18 Oct 2022 12:02 amFeatured
மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
16-10-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகம் ஜோகேஸ்வரி கிளை சார்பில் முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஜேகேஸ்வரி கிழக்கில் உள்ள பம்பாய் தமிழர் பேரவையின் பீப்புள்ஸ் வெல்பேர் ஆங்கிலப் பள்ளி வளாகம் எல்.பிளாக் ப்ரேம் நகர் பகுதியில் வைத்து பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுப் பொருளாளர் சையது அலி தலைமையில் நடைபெற்றது.
மும்பை புறநகர் மாநில திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அலிசேக் மீரான் சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் வரவேற்புரை ஆற்றினார்.
பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுவைச் சார்ந்த எ.தங்கராஜ், தந்தை பெரியார் திருவுருவப் படத்தையும் மும்பை புறநகர் மாநில தி.மு.கழக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் பேரறிஞர் அண்ணா படத்தையும் முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை பீவண்டி கிளைக்கழகச் செயலாளர் மெஹ்பூப் பாட்சா சேக் என மூவரும் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.
ஜோகேஸ்வரி பகுதிவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மும்பை மாநில திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் கரூவூர் பழனிச்சாமி மும்பை புறநகர் மாநில தி மு கழக துணைச் செயலாளர் அ.இளங்கோ ஆகியோரும் வழங்கினார்கள்.
புறநகர் மாநிலத் தி.மு கழக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். பம்பாய் தமிழ்ப்பேரவை கல்விக்குழுமேனாள் துணைச் செயலாளர் டிம்லேசன் நன்றியுரை ஆற்றினார்.
திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் புறநகர் திமுக இலக்கியணித் தலைவர் வே.சதானந்தன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், இளைஞரணி பொய்சர் க. மூர்த்தி, ஜெரிமெரி தமிழ்ச்சங்க நிர்வாகி கோ.சீனிவாசகம், மலாடு தமிழர் நலச்சங்கத் தலைவர் எல்.பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புறநகர் தி.மு கழகப் பொருளாளர் பி.கிருஷ்ணன், இலக்கியணிப் புரவலர் சோ.பா.குமரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன், கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளான வீரை.சோ.பாபு, எஸ்.பி.செழியன், ஆ. பாலமுருகன், எஸ்.பெருமாள்,
இரவி, சக்தி வேல், மொகைதீன், வாசி ஆறுமுகம், தில்லை,வே.ராஜேந்திரன், கே.பிரகாஷ், எம்.மூர்த்தி ஆர்.லோகநாதன், கே.சுந்தர், யூசுப், அகிசானுல்லா, செராலி, சங்கர் திராவிட்,
சந்திரசேகர் ராஜு, கே.முருகேசன், முகமது செரீப், அமானுல்லா, என். ராஜேஸ் பிரகாஷ் , மும்தாஸ், ரசியா, பரிடா, சையது, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.