Thennarasu, தென்னரசு மும்பையிலிருந்து வெளியாகும் செய்தித் தளம்

Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

கோழிக்கோடு விமான விபத்தும் – டேபிள் டாப் ஓடுதளமும். மூடப்படவேண்டுமா ?

08 Aug 2020 2:37 pmFeatured Posted by: Sadanandan

You already voted!

துபாயிலிருந்து கோழிகோடு வந்த ஏர் இந்திய விமானம் IX 1344 ஓடுபாதையை விட்டுவிலகி விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அத்துடன் குறைந்தது 40 பயணிகள் காயமடைந்திருப்பதாக இந்திய ஊடகங்களின் ஆரம்பகட்ட அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 

191 பயணிகளைக் கொண்டிருந்த அந்த விமானம் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 7ஆம் தேதி) இரவு 7:40 மணியளவில் கனத்த மழைக்கு மத்தியில் தரையிறங்க தொடங்கியது. அப்போது விமான நிலையத்தின் ஓடுபாதையில் சறுக்கி இரண்டு துண்டாகப் பிளந்த அந்த விமானம் தீப்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து  வெளியேற்றப்பட்டிருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம் தரையிறங்கிய போது அதன் முன்சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, ஓடுபாதையிலிருந்து விலகி அருகிலுள்ள பள்ளம் ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. 

ஆனால்.........?

டேபிள்டாப் விமான ஓடுதளம்

கோழிக்கோடு விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்குவதை பல சர்வதேச விமான நிறுவனங்கள் முன்பே நிறுத்தி விட்டன. இதற்கு காரணம், அந்த விமான நிலையம் அமைந்துள்ள இடமும் அதன் ஓடுபாதை அம்சமும் பாதுகாப்பானது இல்லை என்பதால்தான்.

கோழிக்கோடு விமான நிலையத்திற்கு டேபிள் டாப் ரன்வே என்ற பெயர் உண்டு. இதற்கு காரணம், ஒரு நீளமான மேஜை எப்படி இருக்குமோ, அப்படித்தான் கோழிக்கோடு விமான நிலைய ரன்வே பகுதியில் அமைந்துள்ளது.

சுற்றி வரை பள்ளம், நடுவே ஒரு பகுதி மட்டும் ஓடு பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்கவாட்டு பகுதி அனைத்தும், பெரிய பள்ளம். சுமார் 200 அடி ஆழம் இருக்குமாம். மேலே ஒரு ஓடு பாதை. இப்படித்தான் இருக்கிறது கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடு பாதை பகுதி. எனவேதான், இதை டேபிள் டாப் ஓடுபாதை என்று அழைக்கிறார்கள். டேபிள் மாதியே ஒரு தோற்றம் இருப்பதால்தான் அந்த பெயர்.

அனைத்து விமான நிலையங்களிலும் ஓடு பாதை முடிந்ததும், சற்று தூரம் புல்வெளி போன்ற பரப்பு இருக்கும். ஒருவேளை, விமானம் வழுக்கிக் கொண்டு ஓடினாலும், அங்கே கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால், இந்த ஓடு பாதையில் இரண்டு புறமும் புல்வெளியின்றி பள்ளத்தாக்குதான் உள்ளது  இங்கு விமானங்கள் தரை இறக்கப்படும்போது ரன்வேயில் ஓரத்திற்கு சென்று விட்டால் கட்டுப்பாடு கிடைக்காமல் கீழே விழுந்து நொறுங்கும் வாய்ப்பு ஏற்படும். அப்படித்தான் நேற்று துபாயிலிருந்து கோழிக்கோடு வந்து இறங்கிய ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.

கடுமையான கனமழை காரணமாக ரன்வே பகுதி ஈரப்பதமாக இருந்தது. இந்த நிலையில்தான் விமானத்தை தரையிறக்கும் போது விமானி கடும் சிரமத்தை உணர்ந்து உள்ளார். இரண்டு முறை முயற்சி செய்து முடியாமல், மூன்றாவது முறைதான் விமானத்தை தரை இறங்கி உள்ளார். அது ஓடுபாதையில் இருந்து சறுக்கிக் கொண்டு பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்து போனது. இந்த சம்பவத்தில் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். விமானத்தில் மொத்தம் 190 பேர் அதில் மனதில் இருந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களும், தங்களது பெரிய வகை விமானங்களான, போயிங் 777, ஏர்பஸ் A330 போன்ற விமானங்களை கோழிக்கோடு இயக்குவதை எப்போதோ நிறுத்திவிட்டன என்பதும் நினைவு கூரத்தக்கதாக உள்ளது. எனவே கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

You already voted!
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisement

செய்திகள்

Advertisement
Advertisement

Visitors

096570
Users Today : 1
Total Users : 96570
Views Today : 3
Total views : 416730
Who's Online : 0
Your IP Address : 13.58.61.197

Archives (முந்தைய செய்திகள்)