Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

அமைதிக்கான சர்வதேச கருத்தரங்கில் உரையாற்றிய மும்பைத் தமிழர்

03 Jan 2020 5:27 amFeatured Posted by: Sadanandan

You already voted!

கடந்த டிசம்பர் 16 முதல் 20 தேதி வரை புது டெல்லியில் அமைதிக்கான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா துவக்கி வைத்தார்,  நாற்பது நாடுகளிலிருந்து அமைதி ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். பல நாடுகளில் பள்ளி செல்லும் வயதிலேயே மாணவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். பல பள்ளிகளில் வளாக வேலைவாய்ப்பு முகாம் போன்று இராணுவத்தில் சேர மாணவர்கள் உந்தப்படுகிறார்கள் அத்துடன் இராணுவத்தை போன்ற துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது இதனை தடுப்பது குறித்த இந்த கருத்தரங்கில் 19தேதியன்று பத்லாப்பூர் தமிழர் நலச் சங்க இணைச்செயலாளரும்,தென்கிழக்கு ஆசிய குடிமக்களின் அமைதிக்கான கூட்டமைப்பின் ஸ்தாபகருமான முனைவர் ஜோ. இரவிக்குமார் ஸ்டீபன் கலந்து கொண்டு, "இளைஞர்கள் (குழந்தைகள்) இராணுவப் படுத்தப் படுவதை தவிர்க்க செய்ய வேண்டிய யுக்திகள்" குறித்து உரையாற்றினார்.

இந்தச் செய்தி புது டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து வெளிவரும் 'இராஜஸ்தான் பத்திகா' முதல் பக்கத்தில் அவரது படத்துடன் செய்தியாக வெளியிட்டது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்த நிகழ்வு ஆகும் தென்னரசு சார்பில் இந்த மும்பை தமிழருக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறது.

தற்கொலை தடுப்பு ஹாட்லைன் சேவை

அத்துடன் தென்னரசு இவரை தொடர்பு கொண்டபோது இன்றைய இளைய சமுதாயம் காதல் தோல்வி காரணமாகவும் மற்றும் வாழ்வில் விரக்தி அடைந்த ஏனைய பிறரும் தற்கொலைக்கு உந்தபட்டு தனது வாழ்வினை முடித்துக்கொள்கின்றனர் அப்படி பட்டவர்களுக்கு உதவும் வகையில் தற்கொலை தடுப்பு ஹாட்லைன் சேவையை செய்து வருவதாகவும் தெரிவித்தார், தற்கொலைக்கு உந்தப்படும் நபர் தானாகவோ அல்லது அவரது மனநிலையை அறிந்தவர்களோ இவரை தொடர்புகொண்டு சம்மந்தப்பட நபரை ஒரு ஐந்து நிமிடம் பேசவைத்தால் கூட போதும் இவர்களது தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடமுடியும் என்று கூறினார். ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த சேவையினை பெற 9080819230  எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096543
Users Today : 4
Total Users : 96543
Views Today : 6
Total views : 416680
Who's Online : 1
Your IP Address : 18.219.176.215

Archives (முந்தைய செய்திகள்)