர்களால் தென்மொழி இதழ் மார்ச் 2012  

5. Google 

You already voted!
4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097971
Users Today : 15
Total Users : 97971
Views Today : 24
Total views : 419450
Who's Online : 0
Your IP Address : 3.149.24.244

Archives (முந்தைய செய்திகள்)