Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

திமுக – வெற்றி பெறுபவர்கள் பட்டியல் வெளியீடு

12 Mar 2021 1:25 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அறிவித்துள்ளார். திமுகவின் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகிறார்.

முன்னதாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் கோபாலபுரம் இல்லம் சென்று கலைஞர் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இது வேட்பாளர்கள் பட்டியல் மட்டும் அல்ல, வெற்றி பெறுபவர்கள் பட்டியல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் பேசுகையில், "திமுக வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அரசியல் கூட்டணி அல்ல. தேர்தல் கால கூட்டணியும் அல்ல. இதுவொரு கொள்கை கூட்டணி. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 61 தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்-25, மதிமுக - 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6 , விசிக - 6, முஸ்லிம் லீக் - 3, கொங்குநாடு மக்கள் கட்சி - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, தமிழக வாழ்வுரிமை கட்சி - 1, ஃபார்வர்ட் பிளாக் - 1, ஆதிதமிழர் பேரவை - 1, மக்கள் விடுதலை கட்சி - 1 தொகுதி என 61 தொகுதிகளில் தோழமை கட்சிகள் போட்டியிடுகின்றன.

தோழமை கட்சிகள் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. எனவே, 187 தொகுதிகளில் உதயசூரியன் களம்காண்கிறது. பாழ்பட்டு நிற்கும் தமிழகத்துக்கு வழிகாட்ட திமுக முழுமையாக களம் காண்கிறது. இது வேட்பாளர் பட்டியல் மட்டும் அல்ல, வெற்றி பெறுபவர் பட்டியலும்கூட" என தெரிவித்தார்.

பின்னர், அவர் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வரிசையாக வாசித்தார்

வேட்பாளர்கள் பட்டியல்:
பத்மநாபபுரம் - மனோ தங்கராஜ்,
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,
கன்னியாகுமரி - ஆஸ்டின்
ராதாபுரம் - அப்பாவு,

பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
நெல்லை - லட்சுமணன்,
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,

தூத்துக்குடி - கீதா ஜீவன்
முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,
பரமக்குடி - சே.முருகேசன்,
திருச்சுழி - தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன்,

கம்பம் - ராமகிருஷ்ணன்
போடி - தங்கதமிழ்ச்செல்வன்,
ஆண்டிப்பட்டி - மகாராஜன்,
திருமங்கலம் - மணிமாறன்
மதுரை மேற்கு - சின்னம்மாள்,

மதுரை மத்திய தொகுதி - பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு - தளபதி,
சோழவந்தான் - வெங்கடேஷன்
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,
ஆலங்குடி - மெய்யநாதன்,

திருமயம் - எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை - முத்துராஜா,
விராலிமலை - பழனியப்பன்,
பேராவூரணி - அசோக்குமார்
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை,

ஒரத்தநாடு - ராமச்சந்திரன்,
தஞ்சை - நீலமேகம்
திருவையாறு - துரை சந்திரசேகரன்,
கும்பகோணம் - அன்பழகன்
நன்னிலம் - ஜோதிராமன்,

திருவாரூர் - கலைவாணன்,
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
வேதாரண்யம் - வேதரத்தினம்,
பூம்புகார் - நிவேதா முருகன்,
புவனகிரி - துரை சரவணன்

குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
நெய்வேலி - சபா ராஜேந்திரன்
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்,
குன்னம் - சிவசங்கர்,
பெரம்பூர் - பிரபாகரன்

துறையூர் - ஸ்டாலின் குமார்,
முசிறி - தியாகராஜன்,
மணச்சநல்லூர் - கதிரவன்
லால்குடி - சவுந்திரபாண்டியன்,
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்,

திருச்சி மேற்கு - கே.என்.நேரு
கரூர் - வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி - இளங்கோ,
நத்தம் - ஆண்டி அம்பலம்
ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி,

பழனி - ஐபி செந்தில்குமார்,
மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
சிங்காநல்லூர் - கார்த்திக்,
தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாதிபதி,
கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்

கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்,
பவானி - கே.பி.துரைராஜ்,
காங்கேயம் - சாமிநாதன்
தாராபுரம் - கயல்விழி செல்வராஜ்,
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்

பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,
ராசிபுரம் - மதிவேந்தன்,
வீரபாண்டி - தருண்
சேலம் தெற்கு - சரவணன்,
சேலம் மேற்கு - ஆர்.ராஜேந்திரன்,

சங்ககிரி - ராஜேஸ்,
எடப்பாடி - சம்பத்குமார்
மேட்டூர் - சீனிவாச பெருமாள்,
ஆத்தூர் - ஜீவா ஸ்டாலின்,
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்

திருக்கோவிலூர் - பொன்முடி,
விக்கிரவாண்டி - புகழேந்தி,
விழுப்புரம் - லட்சுமணன்,
திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்,
மயிலம் - மாசிலாமணி,

செஞ்சி - மஸ்தான்
செய்யாறு - ஓ.ஜோதி,
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,
போளூர் - சேகரன்,
கலசப்பக்கம் - சரவணன்

கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி,
திருவண்ணாமலை - எவ வேலு,
செங்கம் - மு.பெ.கிரி
பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜகுமார்,
பென்னாகரம் - இன்பசேகரன்,

பாலக்கோடு - முருகன்
ஓசூர் - ஒய்.பிரகாஷ்,
வேப்பனஹள்ளி - முருகன்,
கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,
பர்கூர் - மதியழகன்

திருப்பத்தூர் - நல்லதம்பி,
ஜோலார்பேட்டை - தேவராஜு,
ஆம்பூர் - வில்வநாதன்
குடியாத்தம் - அமலு,
அணைக்கட்டு - நந்தகுமார்,

வேலூர் - கார்த்திகேயன்,
ராணிப்பேட்டை - காந்தி
உத்தரமேரூர் - சுந்தர்,
செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,

காட்பாடி - துரைமுருகன்,
சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,
ஆவடி - சா.மு.நாசர்
திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,
மாதவரம் - சுதர்சனம்,

அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி,
மயிலாப்பூர் - த.வேலு,
சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,

அண்ணா நகர் - மோகன்,
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
எழும்பூர் - பரந்தாமன்,
திருவிக நகர் - தாயகம் கவி,
வில்லிவாக்கம் - வெற்றியழகன்

பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096554
Users Today : 0
Total Users : 96554
Views Today :
Total views : 416698
Who's Online : 0
Your IP Address : 3.145.9.200

Archives (முந்தைய செய்திகள்)