16 Nov 2022 8:42 amFeatured
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக மனு சாஸ்திர நூல் வலியுறுத்தும் ஏற்றத்தாழ்வை கண்டித்து மும்பை, தாராவியில் விசிக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தொகுத்த மனு ஸ்மிருதி நூலில் நாத்திகர்கள், பௌத்தர்கள் பெண்கள் மற்றும் சூத்திரர்கள் (பிற்படுத்தப்பட்ட மக்கள்) பற்றி கூறப்பட்டுள்ள கருத்துக்களை விளக்கி கண்டிக்கும் கூட்டம் பாபாசாகிப் அம்பேத்கர் திடல் (சிலை ) அருகில்,கணேசர் சால் தாராவி.கிராஸ்ரோடு தாராவியில் நவம்பர் 13 ஞாயிறு மாலை 7 மணி முதல் 10:30 மணி வரை நடந்தது.
மனு ஸ்மிருதி குறித்து பொதுமக்கள் ,பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தொகுத்த மனு ஸ்மிருதி விளக்க குறிப்பேடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வை திராவிடர் கழகத்தலைவர் பெ.கணேசன் ,தென்னிந்திய ஆதிதிராவிட மகா சபை பொதுச்செயலாளர் மாறன் நாயகம், ,மகிழ்ச்சி மகளிர் பேரவை முத்துலட்சுமி ,ஆம் ஆத்மீ கட்சி வழக்குரைஞர் மஞ்சுளா , மும்பை விழித்தெழு இயக்க பன்னீர் செல்வம் , பகுத்தறிவாளர் கழகம் ரவிச்சந்திரன், கே வி என் ஸ்டார் உரியமையாளர் தேவராஜ் மற்றும் ஜெய் பீம் அறக்கட்டளை சுரேஷ் குமார் முன்னிலை வகித்தனர்
மும்பை விழித்தெழு இயக்க சிறீதர் தமிழன் வரவேற்புரை மற்றும் தொகுப்புரை வழங்க கூட்டத்தில் பங்கேற்றவர்கள் நாலு வர்ண கோட்பாடு வலியுறுத்தும் ஏற்றத்தாழ்வு குறித்தும், புத்தர், மகாவீரர், பவுத்தம் ,சமணம் ,சோழர் வரலாறு ,மௌரிய ஆட்சி, தமிழர் நாகர்கள் வரலாறு, மனு வரலாறு, சுமதிப்பார்க்கவா ,பூசிய மித்திரன் ,மன்னன் அசோகர் ,கபீர் ,புத்தர் ஜோதிரா பூலே ,பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர் குறித்து பேசினார்கள்.
மனு ஸ்மிருதி வலியுறுத்தும் நாலு வர்ண கோட்பாடு ஏற்றத்தாழ்வு குறித்து பேசியவர்கள் மனு ஸ்மிருதி தான் ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை, அதை நடைமுறைபடுத்துவது தான் பாஜகவின் செயல்திட்டம். இதை யாராலும் மறுக்க முடியாது. ஆர்எஸ்எஸ் என்பது ஒரு சராசரியான கலாச்சார இயக்கமோ அல்லது தொண்டு இயக்கமோ இல்லை. அது ஒரு பாசிச பயங்கரவாத இயக்கம். அதேபோல் பாஜக என்பதும் மற்ற கட்சிகளை போல் ஒரு சராசரி கட்சி அல்ல. அது ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கையை, மனு ஸ்மிருதியை நடைமுறைபடுத்த உருவாக்கப்பட்ட அரசியல் பிரிவு இது போன்ற மக்களை பிழைவுப்படுத்தும் மதவாத சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, இவர்களிடம் இருந்து மக்களை விலக்கி வைத்து பாதுகாப்பது நமது கடமை என கூட்டத்தில் பங்கேற்றுவார்கள் பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் உத்தமன், சிவசேனா ஆனந்த ராஜ் சமூக சேவகர் என் வி குமார், மனித உரிமையாளர் சங்கர் டிராவிட், நபியா எத்திராஜ், ஹன்ட்ஸ் டு பவுண்டேசன் சைமன் மற்றும் லெனின் , இன்லைட்மேன்ட் அமைப்பு ராஜேஷ், ஜெய் பீம் அறக்கட்டளை குட்டி மற்றும் நித்தி , மகிழ்ச்சி மகளிர் பேரவை வென்னிலா, வனிதா, வளர்மதி மற்றும் மனோமணி, திராவிடர் கழகம் கண்ணன் மற்றும் பாலாஜி, பவுத்த இயக்கம் ராஜேந்திரன், விடிவெள்ளி இயக்கம் கதிரவன், தமிழர் நட்புறவு இயக்கம் மா கதிரவன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தாராவியில் உள்ள பெண்கள் கலந்துக்கொண்டு பேசினார்கள்.
இந்நிகழ்வை பன்னீர் செல்வம் ,மதன், பொன் செல்வன், சூரிமகேஷ் ,கதிர் ,மாதவன், அசோக் ,மனோஜ் மணிமுத்து, வெற்றிச்செல்வன், தானே ராஜு, பிரான்சிஸ் போன்றவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இறுதியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
நிகழ்வில் நிறைவாக தங்கபாண்டியன் நன்றியுரையாற்றினார்