18 Sep 2021 3:32 pmFeatured
மும்பை புறநகர் மாநில திமுக சார்பாக கழக முப்பெரும் விழா வருகின்ற 19.09.2021 ஞாயிறு அன்று காலை 10.30 மணி அளவில் பாண்டுப், பிரைட் உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.ரா.தமிழ்நேசன் அவர்கள் தொகுத்த தலைவர் கலைஞர் புகழ் பாடும் "தெற்கில் உதித்த திராவிடச் சூரியன்" எனும் கவிதை நூல் வெளியிடப்படுகிறது. பாண்டுப் கிளைக் கழகத்தைத் சார்ந்த குமார செல்வம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த தந்தை பெரியார் திருவுருவப் படத்தை மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்கள் திருவுருவப் படத்தை ஆரேகாலனி கிளைக் கழகச் செயலாளர் கு.தர்மலிங்கம் அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்தை மும்பை திராவிடர் கழகச் செயலாளர் பெ.கணேசன் அவர்களும், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்தை பீவண்டி கிளைக் கழகச் செயலாளர் மெகபூப் பாட்சா அவர்களும் திறந்து வைக்கின்றனர்.
தொடர்ந்து "தெற்கில் உதித்த திராவிடச் சூரியன்" கவிதை நூல் வெளியிடப்படுகிறது. கவிதை நூலின் முதல் பிரதியை மும்பை புறநகர் மாநில திமுக அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள் வெளியிட திருமதி சைபுன்னிசா சமீரா மீரான் அவர்களும், இரண்டாம் பிரதியை பீவண்டி கிளைக் கழக அவைத் தலைவர் முகமது அலி அவர்கள் வெளியிட மும்பை நகர அவைத்தலைவர் வே.ம.உத்தமன் அவர்களும், மூன்றாம் பிரதியை மும்பை, திராவிடர் கழகப் பொருளாளர் அ.கண்ணன் அவர்கள் வெளியிட மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ அவர்களும் பெற்றுக் கொள்கின்றனர்.
கழக மூத்த முன்னோடிகளுக்கு ஊக்கப்பரிசினை இளைஞர் அணி அமைப்பாளர் ந.வசந்த குமார் வழங்குகிறார். மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன், புரவலர் சோ.பா.குமரேசன், பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன், பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.தாசன், பேலஸ்துரை, தானா கிளைக் கழகச் செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் கிளைக் கழகச் செயலாளர் சு.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகிக்க மும்பை நகர திமுக பொறுப்பாளர் கருவூர்.இரா.பழனிச்சாமி, மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன், கலை, இலக்கியப் பேரவை பொறுப்பாளர் பாவலர் நெல்லைப் பைந்தமிழ், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெய்னுலாப்தீன், டோம்பிவிலி கிளைக் கழகச் செயலாளர் வீரை.சோ.பாபு, வாஷி கிளைக் கழகச் செயலாளர் ச.பழநி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிதை நூல் வெளியீட்டு விழா ஏற்புரையை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ ரா தமிழ் நேசன் நிகழ்த்த, இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.கணேசன் நன்றியுரை ஆற்றுகிறார்.
மேலும் இவ்விழாவில் இந்திய பேனா நண்பர் பேரவையைச் சார்ந்த எம்.கருண், பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன், தானா கிளைக் கழகத்தைச் சார்ந்த கே.ஏ.ஜாகிர் உசேன், தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன், கவிஞர் கி.வீரமணி, மும்பை நகர திமுகவைச் சார்ந்த என்.சண்முகராசன், பணகுடி சண்முகவேல், மாறன் ஆரிய சங்காரன், மும்பை இலக்கிய அணி அமைப்பாளர் ஜான் சாமுவேல், இலக்கிய அணி பொருளாளர் ப.உதயகுமார், புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், துணைச் செயலாளர்கள் சுப.மணிமாறன், தமிழின நேசன், இளைஞரணி அமைப்பாளர்கள் க.மூர்த்தி, யோவான் வேதநாயகம், கிளைக் கழகச் செயலாளர்கள் எஸ்.பி.செழியன், சக்தி வேல், செய்யது அலி, சோ.வேல்முருகன், து.ஜெஸ்டின், ச.நம்பி, பி.பகவதி, வே.ராஜேந்திரன், கே.மாரியப்பன், பல்வேறு கிளைக் கழகங்களைச் சார்ந்த இரமேஷ் பாய், கோவண்டி செல்வம், பைய்ந்தர் ஜாபர் கான், சீத்தா கேம்ப் முனுசாமி, முனியன், பெ.ஆழ்வார், பீவண்டி முஸ்தாக் அலி, பேராசிரியர் சு.சம்பத், முலுண்ட் ஆ.பால உதயகுமார், ஆசிரியர் ஜேம்ஸ் அந்தோணி, செம்பூர் ம.பரமசிவம், அ.வேலையா, ஜான் வர்கீஸ், ஆர்.இ.மணி, பொய்சர் எஸ்.சதாசிவம், ஆரே காலனி சிவா, இ.மாடசாமி, அப்துல் லத்தீப், வாஷி. தில்லை, ஆறுமுகம், பாண்டுப் எம் சாதாசிவம், சங்கர சுப்பு, முத்துப்பெருமாள், மணிகண்டன், எம்.இரமேஷ், ஆ.பிரேம், டி.யு.மணி, வெங்கடேஷ், செல்லப்பா, முலுண்ட் நம்பி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்..