17 Aug 2019 11:12 amFeatured
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி!
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி 18.08.2019 ஞாயிறு அன்று நண்பகல் 2.00 மணிக்கு பாண்டுப் பிரைட் உயர்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது. நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
நிகழ்வுகள்
மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி பொருளாளர் ப.உதயகுமார் வரவேற்புரை ஆற்றுகிறார்
மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் தலைமை தாங்குகிறார்.
போட்டி நடுவர்கள்
இப்போட்டிக்கு மும்பைத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் செயலாளர் மிக்கேல் அந்தோணி, ஜெரிமெரி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பொ.வெங்கடாசலம் , மும்பைத் தமிழ்ச் சங்க செயலாளர் சுந்தரி வெங்கட் ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பரிசுகள்
இப்போட்டியில் முதல் எட்டு இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையாக முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ 3000, மூன்றாம் பரிசு ரூ.2000 மும், ஆறுதல் பரிசாக ஐந்து பேருக்கு தலா ரூ1500 வீதம் முரசொலி அறக்கட்டளை வழங்குகிறது.மேலும், இப்போட்டியில் முதல் முப்பது இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு "பாரதிதாசன் கவிதைகள்" தொகுப்பு நூலும், பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் குறிப்பேடுகளும் ; பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
பரிசு வழங்கல்
மும்பை புறநகர் மாநில திமுக செயலாளர் அலிசேக் மீரான், இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன், மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார், இலக்கிய அணி புரவலர் சோ.பா.குமரேசன், துணைச் செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் பரிசுகள் வழங்குகின்றனர்
பாராட்டுச் சான்றிதழ்
மும்பை புறநகர் மாநில திமுக பொருளாளர் பி.கிருஷ்ணன், துணைச் செயலாளர்கள் முனைவர் வதிலை பிரதாபன், அ.இளங்கோ, பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன், துணைச் செயலாளர் சுப.மணிமாறன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழை வழங்குகின்றனர்.
வாழ்த்துரை
மும்பை மாநகர திமுக பொறுப்பாளர் கரூர் இரா.பழனிச்சாமி, மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு,மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
முன்னிலை
மும்பை புறநகர் மாநில திமுக மேனாள் செயலாளர் பொ.அப்பாத்துரை, மேனாள் அவைத் தலைவர் வி.தேவதாசன், கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் பாவலர் நெல்லைப் பைந்தமிழ், இளைஞரணி துணைச் செயலாளர்கள் இரா.கணேசன், பொய்சர் க.மூர்த்தி,மால்வாணி கிளைச் செயலாளர் எஸ்.பி.செழியன், டோம்பிவிலி கிளைச் செயலாளர் வீரை.சோ.பாபு, தானா கிளை கே.ஏ.ஜாகிர் உசேன், பீவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாட்சா, தானா கிளைச் செயலாளர் ஆ.பாலமுருகன், முலுண்ட் கிளைச் செயலாளர் இரா.பெருமாள், பாண்டூப் கிளைச் செயலாளர் கு.மாரியப்பன், ஜோகேஸ்வரி கிளைச் செயலாளர் செய்யது அலி, கோரேகான் கிளைச் செயலாளர் த.விஜயகுமார், செம்பூர் கிளைச் செயலாளர் நம்பி, அம்பர்நாத் கிளைச் செயலாளர் து.ஜெஸ்டின், திவா கிளைச் செயலாளர் சோ.வேல் முருகன், சயான் கிளைச் செயலாளர் பி.பகவதி, பொய்சர் கிளைச் செயலாளர் கே.மாரியப்பன்,பீவண்டி கிளை அவைத்தலைவர் முகமது அலி, பொருளாளர் முஸ்தாக் அலி, ஆ.பாலசுப்பிரமணியம், ஆசிரியர் அந்தோணி ஜேம்ஸ், அ.வேலய்யா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்
சவுத் இண்டியன் அசோசியேஷன் ஆங்கிலப் பள்ளி நிறுவனர் டி.என். முத்து கிருஷ்ணன், ஜெரிமெரி தமிழ்ச் சங்க மேனாள் தலைவர் கோ.சீனிவாசகம், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், மும்பை மாநகரமேனாள் இளைஞரணி அமைப்பாளர் சாத்தரசன்பட்டி மா. சேசுராஜ், தாராவி கிளை அவைத்தலைவர் வே.ம.உத்தமன், இந்திய பேனா நண்பர் பேரவை நிறுவனத் தலைவர் எம்.கருண், தருண் பாரத் நற்பணி மன்ற நிறுவனர் இராஜேந்திர சுவாமி, செம்பூர் தமிழர் பாசறைத் தலைவர் ஆ.பி.சுரேஷ், மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன்,கோரேகான் தமிழ்ச் சங்க முன்னாள் செயலாளர் கே.ஆர்.சீனிவாசன், பாண்டுப் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ்.வி.டி.தாசன், தமிழாசிரியர் ஆறுமுகம் பெருமாள்,
தமிழ் காப்போம் செயலாளர் இறை.சா.இராசேந்திரன்,
அணுசக்தி நகர் தமிழ் கலை மன்றம் செயலாளர் பு.தேவராசன், கவிஞர் பாபு சசீதரன், மும்பை மாநகர திமுகவைச் சார்ந்த என்.வி.சண்முகராசன், மாறன் ஆரிய சங்காரன், ஜெரிமெரி தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் சிற்றரசன், சீத்தாகேம்ப் கிளைக் கழக மேனாள் பொறுப்பாளர் முனுசாமி, ஆழ்வார், பீவண்டி கிளை இளைஞரணி அமைப்பாளர் பேராசிரியர் சு.சம்பத், தானா கிளை இளைஞரணி அமைப்பாளர் பால உதயகுமார், வள்ளியூர் மணி, பொய்சர் எஸ். சதாசிவம், ம.பரமசிவம்,தமிழரசன், வாஷி ஆறுமுகம், சேர்மன் துரை, வாஷி தில்லை, அப்துல் லத்தீப், பாண்டுப் எஸ் சதாசிவம், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர்.
இறுதியில் மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர் தமிழின நேசன் நன்றியுரை ஆற்றுகிறார்.