06 Jan 2021 5:11 pmFeatured
மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பில் வருகிற 10-01-2021 ஞாயிறு மாலை 6 மணியளவில் இணையம் வழியாக சூம் செயலி மூலம் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் பெரியாரின் பார்வையில் பெண்ணியம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் புரவலர் அலிசேக் மீரான் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வினை ஆட்சிமன்றக் குழுத் துணைச் செயலாளர் பொற்செல்வி கருணாநிதி வரவேற்புரையும் மன்ற ஆலோசகர் பாவலர் முகவை திருநாதன் தொடக்கவுரையும் ஆற்ற உள்ளார்கள்.
மன்றத்தின் கலைப்பிரிவின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.எஸ்.நரசிம்மன் குழுவினர் வழங்கும் பெண்களின் பெருமையைக் கூறும் பாடல்களோடு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
மன்ற நிர்வாகிகள், புரவலர்கள், ஆலோசகர்கள் மற்றும் அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்க உள்ளார்கள்.
தந்தை பெரியாரின் சமூக விழிப்புணர்வூட்டும் பல்வேறு பணிகளில் உலக மாந்தர்களால் பெரிதும் போற்றப்படும் பெண்ணியச் சிந்தனைகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்பவைகள். எனவே அத்தகு நோக்கோடு பெண்கள் படும் பலதரப்பட்ட பாடுகளையும் அதற்காகப் போராடிய பெரியாரின் சிந்தனைகளை விளக்குகின்ற விதமாகவும் "பெரியார் பார்வையில் பெண்ணியம்" என்ற தலைப்பில் ஐந்து துணைத் தலைப்புகளில் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் சிறப்பு மிகு பேச்சாளர்கள் உரையாற்ற உள்ளார்கள்.
ஆகிய துணைத் தலைப்புகளில் உரையாற்ற உள்ளனர்.
நிகழ்வை ஆட்சிமன்றக்குழுவின் வே.சதானந்தன் மற்றும் நிர்வாகக்குழுத் துணைப் பொருளாளர் வெங்கட் சுப்ரமண்யன் ஒருங்கிணைக்கிறார்கள்.
இறுதியில் மன்றத்தின் நிர்வாகக் குழுத் துணைச்செயலாளர் பு.தேவராசன் நன்றியுரை ஆற்றுகிறார்.
மன்றம் நடத்துகின்ற பெண்ணின் பெருமையை உணர்த்தும் தந்தை பெரியாரின் சிந்தனைகளை எடுத்து விளக்கவுள்ள இந்த நிகழ்வில் அறிவுசார் பெரியோர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி மன்றத்தின் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன் கேட்டுக் கொள்கின்றார்.