Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

பல்கலைக் கழக வேந்தராக தமிழக முதல்வர் – புதிய சட்டமசோதா நிறைவேற்றம்.

29 Apr 2022 12:22 amFeatured Posted by: Sadanandan

You already voted!
thennarasu Pictures mks

சென்னைக்கு அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

2021-22-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை உரையின்போது நிதியமைச்சா் மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை தனியாக அமைப்பதற்கு ரூ.2 கோடி முதலில் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதைத் தொடா்ந்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது, இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவ பல்ககலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் பேரவையில் அறிவித்தார்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதல்வர் மு.க ஸ்டாலினும், இணை வேந்தராக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்து வரும் நிலையில், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாற்றம் செய்யபட்டுள்ளது. இதற்கான துணை வேந்தர், மற்ற பதிவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் வரும் காலங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் என்பது, தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று பெயர்களில் இருந்து ஒருவர் வேந்தரால் (முதல்வர்) நியமிக்கப்பட வேண்டும் என்று மசோதாவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்கள் அனைத்தையும் வழங்குவார் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சட்டப்பேரவை செயலகம் மூலமாக, சட்டத்துறை இந்த மசோதாக்களான கோப்புகளை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 15க்கும் மேற்பட்ட சட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் நிலுவையில் இருக்கும்போது, இன்று சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096542
Users Today : 3
Total Users : 96542
Views Today : 3
Total views : 416677
Who's Online : 0
Your IP Address : 3.144.8.68

Archives (முந்தைய செய்திகள்)