25 Sep 2019 9:59 amFeatured
தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக இந்திய பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருதை பில்கேட்ஸ் வழங்கி கவுரவித்தார்.
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான 2-10-2014 அன்று இந்த அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தி வருகிறது. கடந்த
வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டது இந்தத் திட்டம் ஆகும்.
இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் மோடிக்கு சர்வதேச சாதனையாளர் விருதான உலக கோல்கீப்பர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு குளோபல் கோல்கீப்பர் விருது வழங்கப்பட்டது. நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக பணக்காரரான பில் கேட்ஸ் இந்த விருதை மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.