20 Jan 2021 11:13 amFeatured
தென்னரசு மின்னிதழின் இலக்கியச் சோலை சார்பில் தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முப்பெரும் மெய்நிகர் விழா
17.01.2021 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு ஜூம் செயலி வழியே நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறந்த இலக்கியவாதியும், பட்டிமன்ற நடுவரும் ஓய்வுபெற்ற நல்லாசிரியர் விருது பெற்றவருமான மேகலாவருணன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தென்னரசு மின்னிதழின் புரவலர் ந.வசந்தகுமார் அவர்கள் அனைவரையும் வரவேற்புரையாற்ற, தென்னரசு முதன்மை ஆசிரியர் வே.சதானந்தன் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.
புலம் பெயர்ந்து வந்தாலும் மும்பையிலும் மக்கள் மனதில் வள்ளுவர் தீர்க்கமுர நிறைந்துள்ளார் என்பதை உலகுக்கு உணர்த்தும் நிகழ்வாக மும்பையில் வாழும் வள்ளுவம் என்ற தலைப்பில்
திருக்குறள் ஒலிபெயர்ப்பு நூல் குறித்து அதன் ஆசிரியர் கரூர் இரா பழனிச்சாமி அவர்களும்,
திருவள்ளுவர் சிலை - நவி மும்பை தமிழ்ச்சங்கம் குறித்து அச்சங்க பொருளாளர் கி.வெங்கடராமன் அவர்களும்,
திருவள்ளுவர் சிலை - பம்பாய் திருவள்ளுவர் மன்றம்,பாண்டுப் குறித்து இன்ஃபேன்ட் ஜீசஸ் ஆங்கில பள்ளி தலைமை ஆசிரியர் ஜெஸ்டினா ஜேம்ஸ் அவர்களும்,
திருவள்ளுவர் சிலை - நேஷ்னல் கல்வி குழுமம் குறித்து கவிஞர், ஆய்வாளர் பேராசிரியர்பிரபு முத்துலிங்கம் அவர்களும்,
வில்லேபார்லே திருவள்ளுவர் சதுக்கம் குறித்து அதன் அமைப்பாளரும் மனித நேய இயக்க ஒருங்கிணைப்பாளருமான சங்கர் திராவிட் அவர்களும் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.
எக்காலத்திற்கும் திருக்குறள் என்ற தலைப்பில் நிமிர் இலக்கிய வட்டத்தின் தலைவர் கவிஞர் பாபுசசிதரன் சிறப்பாக உரையாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார்
தென்னரசு மின்னிதழின் விளம்பர தொடர்பாளர் வீரை சோ. பாபு அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
நிகழ்வில் தமிழ் மற்றும் இலக்கிய ஆர்வலர்களும், மும்பை தமிழ் அமைப்பினர்களும் கலந்துகொண்டதோடு மட்டுமின்றி தமிழகத்திலிருந்தும், அமெரிக்கா, சுவிஸர்லாந்து போன்ற நாட்டில் வாழ்ந்துவருபவரும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது சிறப்புக்குரியதாகும்
இந்மெய்நிகர் நிகழ்வினை தென்னரசு மின்னிதழின், சிறப்பு ஆசிரியர் முனைவர் வதிலை பிரதாபன் அவர்களும், பொறுப்பாசிரியர் கவிஞர். இரஜகை நிலவன் அவர்களும் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
தென்னரசு மின்னிதழின் முப்பெரும் விழா Part-1 (மும்பையில் வாழும் வள்ளுவம்)
தென்னரசு மின்னிதழின் முப்பெரும் விழா Part-2 சிறப்புரை கவிஞர் பாபுசசிதரன்