19 Aug 2019 11:31 pmFeatured
பேரறிஞர் அண்ணா அவர்களின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் முரசொலி அறக்கட்டளை சார்பாக மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி நடத்திய
பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி 18.08.2019 ஞாயிறு அன்று பகல் 2.00 மணிக்கு பாண்டுப் பிரைட் உயர்நிலைப் பள்ளியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
நூற்றி இருபது மாணவ-மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர், ஆசிரியர்களும், பெற்றோர்களும் பெரும் அளவில் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சிக்கு மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணித் தலைவர் வே.சதானந்தன் தலைமையேற்று உரையாற்றினார். முன்னதாக மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி புரவலர் கவிஞர் இரஜகை நிலவன் வரவேற்புரை ஆற்றினார். மும்பை புறநகர் மாநில திமுக இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் போட்டியினை துவக்கிவைத்து உரையாற்றினார்.
நடுவர்கள்
மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் மிக்கேல் அந்தோணி, ஜெரிமெரி தமிழ்ச் சங்கத் தலைவர் பொ.வெங்கடாசலம் , மும்பைத் தமிழ்ச் சங்க செயலாளர் சுந்தரி வெங்கட் ஆகியோர் நடுவர்களாக பொறுப்பேற்று போட்டியை சிறப்பாக வழி நடத்தினர்.
வெற்றி பெற்றவர்கள்
நாராயணா ஆங்கில மேல்நிலைபள்ளி மாணவி சுவேதா ஸ்ரீ குண்சேகரன் முதலாவது பரிசையும்
காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவி தங்க கனி இரண்டாவது பரிசையும்
ஆரே காலனி மாநகராட்சி தமிழ் பள்ளியைச் சார்ந்த சுஜி ராஜ்கண்ணு மூன்றாவது பரிசையும் வென்றனர்.
ஆறுதல் பரிசு
ஆரே காலனி மாநகராட்சி தமிழ் பள்ளி மாணவி ஹரணி.சி, நவாப்டேங்க் மாநகராட்சி தமிழ் பள்ளி மாணவி ஆர்.பிரீத்தி, குல்சர்மார்க் மாநகராட்சி அங்கிலப் பள்ளி மாணவி அனீஷ்பாத்திமா அப்துல் லத்திப், ஷஹாஜி நகர் மாநகராட்சி தமிழ் பள்ளி மாணவி வி.லட்சுமி.வி, காமராஜர் நினைவு ஆங்கில மேல்நிலைப்பள்ளி திரவியா,டோம்பிவிலி எஸ்.ஐ.எ மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.நவீன் குமார் ஆகியோர் ஆறுதல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சிறப்பு பரிசு
டோம்பிவிலி எஸ்.ஐ.எ மேல்நிலைப் பள்ளி
சிறப்பு பரிசாக டோம்பிவிலி எஸ்.ஐ.எ மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த அனிருத் லட்சுமணன்,சபரீஷ் கோதண்டராமன்,நவீன்குமார், பவித்ரா, அரங்கராஜ், பிரியா முத்துகிருஷ்ணன், மதுமிதா, வினோலியா,
கம்பன் உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி இராஜலட்சுமி,
காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளி
காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியை சார்ந்த கனிமொழி பாரதி, சக்தி லட்சுமி,தங்ககனி,திரவியா,மெர்சி அணு,ஸ்ரீஷா,
குல்மார்க் மாநகராட்சி ஆங்கிலப் பள்ளியைச் சார்ந்த அனிஷ்பாத்திமா,
திலக்நகர் மாநகராட்சி தமிழ் பள்ளி
திலக்நகர் மாநகராட்சி தமிழ் பள்ளியைச் சேர்ந்த சந்தியா.ஆர், முத்துமாரி,சத்யா
நவாப்டேங்க் மாநகராட்சி தமிழ் பள்ளியைச் சார்ந்த அபிநயா, அஷ்வின், சிவன்ராஜ், பிரித்தி, ஆரேகாலனி பள்ளியைசார்ந்த சரண்யா,சுஜிராஜ் கண்ணு, நிகல்யா, வினு, ஹரணி,
ஷாஜிநகர் பள்ளியைசாந்த ஆனந்தஜோதி,சந்தியா, லட்சுமி வி, வினிதா. பா ஆகியோரும் பெற்றனர்.
சிறப்பு பரிசு பெற்ற மாணவ,மாணவியருக்கு ”பாரதிதாசன் கவிதைகள்" தொகுப்பு நூல் பரிசாக வழங்கப்பட்டது
மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும், குறிப்பேடுகளும் வழங்கப்பட்டது.
வாழ்த்துரை
மும்பைத் தமிழ்ச் சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
மும்பை புறநகர் மாநில திமுக அவைத் தலைவர் ச.சுப்பிரமணியன்,
மும்பை புறநகர் மாநில துணைச் செயலாளர் அ.இளங்கோ,
மும்பை மாநில இளைஞரணி அமைப்பாளர் ந.வசந்த குமார்,
பம்பாய்த் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன்,
பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.இரவிச்சந்திரன்,
ஜெரிமெரி தமிழ்ச் சங்க மேனாள் தலைவர கோ.சீனிவாசகம், இளைஞரணி துணை அமைப்பாளர் பொய்சர் க.மூர்த்தி, பீவண்டி கிளைச் செயலாளர் மெகபூப் பாட்சா, தானா கிளைச் செயலாளர் ஆ.பாலமுருகன், வாஷி கிளைக் கழகச் செயலாளர் ச.பழனி, பீவண்டி கிளை பொருளாளர் முஸ்தாக் அலி,
ஜெரிமெரி தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சிற்றரசன், துணைச் செயலாளர் எம்.இராஜெந்திரன், மும்பை புறநகர் மாநில திமுக கிளைக் கழகங்களைச் சார்ந்த வள்ளியூர் மணி, தோ.செ.கருணாநிதி,
பொய்சர் எஸ்.சதாசிவம்,,பீவண்டி எச்.ஜாகிர் அசன்,அம்பர்நாத் சாமிநாதன் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் குறிப்பேடுகள் வழங்கினர்.
ஆசிரியர்கள் தாசன், முத்தையா, செல்வன், பொற்செல்வி கருணாநிதி, மலர்விழி அசோக்குமார், தேவி, சர்மிளா கிருபா, தனலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள் பெற்றோரும், பொதுமக்கள் பலரும் போட்டியை கண்டுகளித்தனர்.
இறுதியில் மும்பை புறநகர் மாநில திமுக துணைச் செயலாளர் அ.இளங்கோ நன்றியுரை ஆற்றினார்.
புகைப்பட குறிப்பு: மும்பையில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணாக்கர்களுடன் மும்பை புறநகர் மாநில திமுக நிர்வாகிகள்,
ஆசிரியர்கள், மற்றும் தமிழமைப்பு நிர்வாகிகள்