Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகங்களில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது

18 Nov 2020 5:34 amFeatured Posted by: Sadanandan

You already voted!

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் கழக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்

மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகங்களில் கழக உறுப்பினர்களுக்கு  15.11.2020 அன்று உறுப்பினர் அடையாள அட்டை  வழங்கப்பட்டது. ஆரேகாலனி, ஜோகேஸ்வரி, ஜெரிமெரி,  ஆகிய கிளைகளில் வழங்கப்பட்டது.

மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் கழக உறுப்பினர் அடையாள அட்டையை வழங்க உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர். உடன் துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ் நேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரேகாலனி கிளையில்  கிளைக் கழகத்தைச் சார்ந்த சிவ பெருமாள் ,  பாண்டு, அம்பேத்கர், செல்ல கண்ணு, சேகர், செல்வராஜ், வேலு அம்பேத் மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது கழக உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர்.

ஜோகேஸ்வரி கிளையில் , ஜோகேஸ்வரி கிளைக் கழகச் செயலாளர் நூர்பாய், அவைத் தலைவர் இரமேஷ், பொருளாளர் செய்யது ஹுசைன், சுந்தர், யூசுப்பாய், மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களது உறுப்பினர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.

ஜெரிமெரி

ஜெரிமெரி கிளைக் கழகத்தில் இளைஞரணி துணை அமைப்பாளர் யோவான் வேதநாயகம், பொ.வெங்கடாசலம், ஏ.சி.காதர், சு.சிவகாமன், பி.திலகம், எஸ்.முருகன், ஆல்வின், மீனாட்சி முத்துக்குமார், மனோகர்,  ப்ரியா மனோகர், ஆ.கந்தசாமி, ஜெய்சங்கர் மற்றும் பல கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டனர்.

பிவண்டி கிளை

மேலும் பீவண்டி கிளையில் கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா மற்றும் பொருளாளர் முஸ்தாக் ஆகியோர் உறுப்பினர்கள் இல்லம் சென்று கழக உறுப்பினர் அடையாள அட்டையை உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

கல்யாண்,திவா,அம்பர்நாத் கிளைகளுக்கான உறுப்பினர் அடையாள அட்டைகளை துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வழங்கினார்

மும்பை புறநகர் மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உறுப்பினர்  அட்டை வழங்கும் விழா துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் தலைமையில் 17.11.2020 அன்று விட்டல் வாடி இரயில்வே நிலையம் அருகில் G-05 உத்யோக் விகார் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பணிமனையில் வைத்து நடைபெற்றது.

நிகழ்வில் அம்பர்நாத் கிளைக்கழகச் செயலாளர் ஜஸ்டின், திவா கிளைக்கழகச் செயலாளர் வேல்முருகன் மேனாள் அம்பர்நாத் கிளைச் செயலாளர் அண்ணா கதிர்வேல், முத்தமிழ் தண்டபாணி மற்றும் திவா கிளைக்கழக நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  துணைச்செயலாளர் வதிலை பிரதாபன் அவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

தத்தம் கிளைகளுக்குரிய உறுப்பினர்களுக்கான அட்டைகளையும் கிளைக்கழக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, கழக வரலாறு பற்றியும், மும்பையில் ஆற்றப்பட வேண்டிய கழகப்பணி சம்பந்தமாகவும், இயக்க உணர்வூட்டிய தலைவர்களைப் பற்றியும் நினைவுகூர்ந்து முனைவர் வதிலை பிரதாபன் தமது தலைமையுரையில் பேசினார்.

வரக்கூடிய காலங்களில் மாநில புறநகர் தி.மு.க செயலாளர் அலிசேக் மீரான் அறிவுறுத்தியபடி ஒவ்வொரு கிளைகளும் வருடத்தில் ஒரு மாதம், இயக்கம் சார்ந்த கூட்டங்கள் நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கழகத்தினரின் உணர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் அந்த அடிப்படையில் வருகிற ஆண்டு ஜனவரி மாதம் திவா கிளைக்கழகம் சார்பாகவும் பிப்ரவரி மாதம் அம்பர்நாத் கிளை சார்பாகவும் அனைத்து கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகளையும் அழைத்து கூட்டங்கள் நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கொரொனா தொற்றின் காரணமாக அனைவரும் சந்திக்க இயலாத சூழலில் இருப்பதால் நேரடி மேடை நிகழ்ச்சியாக தற்போதைக்கு நடத்த இயலவில்லையெனினும் நிலைமை சரியான பிறகு மேடை நிகழ்ச்சியாகவோ அல்லது சூம் மூலமாகவோ நடத்தும் பணிகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள முன்வந்த இரண்டு கிளைக் கழகச் செயலாளர்களையும் பாராட்டி கூட்டம் நிறைவுற்றது.

You already voted!
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096570
Users Today : 1
Total Users : 96570
Views Today : 3
Total views : 416730
Who's Online : 0
Your IP Address : 18.225.175.230

Archives (முந்தைய செய்திகள்)