11 Jun 2019 7:59 amFeatured
மும்பை புறநகர் மாநில தி.மு.க சார்பாக தலைவர் கலைஞரின் 96 ஆவது பிறந்தநாள்; தமிழர் எழுச்சி நாளாகவும் தேர்தல் வெற்றி கொண்டாட்டமாகவும் 09.06.2019 ஞாயிறு அன்று மாலை 6.30 மணிக்கு முலுண்ட் வித்யா மந்திர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான் அவர்கள் தலைமையேற்று தலைவர் கலைஞர் அவர்களின் போராட்ட வாழ்க்கை, அரசியல் நகர்வுகள் , ஆற்றிய சமூக சேவைகள், நிறைவேற்றிய திட்டங்கள் , சாதனைகள் குறித்தும், நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலில் கழகத்தின் செயற்பாடுகளையும், தலைவர் தளபதி அவர்களின் ஆளுமைத் திறனையும் குறித்து விரிவாக உரையாற்றினார்,
முன்னதாக துணைச் செயலாளர் முனைவர் வதிலை பிரதாபன் வரவேற்புரை ஆற்றினார். பாண்டுப் கிளை அவைத்தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் அவர்கள் தலைவர் கலைஞர் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்..
மும்பை புறநகர் மாநில தி.மு.க அவைத்தலைவர் ச.சுப்பிரமணியன், பொருளாளர் பி.கிருஷ்ணன் , மும்பை புறநகர் மாநில தி.மு.க துணைச் செயலாளர் அ.இளங்கோ, இலக்கியஅணி அமைப்பாளர் கவிஞர்.வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார், மும்பை திராவிட கழகத் தலைவர் பெ.கணேசன், பகுத்தறிவாளர் கழகம் அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன்,வரகூர் கிளை அவைத்தலைவர் பொன்னுசாமி,
இலக்கிய அணி துணைச் செயலாளர், ஜெய்னுல் ஆப்தீன் , மும்பை மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பொய்சர் க.மூர்த்தி, இலக்கிய அணி துணைச் செயலாளர் சுப.மணிமாறன், தானா கிளைச் செயலாளர் ஆ.பாலமுருகன் , முலுண்ட் கிளைக் கழகச் செயலாளர் சு.பெருமாள், பாண்டுப் கிளைக் கழகச் செயலாளர் கு.மாரியப்பன், வாசி கிளைக் கழகச் செயலாளர் சு.பழனி, செம்பூர் கிளை ம.பரமசிவன், பீவண்டி கிளை இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் எஸ்.சம்பத், தானா கிளை இளைஞரணி அமைப்பாளர் பால உதயகுமார், மும்பை திராவிடர் கழகம் அ.கண்ணன், சீத்தா கேம்ப் கிளை பெ.ஆழ்வார், வள்ளியூர் மணி, தமிழரசன், பெ.இராமானுஜம், காரை கரு.இரவீந்திரன், ஆகியோர் உரையாற்ற கவிஞர் பாபு சசிதரன் தலைவர் கலைஞரைப்பற்றிய கவிதை வாசித்தார்.தானா கிளை கே.ஏ. ஜாகிர் உசேன், செம்பூர் கிளைக் கழகச் செயலாளர் ச.நம்பி, , பீவண்டி கிளைப் பொருளாளர் முஸ்தாக் அலி, சேர்மன் துரை, வாசி தில்லை, வாசி ஆறுமுகம், பொய்சர் எம்.சதாசிவம், சான் பாஷா,கே.லோகமணி, ந.சரவணன், எம்.இரமேஷ், இராஜா, கே.எஸ்.மணி, ஜிம் சேகர், ச.சிரிகாந்த், உ.சங்கரசுப்பு, P.முத்து, ஓ.எச்.ஜாகிர் அசன், பி.சேகர், ப.மணி, எஸ்.பி.மணி, எஸ்.நயினார், எச்.அன்னபாண்டி, என்.முருகன், வினோத் அந்தோணி ராஜ், ஏ.இரவி, மாடசாமி, பெ.நம்பி, செல்லப்பன், எம்.வெங்கடேஷ், எஸ்.செல்லப்பா, பி.மணிகண்டன், பிரேம் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் நன்றியுரை ஆற்றினார்.