15 Apr 2022 8:57 pmFeatured
பத்லாபூர் தமிழர் நலச் சங்க 5 வது ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா மற்றும் சாய் இன்னிசை குழுவினரின் தேனருவி நிகழ்ச்சியும் 14.04.2022 வியாழன் மாலை 6.00 மணி முதல் பத்லாபூர் கிழக்கு, மோகன் பாம்ஸ், பெண்டுல்கர் அரங்கில் தலைவர் ச. அருணாச்சலம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் தே. எபினேசர் வரவேற்புரையாற்ற.அமைப்பாளர்கருவூர் இரா. பழனிச்சாமி தொடக்கவுரையாற்றினார்.
பத்லாபூர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் கேப்டன் ஆஷிஸ் தாம்லே முதல் சிறப்பு மலர் வெளியிட நித்யாஸ்ரீ கெமிகல்ஸ் உரிமையாளர் சக்தி கண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.இரண்டாவது மலர் பத்லாபூர் நகராட்சி துணைத் தலைவர் திருமதி இராஜேஷ்வரி கோர்படே வெளியிட அபூர்வ கெமிகல்ஸ் உரிமையாளர் திருமதி சண்முக சுந்தரி கண்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
பாம்பே தோல் பதனிடும் தொழிற்சாலை உரிமையாளர் திரு கே.வி. அஷோக்குமார், மலாடு தமிழர் நலச்சங்கத் தலைவர் திரு லெ.பாஸ்கரன், சாய் இன்னிசை ஒருங்கிணைப்பாளர் திரு களக்காடு கண்ணன், அம்பர்நாத் எம்..எஸ். எஞ்ஜினியர் ஒர்க்ஸ் உரிமையாளர் எஸ்.எம் லட்சுமணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாய் இன்னிசை துணை ஒருங்கிணைப்பாளர் திரு சேகர் சுப்ரமணியம், தமிழர் மக்கள் இயக்கம் தலைவர் திரு. ரமேஷ் பாபு, மாநிலத் தலைவி திருமதி. சேஸ்மேரி, மலாடு தமிழர் நல சங்கம் திரு. துரைராஜ், பத்லாபூர் காங்கிரஸ் மகளிர் அணித் தலைவி அஷ்தா மாஞ்ரேகர் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அம்பர்நாத் இளைஞர் பெருமக்கள், பத்லாபூர் தமிழர்கள் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்தனர்.
சாய் இன்னிசை குழுவினரின் பாடல்கள் குறிப்பாக எம்.ஜி.ஆர் வேடமணிந்து திரு தியாகு அவர்கள் பாடிய பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. துணைத் தலைவர் திரு பா. பரமசிவன் நன்றிகூறினார்.
நிர்வாகிகள் பொருளாளர் திரு ச. மா. குமார், இணைச் செயலாளர் திருமதி ஜெயந்தி சிவானந்த், திரு எஸ்.கோவிந்தராஜ், திரு அ. அகஸ்டின், திரு டி.வெங்கடேசன், திருமதி மீனாட்சி வெங்கட், திருமதி சரோஜா உதய்குமார், திரு த. வேல்முருகன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர்.