Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர்

05 Dec 2024 8:43 pmFeatured Posted by: Karur R Palaniswamy

You already voted!

1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் என்ற கிராமத்தில் பிறந்த  பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றும் அழைக்கப்பட்டார். இவரது தந்தை ராம்ஜி சக்பால், இந்திய ராணுவத்தில் பணியாற்றி, நாட்டிற்கு சேவை செய்தவர். அவரது நல்ல பணியால், ராணுவத்தில் சுபேதார் பதவி பெற்றார். அவரது தாயார் பெயர் பீமா பாய்.

ஆரம்பத்திலிருந்தே, ராம்ஜி தனது குழந்தைகளை படிக்கவும் கடினமாக உழைக்கவும் ஊக்குவித்தார், இதன் காரணமாக பீம்ராவ் அம்பேத்கர் சிறுவயதிலிருந்தே படிப்பை விரும்பினார். இருப்பினும், அவர் மகர் சாதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த சாதியைச் சேர்ந்தவர்களும் அக்காலத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். தீண்டத்தகாதவர் என்பதன் பொருள் என்னவென்றால், உயர் சாதியினரைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தாழ்ந்த சாதியினரால் தீண்டப்பட்டால், அது தூய்மையற்றதாகக் கருதப்படும், மேலும் உயர் சாதியினர் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள்.

சமுதாயத்தின் மோசமான சிந்தனையால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குழந்தைகள் கூட படிக்க பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நல்ல வேளையாக ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்காக அரசு சிறப்புப் பள்ளி நடத்தியதால் பி.ஆர்.அம்பேத்கரின் ஆரம்பக் கல்வி சாத்தியமாகியுள்ளது.

படிப்பில் சிறந்தவராக இருந்தபோதிலும், அவருடன் வரும் அனைத்து தாழ்த்தப்பட்ட குழந்தைகளுடன் அவர் வகுப்பிற்கு வெளியே அல்லது வகுப்பின் மூலையில் அமர்ந்திருந்தார். அங்குள்ள ஆசிரியர்களும் அவர்களைக் கொஞ்சமும் கவனிப்பதில்லை.  இந்த குழந்தைகள் தண்ணீர் குடிக்க குழாயை தொடக் கூட அனுமதிக்கப்படவில்லை. பள்ளியின் பியூன் தூரத்திலிருந்தே கைகளில் தண்ணீர் ஊற்றிவிட்டு, பிறகு குடிக்கத் தண்ணீர் எடுப்பது வழக்கம். பியூன் இல்லாத போது, ​​தாகம் எடுத்தாலும் தண்ணீர் இல்லாமல் படிக்க வேண்டியதாயிற்று. பள்ளிக்கூடத்தில் வெளியே ஒரு முலையில் உட்கார வைக்கப்பட்டவர் தான் பின்னாளில் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக அமர வைக்கப்பட்டார்.

அம்பேத்கர் கல்வியும் பெற்ற பட்டங்களும் :

பள்ளியில் படிக்கும் போது  ஆசிரியர் அம்பேத்கர் இவருக்கு உதவியாக இருந்தார். பின்னர் அவர் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் காரணமாக இவருடைய பெற்றோர் வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி என்று அவருடைய பெயருக்கு பின்னால் ஆசிரியர் பெயரான அம்பேத்கர் என்பதை  இணைத்து கொண்டார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில்  பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், 1900 ஆண்டில் சதாராவில் ஒரு பள்ளியில் தனது கல்வியை தொடர்ந்தார்.

இவர் குடும்பம் 1904 ஆம் ஆண்டு மும்பைக்கு குடி பெயர்ந்தன. அங்கு எல்பின்ஸ்டன் என்ற உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தார்  மேலும் அந்த பள்ளியில் சேர்க்கை பெற்ற முதல் தாழ்த்தப்பட்ட மாணவர் ஆவார்.

1907 - பம்பாய் எல்பின்ஸ்டோன்  உயர்நிலைப் பள்ளி மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த வெற்றி அவரது சாதி மக்களிடையே மகிழ்ச்சி அலையைத் தூண்டியது, ஏனெனில் அந்த நேரத்தில் உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெறுவது மிக அரிது மற்றும் அதை அடைய அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இருப்பது ஆச்சரியமாக இருந்தது.   

1909 - எல்பின்ஸ்டோன் கல்லூரி,  இன்டர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.  பாரசீக மற்றும் ஆங்கிலம் (மொழிகள் உட்பட)

1912 - பரோடா மன்னரின் உதவியுடன் பம்பாய் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை தொடர்ந்து  பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியலில் (பி.ஏ.), பட்டம் பெற்றார், ஆய்வுத் துறையில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தார்.   மேலும், பரோடா மன்னரின் அரண்மனையில் சிறிது காலம் படை தலைவராக வேலையில் இருந்தார்

1913 - முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றார், அங்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவம் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூகம் என்ற எண்ணற்ற பாடங்களை அம்பேத்கர் படித்து முடித்தார்.

1915 - எம்.ஏ முடித்தார். அடுத்த ஆண்டில் அவர் தனது ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்றார்.  அங்கு அவர்  பண்டைய இந்தியாவின் வாணிபம் என்ற ஆய்வுக்கு முதுகலை பட்டம் பெற்றார்.

1916 - அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தை முதன்மைப் பாடமாகவும் சமூகவியல், வரலாறு, தத்துவம், மானுடவியல், அரசியல் ஆகியவற்றைத் துணைப் பாடங்களாகவும் பயின்றார் அம்பேத்கர். மானுடவியல் பாடத்தின் ஓராண்டு முடிவில் 09.05.1916-ல் ஓர் ஆய்வுக் கட்டுரையை அளித்தார். அதுவே ‘இந்தியாவில் சாதிகள்’ “Castes in India” எனும் நூல். அம்பேத்கர் எழுதிய முதல் நூல். அந்த நூல் அவரது பிற்காலச் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்வதற்கான வேர். 'இந்தியாவில் சாதிகள்' என்னும் தன் முதல் நூலிலேயே 'சாதிகளின் தோற்றத்துக்குக் காரணம் அகமணமுறை என்னும் ஒரே சாதிக்குள் நடைபெறும் திருமணம்' என்பதைச் சுட்டிக்காட்டினார். 

1917 - கொழும்பியா பல்கலைக்கழகத்தில் இவருக்கு டாக்டர் Ph..D பட்டம் வழங்கியது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவருக்கும் புரட்டி பார்க்கும் உயர் நூலாக இன்றும் விளங்குகின்றன.

1920 - பாரிஸ்டர்-அட்-லா 30-9-1920 கிரேஸ் இன், லண்டன்

1921 ஜூன்- லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், லண்டன். ஆய்வறிக்கை - 'பிரிட்டிஷ் இந்தியாவில் இம்பீரியல் நிதியின் மாகாண பரவலாக்கம்' (M. Sc Thesis – ‘Provincial Decentralization of Imperial Finance in British India’ முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார்.

1923 -   ரூபாயின் பிரச்சனை ‘The Problem of the Rupee – Its origin and its solution’ was accepted for the degree in Economics   என்று ஆய்வுக்   கட்டுரை   டிஎஸ்சி (அறிவியல் முனைவர்).  டாக்டர். பி.ஆர். அம்பேத்கர், அவரது பொருளாதார சிந்தனை மற்றும் பல்வேறு காலகட்டங்களில் அவரது நிலைப்பாடுகள் இன்றும் இந்திய வங்கி அமைப்பின்  முதுகெலும்பாக  இருக்கும் ரிசர்வ் வங்கியை நிறுவுவதற்கு மகத்தான பங்களிப்பை அளித்துள்ளன.

1923 ஆம் ஆண்டில், LSE அவரது முன்னேற்றத்தை அங்கீகரித்து அவருக்கு 'டாக்டர் ஆஃப் சயின்ஸ்' D. SC பட்டம் வழங்கியது. ஒரே ஆண்டில் டாக்டர் மற்றும் பாரிஸ்டர் என்ற இரண்டு பட்டங்களையும் அவர் பெற்றார்

1952- L.L.D (Honoris Causa) 5-6-1952 கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் அவரது சாதனைகள், தலைமைத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்பை எழுதியதற்காக வழங்கியது

1953 - உஸ்மானியா பல்கலைக்கழகம், ஹைதராபாத் அவரது சாதனைகள், தலைமைத்துவம் மற்றும் இந்திய அரசியலமைப்பை எழுதியதற்காக  டி.லிட் (ஹானரிஸ் காசா) D.Litt (Honoris Causa) 12-1-1953  வழங்கியது.

1930 ஆண்டு பம்பாயில் புத்தகங்களுக்காக கட்டிய வீடு ராஜகிரஹ (Rajgraha and Now Rajgriha) எனப்  பெயரும் சூட்டினார். அங்கு இருந்த புத்தகங்கள் சுமார் 60,000 மேல் என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆசிய துணைக்கண்டத்தில் மிகப்பெரிய தனிநபர் நூலகமாக கருதப்பட்டது.

அம்பேத்கரின் சமூக மற்றும் சமத்துவத்திற்கான பணி:

1923 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா திரும்பிய அம்பேத்கர் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.  சாதி ஒழிப்பு என்ற திட்டத்தை நவீன அரசியல் பின்னணியில் ஒரு கோட்பாடாக முன் வைத்தவர் அம்பேத்கர். ஒடுக்கப்பட்டோர் மட்டுமல்லாது சமூக மாற்றத்தை வலியுறுத்தும் பலரின் சிந்தனைகளை முக்கால் நூற்றாண்டாக நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்தக் கோட்பாடு பாதித்திருக்கிறது. அதனாலேயே 1936-ல் வெளியான ‘சாதி ஒழிப்பு’ எனும் அவரது நூல் அதிகம் கவனிக்கப்படுகிறது. சாதியை ஒழித்தல் என்ற நேரடித்தன்மை காரணமாக இயல்பாகவே அந்த நூல் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. ஆனால், அதை ஒழிப்பது என்ற சிந்தனைக்குச் செல்லும் முன், சாதி என்றால் என்ன? அது எவ்வாறெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தெளிவு படுத்தினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாய், குரலற்ற மக்களின் நாயகனாக விளங்கிய அம்பேத்கர் வெறுமனே அரசியல் தலைவர் மட்டுமல்ல. அவர் ஒரு பொருளாதார நிபுணர், சட்ட வல்லுநர், தத்துவங்களின் ஆழத்தில் திளைத்தவர், சமயங்களைப் படித்தவர்.   அவரது ஆய்வுப்படிப்பு ரூபாய் பிரச்னையைப் பற்றியது. புனே ஒப்பந்ததுக்குப் பிறகு 'இந்திய ராணுவம்' குறித்து நூல் எழுதத் தொடங்கியவர். நீர்ப்பாசனம், மின்னாற்றல் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மாநிலங்களின் உரிமைகள், மொழி, இனக்குழுக்கள், மக்கள் நலத்திட்டங்கள், அரசின் தன்மை, போராட்டங்களின் வழிமுறை என பலதளங்களில் சிந்தித்து உரையாடல் நிகழ்த்தியவர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தொடக்கத்தில் இல்லாத 'பிற்படுத்தப்பட்டோர்' என்னும் வகைமையை உருவாக்கியவர் அம்பேத்கர். யாரால் அவர் சிலைகள் உடைக்கப்படுகின்றனவோ, யார் அவரை சாதித்தலைவர் என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்தவர் அம்பேத்கர்.   'சமூகரீதியாகவும், கல்வியிலும்

பின் தங்கியவர்களுக்கே இட ஒதுக்கீடு' எனும் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று  'பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு' என்னும் குரல்களை முறியடித்தவர்.

தொழிலாளர்களுக்கு எட்டுமணி வேலை நேரத்தைச் சட்டபூர்வமாக்கியவர்.  ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான எதிர்காலம் குறித்து சிந்தித்த தலைவர். பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை அவமானங்களில் விளைந்த, வளர்ந்த தலைவர். அம்பேத்கரை சாதித்தலைவராகக் குறுக்குவதுதான் அவருக்கு இழைக்கப்படும் அவமானங்களிலேயே பெரிய அவமானம்.

1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு புறப்படுகையில், என் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்காக நான் போராடுவேன். அதே சமயம் சுயராஜ்ய கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறிச் சென்றார்.  இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டன தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 24, 1931ஆம் ஆண்டு காந்திஜிக்கும் அம்பேத்கருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்று பதிலாக பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி  என முடிவு செய்யப்பட்டன.

சாதி ஒழிப்பு:

          சாதி என்பதை ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் அவலமாகப் பார்த்தார். தீண்டப்படாதவர்கள் யார்?', 'சூத்திரர்கள் யார்?' என்னும் நூல்களின் வழியே ஆய்வுப்பயணத்தைத் தொடர்ந்தார். ''இந்திய வரலாறு என்பது பார்ப்பனியத்துக்கும் பவுத்தத்துக்கும் இடையிலான போராட்டம்'' என உணர்ந்தார். நூல் பல கற்றுணர்ந்த அம்பேத்கர் இந்தியா நவீனத்துக்குத் தகுதியில்லாமல் இருப்பதற்குக் காரணம் சாதியமே என்று விளக்கினார். ''கலப்புத் திருமணங்களாலும், சமபந்தியாலும் மட்டும் சாதியை ஒழித்துவிட முடியாது. அது ஒரு மனநிலை'' என்றார்.

பெண்ணுரிமை நிலைநாட்ட பதவி விலகல் :

        சமத்துவத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடியது மட்டுமல்ல தன் பதவியைத் துறந்தவர் அண்ணல். சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பதை சட்டங்களின் மூலம் முதன்மையாக உணர்த்தியவர்.  பெண்களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து, மறுமணம், ஜீவனாம்சம், பாலியல் உரிமை போன்ற அம்சங்கள் அடங்கிய இந்து நெறியியல் சட்டமசோதாவை நிறைவேற்ற பெரிதும் முயன்றார். இதற்கு நேரு தலைமையிலான அரசு ஒத்துழைப்பு தராததால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனவேதனை அடைந்து பெண்களின் உரிமைக்காக 1951ம் ஆண்டு சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அம்பேத்கர் விலகினார்.

அம்பேத்கர் சமத்துவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறார்.  இந்திய நாட்டின் அரசியலமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்.  மக்களிடையே சமத்துவம், நட்பு, சகோதரத்துவம் உள்ள சமுதாயமாக மாற வேண்டும் என விரும்பியவர், பாடுபட்டவர். மக்களின் நல்வாழ்விற்காக தன் முழு வாழ்வை அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் நாள் இயற்கையெய்தினார்.  இந்திய ஒன்றிய அரசால் "பாரத ரத்னா" விருது 1990 ஆம் ஆண்டு தான் வழங்கப்பட்டது.

அம்பேத்கரின் பெருமையை நிலை நிறுத்தும் சிலைகள்

இந்திய சட்டத்தை வகுத்த அம்பேத்கரை உலகம் முழுவதும் சட்ட மேதையாக போற்றி அவரின் சிலைகள் நிறுவி பெருமைப்படுத்தியுள்ளது.

1. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை 81 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்தில், 125 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

2. வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ (Statue of Equality) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும்.

3. கனடாவில் கடந்த 2015ஆம் ஆண்டு யார்க் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அவரது  வெண்கல சிலையை திறந்து வைத்த கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரி விஷ்ணு பிரகாஷ், "டாக்டர்.அம்பேத்கர் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் என பெருமை பாராட்டினார்.

4. அமெரிக்காவில் உள்ள ப்ரேன்டீஸ் பல்கலைக்கழத்தில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அவரது வெண்கல சிலை நிறுவப்பட்டது. இது அமெரிக்காவில் நிறுவப்பட்ட இரண்டாவது சிலை. முதலில் நிறுவப்பட்டது, அம்பேத்கர் தன் வாழ்வின் முக்கிய பங்காகக் கருதும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தான். அங்குள்ள லெஹ்மன் நூலகத்தில் 1995ஆம் ஆண்டு, தன் பெருமைக்குரிய மாணவருக்கு சிலை வைத்து அழகு பார்த்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில், மாவட்டங்களில் ஆயிரங்கணக்கான சிலைகள் வைத்துள்ளனர் என்பது பெருமை கொள்ளத்தக்கது.

நவீன இந்தியாவை வடிவமைத்த மாபெரும் தலைவர்களில் ஒருவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் ஆவார்.  அண்ணலின் பிறந்த நாளை, நினைவு நாளை அனைத்து சமூகங்களும், அனைத்து சாதிகளும் இணைந்து நடத்த வேண்டும். அண்ணல் அம்பேத்கரை நாம் கொண்டாடுவது, அடிப்படையில் நமக்குள் இருக்கும் சாதி, மத இன உணர்வை அழிப்பதற்கான வழிகளில் ஒன்றாகும். 

அறிவு புகட்டு      (Educate)…  நமக்கு எல்லா புத்திசாலித்தனமும் தேவைப்படும்.
கிளர்ந்தெழுங்கள் (Agitate)…  நமது உற்சாகம் அனைத்தும் நமக்குத் தேவைப்படும்.
ஒழுங்கமைக்கவும்(Organise)…நமது முழு படையும் நமக்குத் தேவைப்படும்" 
அண்ணல் அம்பேத்கர் நினைவைப் போற்றுவோம்!

கல்வி கற்போம்! சமுக நீதி சமத்துவம் காப்போம்!!

You already voted!
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

097971
Users Today : 15
Total Users : 97971
Views Today : 24
Total views : 419450
Who's Online : 0
Your IP Address : 18.191.223.30

Archives (முந்தைய செய்திகள்)