16 Sep 2019 7:58 pmFeatured
மும்பை புறநகர் மாநில திமுக சீத்தாகேம்ப் கிளை சார்பாக கழக முப்பெரும் விழா 15.09.2016 ஞாயிறு அன்று மாலை 7.30 மணிக்கு சீத்தாகேம்ப் கிளைக் கழகப் பணிமனையில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு சீத்தாகேம்ப் கிளைக் கழக நிர்வாகி இராஜேந்திரன் வரவேற்புரை ஆற்ற ,மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் தலைமை தாங்கி உரையாற்றினார். இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் தொடக்கவுரை ஆற்றினார்
பெரியார்,அண்ணா படத்திறப்பு
தந்தைப் பெரியார் திருவுருவப் படத்தை சீத்தாகேம்ப் கிளையைச் சார்ந்த பெ. ஆழ்வார் திறந்து வைக்க, பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்தை மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார் திறந்து வைத்தார்.
தீர்மானம்
மேலும் இவ்விழாவில் "இந்தி மொழி இணைப்பு மொழியாக திகழும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் பேசியிருப்பது ஏற்புடையதல்ல என்பதுடன் கண்டனத்திற்குரியதாகும். இந்திபேசாத மக்கள் மீது தொடர்ந்து இந்தி மொழியை திணிக்க முற்படுவது தேச ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதால் பலத்த கண்டனத்தை அமித் ஷா அவர்களுக்கு தெரிவிப்பதோடு இத்தகைய கடும் போக்கை கைவிடவேண்டும் என வலியுறுத்தி இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது."என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சிறப்புரை-மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான்
அதைத் தொடர்ந்து மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் அவர் தனது சிறப்புரையில் தந்தைப் பெரியார் அவர்கள் சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பொழுது சமூகம் இருந்த சூழலையும் பெரியார் தனது இடையறாத பணியின் மூலமும் , போராட்டத்தின் மூலமும் எப்படி மாற்றிக் காட்டினார் என்றும் விரிவாக்கப் பேசினார். பேரறிஞர் அண்ணா அவர்களின் அறிவுச் செறிவையும், களப்பணிகளையும், அதன் விளைவாக தமிழகம் பெற்ற முன்னேற்றத்தையும் சான்றுகளுடன் பேசினார். திராவிட முன்னற்றக் கழகம் ஆட்சியில் பெரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் நிறைவேற்றிய சமூக நலத்திட்டங்கள், சட்டங்கள் மூலம் தமிழகம் பெற்ற பயன்களையும், முன்னேற்றத்தையும் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டு பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முன்னிலை
,இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன் , இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இரா.கணேசன், சீத்தாகேம்ப் கிளைக் கழகத்தைச் வீரப்பன், சாகுல் ஹமீது, கணேஷ், எம்.மூர்த்தி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாழ்த்துரை
மும்பை புறநகர் மாநில தி.மு.க துணைச்செயலாளர்கள் முனைவர் வதிலை பிரதாபன், அ.இளங்கோ,மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன் கிளைக்கழகச் செயலாளர்கள் வீரை.சோ.பாபு,மெகபூப் பாட்சா, ச.பழனி, கிளைக் கழகங்களைச் சார்ந்த இரா.மதியழகன், பெ.ஆழ்வார், அண்ணா கதிர்வேல், எம்.பரமசிவம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் சீத்தாகேம்ப் கிளைக் கழகத்தைச் சார்ந்த கே.மாறன் நன்றியுரை ஆற்றினார். தானே கிளைக் கழகச் செயலாளர் ஆ.பாலமுருகன், பீவண்டிகிளை அவைத்தலைவர் முகமது அலி பொருளாளர் முஸ்தாக் அலி, திராவிடர் கழகம் கவிஞர் கவிஞர்.அ.கண்ணன், வா.தில்லை, ஆறுமுகம் , சீத்தா கேம்ப் கிளைக் கழகத்தைச் சார்ந்த அசரன்,, முகமத்.நா. இப்ராகிம், எம்.கலை மூர்த்தி, பி.சேகர், கே. கலிய பாபு, கே.வீரமுத்து,கணேஷ், டி.அலேபர், எம்.இரவி, பி.துரை. சக்தி ஷேக் இஸ்மாயில், ஏ .கோபி, கே.முருகன்,சின்னப்பாய், கே.சுரேஷ்,லத் தீப்,ராமச்சந்திரா, கே.ராம்.எம். மொஹமத் அலி, அ . கொளஞ்சி, அப்சர், ஜி .சுமன், கே.கார்த்திக், சுரேஷ், எஸ்.பிரபு, ஆர்.சக்திவேல், முருகன்,தமிழ்வீரன உள்ளிட்ட பல கழக அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்