17 Jul 2020 6:48 pmFeatured
கல்யாண்-கிழக்கில் தமிழ் நற்பணி மன்றம் பொருட்களை வினியோகித்தது
மகாராஷ்டிரா மாநில தொழில் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன்.அன்பழகன் IAS அவர்கள் சார்பாக கல்யாண்-கி பகுதியில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கடந்த நான்கு மாதங்களாக கொரோனாத் தொற்றின் பிடியில் மும்பையின் பல்வேறு பகுதியைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும், பெரும்பாலோனோர்வேலை வாய்ப்பில்லாமல் நலிவான பொருளாதாரச் சூழலில் சிக்கித்தவிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த துன்பியல் காலத்திலும் மும்பையில் மட்டுமின்றி மராட்டிய மாநிலம் முழுவதும் தமிழர்கள் எங்கெல்லாம் இன்னலுறுகிறார்களோ அங்கெல்லாம் உணவுப் பொருட்களையும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கி பசிப்பிணி போக்கும் மிகச் சிறந்த சேவையினை மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர்.பொன்.அன்பழகன் IAS அவர்கள் செயலாற்றி வருகிறார்.
கல்யாண் பகுதியில் உள்ள மக்களும் பெரிதும் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து அவர்களது துயர் தீர்க்க எண்ணி பெரிதும் முயற்சித்து இறுதியில் மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் உறுதுணையில் இலக்கிய அணிச் செயளாளர் கவிஞர் வ.இரா.தமிழ்நேசன் ஏற்பாட்டில் பொன்.அன்பழகன் IAS அவர்கள் தாயுள்ளத்தோடு உதவிகள் வழங்க முன்வந்தார்.
சற்றொப்ப 1.50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ நல்ல தரமான உணவுப் பொருட்களை 15 கிலோ வீதம் 200 பொதிகளில் கடந்த 13.07.2020 அன்று அனுப்பி வைத்தார்கள்.
கல்யாண் டோம்பிவிலி லாக்டவுன் காரணமாகவும் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருவதால் வெளியே வரமுடியாமலும் பலர் சிரமப்பட்ட காரணத்தால், ஒரு இடத்தில் வைத்து விநியோகிக்க இயலாத சூழலில் இரண்டு நாட்களாக கல்யாண் தமிழ் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள், அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று உணவு பொருட்கள் அடங்கிய பொதிகளை மக்களுக்கு விநியோகித்தனர்.
தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கிய மகாராஷ்டிரா மாநில தொழில் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் பொன். அன்பழகன் IAS அவர்களுக்கு கல்யாண் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் சார்பாகவும் கல்யாண் தமிழ் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இத்தகு சிறந்த நற்பணிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அலிசேக் மீரான் அவர்களுக்கும் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் மேற்சொன்ன உதவியைப் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்த தமிழ்நேசன் அவர்களுக்கும், உணவுப் பொருட்கள் கல்யாண் பகுதிக்கு வருவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அண்ணா கிரானா உரிமையாளர் சிவக்குமார் இராமச்சந்திரன் அவர்களுக்கும், பொருட்களை பாதுகாப்பாக வைக்க இடம் தந்து உதவிய Jehovah Nissi Chruch நிவாகத்திற்கும், கடந்த மூன்று நாட்களாக உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு தந்த கல்யாண் தமிழ் நற்பணி மன்றத்தின் துணைத் தலைவர் ம.மதியழகன், பொருளாளர் இ.பெருமாள், துணைச் செயலாளர் ரெங்கன், இமயக்குமார், Jehovah Nissi Chruch நிர்வாகி மணி, அருண்குமார், ராஜா, ஆட்டோ ஓட்டுனர் நிசாந்த் ஆகியோருக்கும்
கல்யாண் தமிழ் நற்பணி மன்றம் சார்பாக தமது நன்றிகளை மன்றச் செயலாளர் வே.சதானந்தன் தெரிவித்துக் கொண்டார்.
ஜோகேஸ்வரி-கிழக்கு பகுதியில் தமிழர் பேரவை பொருட்களை வினியோகித்தது
ஜோகேஸ்வரி-கி பிரேம் நகர் பகுதியிலும் தமிழ் குடும்பத்தினர் சிரமப்பட்டு வருவதை அறிந்து அலிசேக் மீரான் அவர்கள் கவிஞர் தமிழ்நேசன் வாயிலாக பொன் அன்பழகன் IAS அவர்களினால் வழங்கபட்டுவந்த நிவாரண பொருட்களை பெற்றுத்தந்தார்
அங்கும் பொன் அன்பழகன் IAS அவர்களினால் 200 உணவுப் பொதிகள் அனுப்பப்பட்டது.
பியுப்பிள்ஸ் வெல்ஃபேர் பள்ளியில் வைத்து தமிழர் பேரவையினர் இரண்டு நாட்களாக கன மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.
தமிழர் பேரவையின் துணைச் செயலாளர் தமிழினநேசன் அளித்த செய்தியில்:
நிவாரண பொருட்களை ஜோகேஸ்வரி பகுதி மக்களுக்கு வழங்கிய மகாராஷ்டிரா மாநில தொழில் வளர்ச்சி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி பொன்.அன்பழகன் IAS அவர்களுக்கும், எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்த மும்பை புறநகர் திமுக செயலாளர் அலிசேக் மீரான் உதவியைப் பெற்றுத் தந்த மும்பை புறநகர் திமுக இலக்கிய அணிச் செயலாளர் கவிஞர் தமிழ்நேசன் அவர்களுக்கும், உணவுப் பொருட்கள் வருவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அண்ணா கிரானா உரிமையாளர் சிவக்குமார் இராமச்சந்திரன் அவர்களுக்கும்
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தன்னுடன் இணைந்து உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய ரமேஷ், செய்யது பாய், நூர் பாய், சுந்தர் ஆகியோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.