08 May 2021 1:53 pmFeatured
வருகிற 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பாவாணர் தமிழ் அனைத்துலக 19ஆவது ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.
சிறீமதி மஜெந்தா மகிந்தன். மாதுளா மகிந்தன் மிருதங்கம் மருதகன் மகிந்தன். மருதம் கலைக்கூடம், கனடா, ஆகியோர் இணைந்து வழங்கும் தமிழ் வணக்கத்துடன் தொடங்கும் நிகழ்வில் மும்பை செல்வி யாமினிஸ்ரீ யின் நாட்டியத்தைத் தொடர்ந்து விழா தொடங்கவுள்ளது.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் பாவரசு வதிலை பிரதாபன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஔவைக்கோட்ட மதிப்புயர் தலைவர் முத்தமிழ் அரசி முனைவர் சரஸ்வதி இராமநாதன் மாநாட்டுத் தொடக்கவுரை ஆற்றுகிறார்.
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்ற ஆலோசகர்கள் கருவூர் இரா பழனிச்சாமி, எஸ்.இராமதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளார்கள்.
கருத்தரங்கம் (முற்பகல் 10.00 மணி
"பாவாணரின் பல்வகைப் பணிகள்" எனும் பொருண்மையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் முனைவர் செ. கற்பகம் தலைமையில் நடைபெறும் கருத்தரங்க நிகழ்வில்
சிட்னி - ஆசுதிரேலியா தமிழ் இலக்கிய கலைமன்றத் தலைவர் முனைவர் இரத்தின மகேந்திரன் தொடக்கவுரை ஆற்றுகிறார்
உகைத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். சென்னை. உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா 'பகுத்தறிவும் நாளும் கோளும்' என்ற தலைப்பிலும்
முனைவர் சிறி. நாகபூசணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 'இசைத்தமிழ்க் கலம்பகம் எனும் தலைப்பிலும்'
திருவாட்டி சசிகலா அரமேஷ் குமார் சுவிச்சர்லாந்து 'ஒழுக்கமும் பண்பாடும்' எனும் தலைப்பிலும்
செல்வி மதுவாங்கி ஸ்ரீசுந்தராசா, யாழ்ப்பானம் பல்கலைக்கழகம் 'இசைத்தமிழ்ப்பணிகள்' எனும் தலைப்பிலும்
முனைவர் அ. அரா. முல்லைக்கோ பெங்களூர் ’வாழ்வியல், நெறிகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்கள்.
கவியரங்கம் (முற்பகல் 11.00 மணி
திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகத் தலைவர் முனைவர் மு. கலைவேந்தன் தலைமையில் நடைபெறவுள்ள கவியரங்க நிகழ்வில் "பாவாணரின் தமிழ் நெறிகள்" எனும் பொருண்மையில் மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தைச் சேர்ந்த மும்பைவாழ் கவிஞர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.
பாவலர் முகவைதிருநாதன்
கவிஞர் அரியக்குடி மெய்யப்பன்
கவிமாமணி இரஜகை நிலவன்
கவிஞர் பாபு சசிதரன்
கவிஞர் விஜி. வெங்கட்
கவிச்செய்மல் ஆரோக்கியசெல்வி
முனைவர் ம.வி. வைத்திலிங்கம்
கவிஞர் பிரவினா சேகர்
கவிஞர் வெங்கட்சுப்ரமணியன்
கவிஞர் கனிஷ்டாரூபன்
கவிஞர்.அ.நர்மதா
ஆகியோர் கவி பாடுகின்றார்கள்.
ஆராய்ச்சி அரங்கம் (பிற்பகல் 11.30 மணி)
மும்பை இலெமூரியா அறக்கட்டளைத் தலைவர் உலகப்பெருந்தமிழர் சு.குமணராசன் தலைமையில் நடைபெறவுள்ள ஆராய்ச்சி அரங்கத்தில் கடலூர் மேனாள் உ.த.க.தலைவர் புலவர் கதிர் முத்தையன் தமிழா தமிழா... எனும் பொருண்மையில் உரையாற்றவுள்ளார்.
பாவாணரின் நூல் அறிமுக அரங்கம் பிற்பகல் 12.00 மணி
இராஜபாளையம் முரம்பு - பாவாணர் கோட்ட நிறுவநர் தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் மற்றும் கடையநல்லூர் அரசுக்கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பா.வேலம்மாள் ஆகியோர் அறிமுக உரையாற்றவுள்ளார்கள்.
(நிறைவுரை : (12.30 மணி)
சென்னை - செந்தமிழ்ச் சொற்பிறப்பியம் அகர முதலித்திட்ட இயக்குநர் தமிழ்த்திரு தங்க காமராஜ் நிறைவுரையாற்றவுள்ளார்.
முரம்பு பாவாணர் கோட்டத்தில் 29.05,2021 அன்று நடைபெறும் மாநாட்டு நிறைவு விழாவில் நூல் வெளியிடப்படும், பேராளர்களின் கட்டுரை வாசிப்பும் நடைபெறும்,
மாநாட்டு நிகழ்ச்சிகளில் இணைய விரும்புவோர் பெயர்ப்பதிவிற்கு புலன எண்.9486742503 முனைவர் .கலைவேந்தன், மாநாட்டு இயக்குநர், ஔவைக்கோட்டம், திருவையாறு என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
விழாவில் தமிழன்பர்களும் யாவரும் கலந்து இன்புறும்படி அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
கலந்துகொள்ள
ZOOM ID : 844 0431 6605
PASSWORD : 12345
மகிழ்ச்சி. நிகழ்வு பதிவுசெய்யப்பட்ட மைக்கு. கருத்தரங்கம் சிறக்கட்டும். மொழிஞாயிறு வின் தமிழாய்வு பாரெங்கும் பரவட்டும்.